🕉️ ஓம் நமசிவாய 🙏
359 Posts • 250K views
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #நலம் வாழ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #👌புத்துணர்வு செய்தி👏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ குளிர்ந்த பிறைமதியை அணிந்துள்ள சிவந்த சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானை அணுகியவருக்கு என்றும் அருள் உளதாம். பிணி முதலானவற்றைப் போக்கி அருள்புரியும் மணி போன்றவனாய் அப்பெருமான் மயிலாடுதுறையில் உள்ளான். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை மயிலாடுதுறை - தக்கராகம்.
15 likes
15 shares
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ பரந்த காதுகளையுடைய யானையைக் கொன்று, அதன் உதிரப் பசுமை கெடாத தோலை உரித்துப் போர்த்து, கிள்ளிய பிரமன் தலையோட்டைக் கையில் ஏந்தி, தாருகாவன முனிவர் மகளிர் தம் கைகளால் இட்ட பிச்சையோடு ஐயம், உண்டி, என்று பலகூறப்பலியேற்ற மடப்பம் வாய்ந்த நீண்ட நீல மலர் போன்ற கண்களையுடைய உமையொரு பாகனாக உள்ள திருவாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்கள் பலவற்றால் அருச்சித்து அப்பெருமான் தாள்நிழலைச் சார்வோம். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
82 likes
32 shares
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ திருமாலும் நான்முகனும் கைகளால் தொழுதேத்திக் காணவும் சாரவும் இயலாத எரி உரு ஆகியவனே என்றும், பல ஊர்களிலும் திரிந்து ஐயம், பிச்சை ஆகியவற்றை உண்பவனே என்றும் போற்றிப் பொறிகளோடு கூடிய பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனாகிய வாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்களைத் தூவி வழிபட்டு விகிர்தனாகிய அவன் சேவடிகளைச் சேர்வோம். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
15 likes
5 shares
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 சித்தரிடம் வெளிநாட்டவர் கேள்வி...!! இந்த உலகில் எந்தெந்த உயிரினங்கள் குட்டி போடுகின்றன? எந்தெந்த உயிரினங்கள் முட்டை இடுகின்றன? - இதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கு நிச்சயமாக அவரால் பதில் சொல்ல முடியாது. ஒரு வேளை சொன்னாலும்... நீண்ட பட்டியலே போட வேண்டியிருக்கும். முடிவிருக்காது... என்பது அவர்கள் யூகம். சித்தர் உடனே சிக்கனமாய் இரண்டே இரண்டு வரிகளில் பொருத்தமாய், பொறுமையாய் பதில் சொன்னார். "காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்", 'காதுகள் வெளியே தெரியாத உயிரினங்கள் எல்லாம் முட்டை இடும்'. போ போய் ஆராய்ச்சி செய்... என்றார். இயற்கையின் படைப்பு இப்படித்தானே உள்ளது. பிறப்பின் ரகசியத்தை இரண்டே வரிகளில் சொன்ன அந்த அறிவை, ஞானத்தைக் கண்டு கேட்டவரும், அவன் கூட்டிய கூட்டமும் அதிர்ந்து போயினர். சித்தர்கள் என்போர் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளைப் பெற்றவர்கள். இவர்கள் மரண பயத்தை வென்றவர்கள் என்றும், ஆன்மிகம் மற்றும் தமிழ் மருத்துவத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்கள். அகத்தியர், திருமூலர், போகர் போன்ற பதினெண் சித்தர்கள் புகழ்பெற்றவர்கள். "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.
4 likes
14 shares