புராண கதைகள்
985 Posts • 2M views
*தேவீ நாராயணீயம்* *தசகம்-5* புதிய தொடர் பதிவு! 41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது. நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. *ஸீத்யும்ன கதா* 1) ஜாதா ஸுதேளா, மனுஸப்தமஸ்ய ஸம்ப்ரார்திதோ நேந, முனிர் வஸிஷ்டஹ சம்போ: கடாக்ஷேண ஸுதாம் குமாரம் சக்ரே; ஸ காலேன, பபூவ ராஜா பொருள்: மன்வந்த்ரம் என்றால் கால அளவு. கல்பம். அதாவது ப்ரம்மா ஸிருஷ்டிக்கும் காலம். ப்ரம்மாவின் சிருஷ்டி காலத்தில் அதாவது ப்ரம்மாவின் பகல் காலத்தில் 14 மன்வந்த்ரங்கள். அதில் 7 ஆவது மனு வைவஸ்வத மனு. இவர் தனக்கு ஸத் புத்திரன் வேண்டும் என தபஸ் செய்தார். குலகுருவான வஸிஷ்டரின் ஆலோசனைப்படி யக்ஜம் செய்தார். மனு புத்திரன் வேண்டும் என நினைத்தார். ஆனால் அவர் மனைவியோ புத்ரி வேண்டும் என நினைத்தாள். புத்ரி பிறந்தாள். அந்த பெண்ணின் பெயர் இளா. மனுவும் தனக்கு மகன் தான் வேண்டும் என வஸிஷ்டரிடம் சொல்ல அவரும் சிவனை த்யானித்து தன் தபோ சக்தியால் அந்த பெண்ணை ஆணாக மாற்றினார். ஆணின் பெயர் ஸுத்யும்னன். இளா ஸுத்யும்னனாக மாறினாள். 2) ஸுத்யும்னநாமா ம்ருகயா விஹாரீ கதோ ஹயாரூட, இளாவ்ருதம் ஸஹ ஸ்த்ரீத்வம் புன: ப்ராப்ய ஸுதம் ஹிமாம் சோர் வவ்ரே பதிம்; புத்ரமஸுத சைஷா பொருள்: ஒரு நாள் இவன் ஆண்குதிரையில் தன் சகாக்களுடன் வேட்டைக்குச் சென்றான். அங்கு இளாவ்ருதம் என்னும் ஒரு உத்யாவனத்தைக் கண்டு அங்கு மரங்கள் பூத்திருப்பதையும் குயில்கள் பாடுவதையும் கண்டு மகிழ்ந்து அதனுள் தன் குதிரை, சகாக்களுடன் உள்ளே நுழைந்தான். உடனே ஸுத்யும்னன் உள்பட அனைவரும், (குதிரை உள்பட) பெண்களாக மாறிவிட்டனர். தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #புராண கதைகள் #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் #நாராயணீயம
6 likes
12 shares
*தேவீ நாராயணீயம்* *தசகம்-4* புதிய தொடர் பதிவு! 41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது. நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. *மதுகைடப வதம்* 7) யுத்தம் குரு த்வம், ஜஹி தௌ, மயா ப்ருசம் ஸம்மோஹிதௌ, வக்ர, த்ருசே த்யயம் த்வயா ஸஞ்சோதிதோ ஹ்ருஷ்ட, மனா மஹார்ணவே தஸ்தௌ ரணாயா, யயதுச்ச தானவௌ பொருள்: தேவீ காட்சி தருகிறாள். "மாதவா! இப்பொழுது யுத்தம் செய். ஜயம் உண்டாகும்" என அனுக்ரஹம் செய்கிறாள். விஷ்ணு முஷ்டி யுத்தம் செய்கிறார். அஸுரர்களின் மீது அன்னை காம வலையை வீசுகிறாள். மோகம் கொண்ட அஸுரர்கள் வெறி கொண்டவர்கள் போல் தேவியைப் பார்த்து மயங்கி நிற்கின்றனர். சண்டையில் சளைக்கின்றனர். 