நாராயணீயம
14 Posts • 8K views
*தேவீ நாராயணீயம்* *தசகம்-5* புதிய தொடர் பதிவு! 41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது. நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. *ஸீத்யும்ன கதா* 1) ஜாதா ஸுதேளா, மனுஸப்தமஸ்ய ஸம்ப்ரார்திதோ நேந, முனிர் வஸிஷ்டஹ சம்போ: கடாக்ஷேண ஸுதாம் குமாரம் சக்ரே; ஸ காலேன, பபூவ ராஜா பொருள்: மன்வந்த்ரம் என்றால் கால அளவு. கல்பம். அதாவது ப்ரம்மா ஸிருஷ்டிக்கும் காலம். ப்ரம்மாவின் சிருஷ்டி காலத்தில் அதாவது ப்ரம்மாவின் பகல் காலத்தில் 14 மன்வந்த்ரங்கள். அதில் 7 ஆவது மனு வைவஸ்வத மனு. இவர் தனக்கு ஸத் புத்திரன் வேண்டும் என தபஸ் செய்தார். குலகுருவான வஸிஷ்டரின் ஆலோசனைப்படி யக்ஜம் செய்தார். மனு புத்திரன் வேண்டும் என நினைத்தார். ஆனால் அவர் மனைவியோ புத்ரி வேண்டும் என நினைத்தாள். புத்ரி பிறந்தாள். அந்த பெண்ணின் பெயர் இளா. மனுவும் தனக்கு மகன் தான் வேண்டும் என வஸிஷ்டரிடம் சொல்ல அவரும் சிவனை த்யானித்து தன் தபோ சக்தியால் அந்த பெண்ணை ஆணாக மாற்றினார். ஆணின் பெயர் ஸுத்யும்னன். இளா ஸுத்யும்னனாக மாறினாள். 2) ஸுத்யும்னநாமா ம்ருகயா விஹாரீ கதோ ஹயாரூட, இளாவ்ருதம் ஸஹ ஸ்த்ரீத்வம் புன: ப்ராப்ய ஸுதம் ஹிமாம் சோர் வவ்ரே பதிம்; புத்ரமஸுத சைஷா பொருள்: ஒரு நாள் இவன் ஆண்குதிரையில் தன் சகாக்களுடன் வேட்டைக்குச் சென்றான். அங்கு இளாவ்ருதம் என்னும் ஒரு உத்யாவனத்தைக் கண்டு அங்கு மரங்கள் பூத்திருப்பதையும் குயில்கள் பாடுவதையும் கண்டு மகிழ்ந்து அதனுள் தன் குதிரை, சகாக்களுடன் உள்ளே நுழைந்தான். உடனே ஸுத்யும்னன் உள்பட அனைவரும், (குதிரை உள்பட) பெண்களாக மாறிவிட்டனர். தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #புராண கதைகள் #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் #நாராயணீயம
6 likes
12 shares
*தேவீ நாராயணீயம்* *தசகம்-4* புதிய தொடர் பதிவு! 41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது. நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. *மதுகைடப வதம்* 7) யுத்தம் குரு த்வம், ஜஹி தௌ, மயா ப்ருசம் ஸம்மோஹிதௌ, வக்ர, த்ருசே த்யயம் த்வயா ஸஞ்சோதிதோ ஹ்ருஷ்ட, மனா மஹார்ணவே தஸ்தௌ ரணாயா, யயதுச்ச தானவௌ பொருள்: தேவீ காட்சி தருகிறாள். "மாதவா! இப்பொழுது யுத்தம் செய். ஜயம் உண்டாகும்" என அனுக்ரஹம் செய்கிறாள். விஷ்ணு முஷ்டி யுத்தம் செய்கிறார். அஸுரர்களின் மீது அன்னை காம வலையை வீசுகிறாள். மோகம் கொண்ட அஸுரர்கள் வெறி கொண்டவர்கள் போல் தேவியைப் பார்த்து மயங்கி நிற்கின்றனர். சண்டையில் சளைக்கின்றனர். 