கடலில் விழுந்த மழையாக...
மேகங்கள் தமது சுமையை இறக்கும்போது அது மழையாகிறது. அதனால் யாருக்கு இலாபம், யாருக்கு நஷ்டம் என்பதைப் பற்றிய கவலை அதற்கில்லை.
ஒரு படைப்பாளியின் மனதில் மேகங்களாகத் திரண்டவை படைப்பெனும் மழையாகிறது. சில சமயங்களில் அதற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆறிய பழங்கஞ்சி என்பதைப்போல காலப்போக்கில் அது சேரவேண்டிய மக்களை சேராமலேயே பழசாகி விடுகிறது.
காலங்கடந்த காலத்தில் -
சில படங்களைப் பார்க்கும்போது...
சில பாடல்களை ரசிக்கும்போது...
சில கதைகளைப் படிக்கும்போது...
இவையெல்லாம் ஏன் தோற்றன என்ற நமது கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை! அவை தோற்கவில்லை. அது ஆடாமலே தோற்ற கதை. அவையெல்லாம் கடலில் விழுந்த மழைக்கும் காற்றில் கரைந்த கற்பூரத்திற்கும் ஒப்பானவை!
ஆனால், ஒரு படைப்பாளிக்கு ஓய்வு என்பது இல்லை. மழை என்பது மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கும். அது சரியான நிலத்தில் சரியான காலத்தில் விழும்போது அதனால் உயிர்களுக்குப் பலன் கிடைக்கிறது.
மழைக் காலங்களில்கூட பல சமயங்களில் மழை எப்போது விழும் எங்கே விழும் என்று அறுதியிட்டுக்கூற முடிவதில்லை. வறட்சியும் செழிப்பும் நாணயத்தின் இருபக்கங்களைப் போல எனலாம்.
வெற்றி என்பது பொதுவுடமை இல்லை. எல்லோராலும் எத்தனையோ காரணங்களால் வெல்ல முடிவதில்லை.
வாசிப்பது நம் வழக்கமாகட்டும். படைப்பாளிகளின் சிறந்த படைப்புக்கள் மக்களைச் சென்று சேரட்டும், அவற்றுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கட்டும்! அதுவே வாசகர்களுக்கும் வெற்றி படைத்தவர்களுக்கும் வெற்றி!
Video courtesy: Ahmed Abd Allah - Pexels
"நினைவலைகள் ஓய்வதில்லை"
@ அமேசான் KDP
#🚹உளவியல் சிந்தனை #கதை #கவிதை