ShareChat
click to see wallet page
*தேவீ நாராயணீயம்* *தசகம்-5* புதிய தொடர் பதிவு! 41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது. நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. *ஸீத்யும்ன கதா* 1) ஜாதா ஸுதேளா, மனுஸப்தமஸ்ய ஸம்ப்ரார்திதோ நேந, முனிர் வஸிஷ்டஹ சம்போ: கடாக்ஷேண ஸுதாம் குமாரம் சக்ரே; ஸ காலேன, பபூவ ராஜா பொருள்: மன்வந்த்ரம் என்றால் கால அளவு. கல்பம். அதாவது ப்ரம்மா ஸிருஷ்டிக்கும் காலம். ப்ரம்மாவின் சிருஷ்டி காலத்தில் அதாவது ப்ரம்மாவின் பகல் காலத்தில் 14 மன்வந்த்ரங்கள். அதில் 7 ஆவது மனு வைவஸ்வத மனு. இவர் தனக்கு ஸத் புத்திரன் வேண்டும் என தபஸ் செய்தார். குலகுருவான வஸிஷ்டரின் ஆலோசனைப்படி யக்ஜம் செய்தார். மனு புத்திரன் வேண்டும் என நினைத்தார். ஆனால் அவர் மனைவியோ புத்ரி வேண்டும் என நினைத்தாள். புத்ரி பிறந்தாள். அந்த பெண்ணின் பெயர் இளா. மனுவும் தனக்கு மகன் தான் வேண்டும் என வஸிஷ்டரிடம் சொல்ல அவரும் சிவனை த்யானித்து தன் தபோ சக்தியால் அந்த பெண்ணை ஆணாக மாற்றினார். ஆணின் பெயர் ஸுத்யும்னன். இளா ஸுத்யும்னனாக மாறினாள். 2) ஸுத்யும்னநாமா ம்ருகயா விஹாரீ கதோ ஹயாரூட, இளாவ்ருதம் ஸஹ ஸ்த்ரீத்வம் புன: ப்ராப்ய ஸுதம் ஹிமாம் சோர் வவ்ரே பதிம்; புத்ரமஸுத சைஷா பொருள்: ஒரு நாள் இவன் ஆண்குதிரையில் தன் சகாக்களுடன் வேட்டைக்குச் சென்றான். அங்கு இளாவ்ருதம் என்னும் ஒரு உத்யாவனத்தைக் கண்டு அங்கு மரங்கள் பூத்திருப்பதையும் குயில்கள் பாடுவதையும் கண்டு மகிழ்ந்து அதனுள் தன் குதிரை, சகாக்களுடன் உள்ளே நுழைந்தான். உடனே ஸுத்யும்னன் உள்பட அனைவரும், (குதிரை உள்பட) பெண்களாக மாறிவிட்டனர். தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #புராண கதைகள் #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் #நாராயணீயம
🙏அம்மன் துணை🔱 - சேவநாராய்பம் தசகம் 5 ஸீத்யும்னகதா சேவநாராய்பம் தசகம் 5 ஸீத்யும்னகதா - ShareChat

More like this