8)பூயோபி குர்வன், ரணமச்யுதோ ஹசன் காமாதுரௌ தே, முகபத்ம தர்சனானு தாவா ஹ துஷ்டோ ஸ்ம்யதுலௌ ரணே யுவாம் ததாம்யஹம் வாம் வரமேஷ வாஞ்சிதம் பொருள்: சிறிது நேரம் யுத்தம் செய்கிறார்கள். உடனே தேவியின் சங்கீத கானத்தில் மயங்கி மோஹத்தில் மூழ்குகின்றனர். இந்த நல்ல சமயத்தைப் பயன்படுத்தி "உங்கள் வீரத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்" என்று விஷ்ணு சொல்கிறார். தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #நாராயணீயம #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் #புராண கதைகள்
9 likes
11 shares
தெவிட்டாத விட்டலா - 9 குழந்தையும் தெய்வமும்! 🌼🌼🌼🌼🌼🌼 ரொம்ப சின்ன பெண் ஒருவளை உங்களுக்கு இந்தக் கதையில் அறிமுகப்படுத்துகிறேன்.. அவள் யார்? பெயர் என்ன? அவள் பெற்றோர் யார்? எங்கிருந்து வந்தவள்? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலே தெரியாது. பின் என்னதான் தெரியும் என்றால் அவள் பண்டரிநாதன் சந்நிதியிலேயே வசித்தாள் என்ற ஒரே விஷயம் தான். அவன் நிழலில், அவன் தந்த பிரசாதத்திலேயே உயிர் வாழ்ந்தாள். அங்கு ஒலிக்கும் விட்டலன் பஜனையில் தனை மறந்து ஆடுவாள். கூட சேர்ந்து பாடுவாள். இது பல நாள் நடந்தும் ஒருவரும் அவளைப் பற்றி எந்த அக்கறையும் ஆதரவும் விருப்பு வெறுப்போ காட்டவில்லை. நாமதேவர் பற்றி நிறைய இனி சொல்லப்போகிறேன். பாண்டுரங்கன் என்று சொல்லும்போது நாமதேவர் பெயர் சொல்லாமலே இருக்க முடியாதே. அடிக்கடி பண்டரிபுரத்தில் விட்டலனை தரிசித்துவிட்டு விட்டல நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடுபவர். அவர் எப்போதெல்லாம் ஆலயத்தில் இருக்கிறாரோ அன்றெல்லாம் அப்போதெல்லாம் கூட்டம் நிரம்பி வழியும். பக்தர்கள் ஆனந்த பரவசமாக அவரது நாம சங்கிர்த்தனத்தில், பாடும் அபங்கத்தில், தன்னிலை மறந்து சுகானுபவத்தில் வாழ்வார்கள். மிக சிறப்பாக அமைந்தது அன்று நாமதேவரின் விட்டல் பஜன். மணிக்கணக்காக நடந்த அந்த பஜனை முழுதும் தாளத்துக் கேற்ற வகையில் அந்த சிறுமி ஆடினாள். கூடவே வாங்கி பாடினாள். அவளுடைய பக்தி பூர்வமான ஈடுபாடு நாமதேவரை ரொம்பவே ஈர்த்தது. பஜனை முடிந்ததும் தன் கையாலேயே அந்த குழந்தையின் சிரசை தடவி அவளுக்கு விட்டலன் பிரசாதம் வழங்கினார் "குழந்தே, நீ யாரம்மா?" "நீங்க சொன்ன ஒரு குழந்தை தான்? "எந்தவூர்?" "பாண்டுரங்கன் இருக்கும் இடமெல்லாம் என் ஊர். தனியாக எந்த ஊரும் இல்லை" "உனது பெற்றோர்கள் யார் எங்கிருக்கிறார்கள்?" "என்னைப் பெற்றவன் பாண்டுரங்கன். அவன் இந்த ஊரில்தான் இருக்கிறான்!" "உனது வீடு எங்குள்ளது. யாருடன் வசிக்கிறாய்?" "வீடு இந்த