8)பூயோபி குர்வன், ரணமச்யுதோ ஹசன் காமாதுரௌ தே, முகபத்ம தர்சனானு தாவா ஹ துஷ்டோ ஸ்ம்யதுலௌ ரணே யுவாம் ததாம்யஹம் வாம் வரமேஷ வாஞ்சிதம் பொருள்: சிறிது நேரம் யுத்தம் செய்கிறார்கள். உடனே தேவியின் சங்கீத கானத்தில் மயங்கி மோஹத்தில் மூழ்குகின்றனர். இந்த நல்ல சமயத்தைப் பயன்படுத்தி "உங்கள் வீரத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்" என்று விஷ்ணு சொல்கிறார். தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #நாராயணீயம #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் #புராண கதைகள்
9 likes
11 shares
*தேவீ நாராயணீயம்* *தசகம்-4* புதிய தொடர் பதிவு! 41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது. நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. *மதுகைடப வதம்* 5) ஞாத்வா ஹரீம் ச்ராந்த,முபௌ விதூரதஹ ஸம்தஸ்ததுர், விச்,ரமஸௌக்ய வாம்ஸ்ததஹ த்வாமேவ துஷ்டாவ, க்ருபா,தரங்கிணீம் ஸர்வேஸ்வரீம் தைத்ய - ஜயாய மாதவஹ பொருள்: அசுரர்களும் சரி என்று ஒத்துக் கொண்டு தூரத்தில் சென்று அமர்ந்து இளைப்பாறினர். விஷ்ணு யோசித்தார். இவர்களுக்கு ஏதோ வரம் கிடைத்திருக்கிறது. அதனால் தான் சண்டை செய்தாலும் இவர்களுக்கு மரணம் சம்பவிக்கவில்லை என யோசித்து தன் ஞான த்ருஷ்டியால் தேவியிடம் வரம் பெற்றதை அறிந்து கொண்டார். 6)தேவீ ப்ரஸீதைஷ, ரணே ஜிதோ ஸ்ம்யஹம் தைத்யத்வயேனாப், ஜபவம் ஜிகாம்ஸுனா; ஸர்வம் கடாக்ஷைஸ்தவ ஸாத்ய; மத்ர மாம் ரக்ஷே தி வக்தா, ரமபாஷதா ஹரீம் பொருள்: எவ்வளவு சண்டை செய்தும் இவர்கள் சளைக்கவில்லை. யுத்தம் செய்தால் யாருக்கு ஜயம் கிடைக்கும் எனத் தெரியவில்லை. அதனால் இவர்கள் மரணத்தை விரும்பும் படியான உபாயம் செய்ய வேண்டும். அதற்கும் தேவியின் அருள் வேண்டும் என்று அன்னையைத் துதிக்கிறார். தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #நாராயணீயம #🙏அம்மன் துணை🔱 #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #பக்தி கதைகள்
11 likes
13 shares
*தே³வீ நாராயணீயம் - த³ஶகம் 11* *ப்³ரஹ்மநாரத³ ஸம்வாத³ம் - ஸ்லோகம் 8* தைவேன மூடம், கவிமாத,னோதி ஸா; துர்பலம் து, ப்ரபலம் கரோதி; பம்கும் கிரீம் லங்க,யதேச; மூகம் க்ருபாவதீ சா, தனுதே ஸுவாசம் *தேவியின் சிறப்பும், பெருமையும், சக்தியும் ப்ரம்மாவிற்கு நன்கு தெரியும். அன்னையின் நகத்தில் அகில அண்டத்தையும் பார்த்தவர் அவர். மேலும் மதுகைடபர்கள் வதத்தில் அன்னையின் சக்தியை அறிந்து கொண்டவர். தேவி எந்த வேலையையும் அனாயாஸமாக செய்யக் கூடியவள். மூடனைப் பண்டிதன் ஆக்கவும், முடவனை நடக்கச் செய்யவும், ஊமையைப் பேசச் செய்யவும், குருடனைப் பார்க்க வைக்கவும் செய்யக்கூடியவள். பக்தருக்கு எது அசாத்யமோ அதைச் சாத்யமாக்கும் கிருபாவதி தேவி. அன்னையின் க்ருபையை அறிந்து கொள்ள நிறைய கதைகள் இருக்கின்றன.* 🚩🕉🪷🙏🏻 #நாராயணீயம #🙏அம்மன் துணை🔱 #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #பக்தி கதைகள்
10 likes
14 shares