Failed to fetch language order
Failed to fetch language order
🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏
747 Posts • 14K views
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ பரந்த காதுகளையுடைய யானையைக் கொன்று, அதன் உதிரப் பசுமை கெடாத தோலை உரித்துப் போர்த்து, கிள்ளிய பிரமன் தலையோட்டைக் கையில் ஏந்தி, தாருகாவன முனிவர் மகளிர் தம் கைகளால் இட்ட பிச்சையோடு ஐயம், உண்டி, என்று பலகூறப்பலியேற்ற மடப்பம் வாய்ந்த நீண்ட நீல மலர் போன்ற கண்களையுடைய உமையொரு பாகனாக உள்ள திருவாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்கள் பலவற்றால் அருச்சித்து அப்பெருமான் தாள்நிழலைச் சார்வோம். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
82 likes
32 shares
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #வாழ்வியல்பாடம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #👌புத்துணர்வு செய்தி👏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ திருநீறு அணிந்த மார்பினராய், வீரம் மிக்க விடை மீது ஏறி, பூதகணங்கள் புடைசூழ்ந்து வர, கொடிகள் கட்டிய ஊர்களில் திரிந்து பற்பல வாசகங்களைக் கூறிப்பலியேற்று, அழகிய வாள் போன்ற நெடிய கண்களையுடைய உமையொரு பாகராகிய சிவபிரானார் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று மணம் கமழும் சிறந்த மலர்களால் அருச்சித்து அக்கறைமிடற்றார் திருவடிகளைக் காண்போம். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
13 likes
16 shares
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ திருப்பாம்புர நன்னகர் இறைவர் தைத்த கோவண ஆடையை அணிந்து அதன் மேல் காற்றை உட்கொள்ளும் நல்ல பாம்பு ஒன்றைச் சுற்றிக் கொண்டு பின்னிய நீண்ட சடைகளைத் தாழ விட்டுக் கொண்டு, பித்தராய் ஆடித் திரியும் எமது பெருமான், அவர் மணம் நிறைந்த சிறந்த மலர்களைத் தூவி நாளும் நாம் வழிபட மலையரசன் மகளாகிய பார்வதியும், தாமுமாய்ப் புகழ்ந்து போற்றும் நான் மறைகளை அடியவர் பாடிக்கொண்டு வர, நம்முன் காட்சி தருபவர். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
11 likes
13 shares
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️ திருப்பாம்புர நன்னகர் இறைவர், கொக்கிறகு என்னும் மலர், வில்வம், ஊமத்தம்பூ, கொன்றை மலர், எருக்க மலர் ஆகியவற்றை அணிந்த சடைமுடியினர். சங்கு மணிகளோடு ஆமை ஓட்டைப் பூண்டு அழகாக அனலின்கண் ஆடும் எம் தலைவர். மிக்க நல்ல வேதவேள்விகளில் விண்ணோர்கள் மணம் கமழும் மலர்கள் தூவிப் போற்ற அருகில் பூதங்கள் பல பாடவும் வருபவர். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
13 likes
11 shares