*தேவீ நாராயணீயம்*
*தசகம்-4*
புதிய தொடர் பதிவு!
41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது.
நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
*மதுகைடப வதம்*
7) யுத்தம் குரு த்வம்,
ஜஹி தௌ, மயா ப்ருசம் ஸம்மோஹிதௌ, வக்ர, த்ருசே த்யயம் த்வயா ஸஞ்சோதிதோ ஹ்ருஷ்ட, மனா மஹார்ணவே தஸ்தௌ ரணாயா, யயதுச்ச தானவௌ
பொருள்: தேவீ காட்சி தருகிறாள். "மாதவா! இப்பொழுது யுத்தம் செய். ஜயம் உண்டாகும்" என அனுக்ரஹம் செய்கிறாள். விஷ்ணு முஷ்டி யுத்தம் செய்கிறார். அஸுரர்களின் மீது அன்னை காம வலையை வீசுகிறாள். மோகம் கொண்ட அஸுரர்கள் வெறி கொண்டவர்கள் போல் தேவியைப் பார்த்து மயங்கி நிற்கின்றனர். சண்டையில் சளைக்கின்றனர்.
8)பூயோபி குர்வன், ரணமச்யுதோ ஹசன் காமாதுரௌ தே, முகபத்ம தர்சனானு தாவா ஹ துஷ்டோ ஸ்ம்யதுலௌ ரணே யுவாம் ததாம்யஹம் வாம் வரமேஷ வாஞ்சிதம்
பொருள்: சிறிது நேரம் யுத்தம் செய்கிறார்கள். உடனே தேவியின் சங்கீத கானத்தில் மயங்கி மோஹத்தில் மூழ்குகின்றனர். இந்த நல்ல சமயத்தைப் பயன்படுத்தி "உங்கள் வீரத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்" என்று விஷ்ணு சொல்கிறார்.
தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #நாராயணீயம #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் #புராண கதைகள்