கோவிலே. பாண்டுரங்கனுடன் தான் வசிக்கிறேன்". "உன் பெயர் என்ன குழந்தே?" "பாண்டுரங்கன் வைத்த பெயர் ஜனா பாய்" இந்த சிறு வயதில் இத்தனை பக்தியா?? பிரமித்தார் நாமதேவர். "என்னோடு வருகிறாயா? உனக்கு நிறைய நாம சங்கீர்த்தனமேல்லாம் சொல்லித் தருகிறேன்." "தாரளமாக" அன்று முதல் ஜனா பாய் நாமதேவர் மகளாக வளர்ந்தாள். நாமதேவருடன் சேர்ந்து பூஜை செய்தாள். அவருடன் பாடினாள் அவர் பஜனைக்கு ஆடினாள். அவரது நிழலாக தொடர்ந்தாள். அவருக்கு எல்லா பணிவிடைகளும் செய்தாள். அவளது நினைவு, மூச்சு, கனவு எல்லாமே பாண்டுரங்கன், பாண்டுரங்கன், பாண்டுரங்கனே! . இயற்கையிலேயே அந்த இளம் வயதிலும் முதிர்ந்த விட்டல பக்தி கொண்ட அந்த சிறுமியை போற்றினார் நாமதேவர். அவளுக்கு தன்னுடைய பக்தி பூர்வ அபங்கங்கள், பஜனைகள் எல்லாம் சொல்லிக்கொடுத்தார் . விட்டலன் அந்த இருவரையும் தன்னிரு கண்களாக பாவித்ததில் என்ன ஆச்சர்யம்? ஒரு நாள் கொட்டு கொட்டு என்று கொட்டியது மழை. நிற்கவேயில்லை. நாமதேவர் இருந்த மண் வீடு வெள்ளத்தில் மூழ்கி கரையும் நிலை. பாண்டுரங்கனே கொட்டும் மழையில் அவர்கள் இருவரும் வசித்த மண் குடிசைக்கு வந்தான். நாமதேவர் ஸ்ரீமத் பாகவதம் ஸ்லோகங்களை ஒரு சிறு அகல் விளக்கின் ஒளியில் ரசித்து படித்து கொண்டிருந்தார். ஜனா பாய் அதை ஆனந்தமாக கேட்டு கொண்டே ஒரு கல் இயந்திரத்தில் மாவு அரைத்து கொண்டிருந்தாள். அன்று இரவு அந்த மாவில் செய்த ரொட்டியே விட்டலனுக்கு நெய்வேத்யமான பிறகு அவர்களது உணவு. வேறொன்றுமே இல்லை அன்று அந்த ஏழை பக்தர் வீட்டில். விட்டலன் வரவால் மண் வீடு கரையாமல் வெள்ளத்தில் மூழ்கி அடித்து செல்லப்படாமல் தப்பித்தது. "வா பாண்டுரங்கா, வா! எதற்கப்பா இந்த கொட்டும் மழையில் நனைந்து வந்தாய்?" "என்னவோ உங்களைப் பார்த்து அளவலாவலாமே என்று ஒரு ஆர்வம். மழையை லட்சியம் செய்யவில்லை." ஒரே ஒரு வஸ்த்ரம் தான் இருந்தது நாமதேவரிடம். அதைக் கொடுத்தார். அதால் தன்னை துடைத்து கொண்ட விட்டலன் தனது ஈர உடையை களைந்து மாற்றுடை ஏதாவது இருக்கிறதா என்று தேடியதில் ஜனாபாயுடைய உடை ஒன்று கண்ணில் பட அதையே உடுத்திக் கொண்டான். ஜனா பாய் பாண்டுரங்கன் வரவால் மிக்க மகிழ்ந்தாள். விட்டலனும் நாமதேவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஜனா பாய் விட்டலன் தன்னோடு பேசமாட்டானா என்று ஏங்கினாள். அவள் மனதை புரிந்து கொண்டவன் போல விட்டலன் எழுந்து அவளிடம் சென்றான். அவளருகில் தரையில் அமர்ந்து அவளிடமிருந்து அந்த கல் இயந்திரத்தை விலக்கி தானே மாவை அரைத்தான். எல்லா மாவும் அரைத்து தீர்த்த பிறகு மூவரும் ரொட்டி தயார் செய்து மிக்க மகிழ்ச்சியோடு பாண்டுரங்கன் அவர்களோடு