பஸ் விபத்து#
67 Posts • 1M views
Rekhas
2K views 13 days ago
தென்காசி மாவட்டம் இடைக்கால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இதுவரை 5 பெண்கள் உட்பட 8 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. மேலும் இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். தமிழகத்தில் ஏழை, எளிய சாமானிய மக்கள் தான் பேருந்துகளில் அதிகம் பயணிக்கின்றனர் பேருந்துகளில் பயணிக்கின்ற பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. எட்டு உயிர்களை பறித்துள்ள இரு தனியார் பேருந்துகளையும் அதிவேகமாக இயக்கியதால் தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே தனியார் பேருந்து நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடனும் கவனமுடனும் பேருந்துகளை இயக்க வேண்டும் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மனித உயிர்கள் விலைமதிப்பற்றது என்பதை மனதில் வைத்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விரைந்து கண்டறிந்து மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். தென்காசி கோர விபத்து - அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் இரங்கல் 😢🙏🏻 #Puratchithaai #Chinnamma #AIADMK #JayaPlus #டாக்டர்நமதுஎம்ஜிஆர் ஒருங்கிணைந்த அஇஅதிமுக கழகப் பணியில்...... #புரட்சித்தாய்சின்னம்மாஆர்மி 🌾🖤🤍❤️🌱✌️🌾 #தென்காசி #பஸ் விபத்து# #📰தமிழக அப்டேட்🗞️ ##🖤🤍♥️அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித் தாய் திருமதி சின்னம்மா அவர்கள் #🌱அஇஅதிமுக
14 likes
13 shares