*தேவீ நாராயணீயம்*
*தசகம்-4*
புதிய தொடர் பதிவு!
41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது.
நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
*மதுகைடப வதம்*
5) ஞாத்வா ஹரீம் ச்ராந்த,முபௌ விதூரதஹ ஸம்தஸ்ததுர், விச்,ரமஸௌக்ய வாம்ஸ்ததஹ த்வாமேவ துஷ்டாவ, க்ருபா,தரங்கிணீம் ஸர்வேஸ்வரீம் தைத்ய - ஜயாய மாதவஹ
பொருள்: அசுரர்களும் சரி என்று ஒத்துக் கொண்டு தூரத்தில் சென்று அமர்ந்து இளைப்பாறினர். விஷ்ணு யோசித்தார்.
இவர்களுக்கு ஏதோ வரம் கிடைத்திருக்கிறது.
அதனால் தான் சண்டை செய்தாலும் இவர்களுக்கு மரணம் சம்பவிக்கவில்லை என யோசித்து தன் ஞான த்ருஷ்டியால் தேவியிடம் வரம் பெற்றதை அறிந்து கொண்டார்.
6)தேவீ ப்ரஸீதைஷ, ரணே ஜிதோ ஸ்ம்யஹம் தைத்யத்வயேனாப், ஜபவம் ஜிகாம்ஸுனா; ஸர்வம் கடாக்ஷைஸ்தவ ஸாத்ய; மத்ர மாம் ரக்ஷே தி வக்தா, ரமபாஷதா ஹரீம்
பொருள்: எவ்வளவு சண்டை செய்தும் இவர்கள் சளைக்கவில்லை.
யுத்தம் செய்தால் யாருக்கு ஜயம் கிடைக்கும் எனத் தெரியவில்லை.
அதனால் இவர்கள் மரணத்தை விரும்பும் படியான உபாயம் செய்ய வேண்டும்.
அதற்கும் தேவியின் அருள் வேண்டும் என்று அன்னையைத் துதிக்கிறார்.
தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #நாராயணீயம #🙏அம்மன் துணை🔱 #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #பக்தி கதைகள்