உணவை பகிர்ந்து கொண்டான். விட்டலன் அடிக்கடி அவர்கள் இல்லம் வந்தான். ஜனா பாய் இப்போதெல்லாம் மிக அழகாக பக்தி பூர்வமான அபங்கங்கள் இயற்றினாள். அவள் மனம் எப்போதும் பாண்டுரங்கனோடு ஒன்றி இருந்ததாலும் நாமதேவரின் அருளாலும் பயிற்சியாலும் சிறந்த காவியங்கள் உருவாயின. விட்டலனே அவள் சொல்ல சொல்ல அவற்றை எழுதினான் சில சமயம். . எப்படிப்பட்ட பெண் பார்த்தீர்களா ஜனா பாய்? தனது வாழ்க்கையினால் அவள் நமக்கு சொல்லாமல் சொல்லும் அறிவுரை என்னவாக இருக்க முடியும்? எல்லாம் அவனே, அவனன்றி ஒரு அணுவும் இல்லை, இருந்தாலும் அது அவனன்றி இம்மியும் அசையாது, நமக்கு ஏன் ''என்னால் தான் எதுவும் நடக்கும் என்ற எண்ணம்? அவன் நினைப்பதே என் செயல்'' என்ற சரணாகதித்வம் நமக்கு தேவை. இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் #புராண கதைகள்
14 likes
4 shares
தெவிட்டாத விட்டலா - 8 சேட்டு வந்தார் 🌼🌼🌼🌼🌼🌼🌼 ஒருவரது வாழ்க்கை மற்றவர்களால் நினைவு கூறப்படுகிறது என்பது எதனால்? அவரிடம் எல்லோரும் போல் அல்லாது ஏதோ ஒரு சிறப்பு தன்மை இருந்து அது அவரால் வெளிப்படுத்தப் படுவதால் தானே?! அது பணத்தால், அழகால், எளிமையால், த்யாகத்தால் என்றெல்லாம் பலவகைப் படலாம். நாமதேவர் வாழ்க்கை நம்மால் சிறப்பாக நினைக்கப் படுவது அவரது எளிமையான, பரிசுத்தமான, சிம்பிள், பக்தியினால் தான். உள்ளத்தை கபடு இன்றி பரிசுத்தமான பீடமாக மாற்றி அதில் விட்டலனை பரிபூர்ணமாக ஏந்தி, தோழனாக, ஆசானாக, சகலமும் நீயே என்ற சரணாகதித்வமுடன் வாழ்ந்த தன்மையால் தான். சரி, கதைக்கு வருவோம். நாமதேவர் இப்போது இளைஞர். ராஜாய் அவர் மனைவியானாள். கல்யாணமாகி விட்டதால் அவர் ஒன்றும் மாறிவிடவில்லை. 24 மணி நேரமும் பாண்டுரங்கன்தான், அவன் கோவில் தான், அவன் பக்தர்கள் கூட்டம்தான். நாம சங்கீர்த்தனம் ஒன்றே மூச்சு. அவருக்கு ஒரு மகன். நாராயணன் என்று பேர். வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த அப்பா தாமாஜி காலமாகி விட்டதால் அம்மா கோனை, மனைவி, குழந்தை ஆகியோரும் நாமதேவரின் வருமானத்தையே நம்பி வாழ்ந்த போதிலும் நாமதேவர் இதெல்லாம் பற்றி ஸ்மரணையே இல்லாமல் இருந்தாரே!! உடுக்க உடையோ ஒருவேளை உணவோ கூட இல்லாத நிலைமை. மனைவி ராஜாய் அவர் தாய் கோனை அனைவரும் வருந்தி "விட்டலா, நீயாவது எதாவது செய்யேன். நாமதேவரைக் கொஞ்சம் எங்களைப் பற்றியும் நினைக்கச் செய்யேன் வேறே கதியின்றி நிற்கிறோமே" என்று அழுதனர். ரெண்டு மூணு நாள் கழித்து பண்டரிபுரத்துக்கு ஒரு வேற்று ஊர்க்காரர் வந்தார். அவர் பெயர் கேஷவ் சேத். பணக்கார சேட்டு. விட்டலன் கோயில் சென்று பார்த்து விட்டு நாமதேவர் வீட்டுக்கு வந்தார். வீட்டில் ராஜாய் மட்டும் தான் இருந்தாள். "இது தானே அம்மா நாமதேவர் வீடு? "ஆம். ஆனால் அவர் இல்லையே" நீங்கள் யார்? "நான் அவர் நண்பன். கேசவ் சேத். அவரைத்தான் பார்க்க வந்தேன்" "சாயந்திரமாக வந்தால் அவரை பார்க்கலாம்" "ஏதாவது சாப்பிட இருக்கிறதா?" "அய்யா, எங்களுக்கே ஆகாரத்துக்கு வழியில்லை. நாமதேவர் ஊரிலுள்ள சாதுக்களை அழைத்து வந்து உணவு கேட்கும் போது என்ன செய்வது என்பதே கவலையா யிருக்கிறதே" "அம்மா இது விஷயமாகத்தான் நான் அவரைப் பார்க்க வந்தேன். அவருக்கு ஊரெல்லாம் கடன் இருக்கிறது. கடனுக்கு சாமான் வாங்கி உணவு படைத்து சாதுக்களை திருப்தி படுத்துகிறார் ஆனால் வீட்டிலிருப்பவர்களின் ஞாபகம் கூட கிடையாது என்று கேள்விப்பட்டேன். அதனாலேயே அவருக்கு உபயோகமாயிருக்கட்டும் என்று இந்த பை நிறைய தங்கக் காசுகள் கொண்டுவந்தேன். இந்தாருங்கள் இதை அவரிடம் சேர்ப்பியுங்கள்". பை கை மாறியது. "உள்ளே வாருங்கள் தீர்த்தமாவது சாப்பிடுங்கள்." "பரவாயில்லை அம்மா. நான் வருகிறேன்" சேட்டு நகர்ந்தார் நாமதேவரின் தாய் கோனை எங்கோ சென்று கொஞ்சம் அரிசி பருப்பு கடன் வாங்க சென்றவள் அது கிடைக்காமல் வருத்ததோடு விட்டலன் ஆலயம் சென்று கண்களில் நீர் பெருக குமுறினாள்: "விட்டலா, இன்னும் எத்தனை நாள் எங்களை இப்படி வாட்டி வதைக்கப் போகிறாய்?" அங்கே அமர்ந்து பக்தர்களோடு பாடிக் களித்துகொண்டிருந்த நாமதேவைச் சபித்து வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தாள். வீட்டு வாசலிலேயே உள்ளிருந்து கமகமென்று மணம் மிக்க உணவுப் பண்டங்களின் வாசனை. குழந்தையும் ராஜாயியும் நல்ல உடை அணிந்திருந்தனர். அவர்கள் மேல் நகை ஆபரணங்களும் மின்னிற்று. இதை கவனித்த நாமதேவர் "எதற்கு இந்த வழக்கமில்லாத பகட்டும் ஆடம்பரமும்'' என்று வருந்தினார் "ஏது இதெல்லாம்? என்று கேட்டபோது "எனக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்றாள் தாய். ராஜாய் பதிலே பேசவில்லை. அவள் அவரோடு பேசியே எத்தனையோ காலம் ஆச்சே!! . வீட்டில் உதவி செய்துகொண்டிருந்த ஜானி என்ற பணியாளன் விவரம் எல்லாம் சொன்னான் "விட்டலா, ஏன் என்னை மாற்றிவிட சோதனை செய்கிறாய்? . நீ கொண்டு வந்ததெல்லாம் உன் பக்தர்களுக்கல்லவோ போய் சேரவேண்டும் என்று அனைத்து பொருள்களையும் ஆலயத்துக்கு எடுத்து சென்று எல்லாருக்குமாக தானம் செய்தவர் நாமதேவர். இப்படி ஒருவரை நாம் பார்க்கமுடியுமா? முடியுமே, யார் யார் எல்லாம்? என்று வரும் கதைகளே சொல்லட்டும். இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #ஆன்மீக கதைகள் #பக்தி கதைகள் #புராண கதைகள்
11 likes
13 shares