🌈 rainbowstorys 🌈
597 views • 12 hours ago
நேசம் என்னிடம் - 5
குரு வேகமாக எழுந்து ஓடி வந்து "மல்லி மா... மல்லி மா..."என்று கத்த...
சத்தம் வராமல் போக... மறுபடியும் உள்ளே வந்து இஷா வை பார்க்க...
இஷா எந்த ஒரு அசைவும் இல்லாம இருந்தாள்...
குரு மெதுவாக அவளை நோக்கி நடந்து வந்து "நீ மறுபடியும் வருவ இஷா... எனக்கு நம்பிக்கை வந்துருச்சு... வம்சி பைத்தியம் மாதிரி பண்றான் னு நினைச்சேன்... அவனுக்கு தெரிஞ்சு இருக்கு...ஆனால் தான் அவே இப்படி எல்லாம் பண்றான்..."என்று அவள் மடியில் தலை வைத்து "இஷா நீ எப்பவும் என் தலை முடிய கோத்தி விடுவ ல..."என்று அவள் கையை எடுத்து தன் தலையில் வைத்தான்...
அப்படியே அவன் உறங்கி விட... நேரம் கழித்து வந்த வம்சி இஷா மடியில் தூங்கும் குரு வை புன்னகைத்து சென்றான்...
குரு தூக்கம் கலைந்து எழுந்து பார்க்க... அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருக்க...
எழுந்து விளக்கை போட்டு மணியை பார்க்க...
நடுநிசி 1 மணி...
குரு :"ச்சை இங்கேயே தூங்கிட்டேனா..."என்று 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️ தலையில் அடித்து "அய்யோ வம்சி..."என்று வேகமாக வெளியே வர...
வம்சி sofa வில் தூங்கி கொண்டு இருந்தான்...
குரு சிரித்து கொண்டு bedsheet ஐ எடுத்து வந்து வம்சி மேல் பொர்த்தி விட்டு உள்ளே செற்று இஷா தூங்கி 🛌🏻🛌🏻🛌🏻கட்டில் படுக்க வைத்து வெளியே வந்து sofa பக்கத்தில் கீழே படுத்து கொண்டான்....
வம்சி குரு தோளிலை பிடித்து உலுக்க... மெதுவாக கண் திறந்து பார்த்தான்...
வம்சி :Good morning...
குரு : "Good morning வம்சி..."என்று எழுந்து அமர்ந்தான்...
வம்சி : நீ என்ன டா கீழ படுத்து இருக்க...
குரு : நீ எப்போ வந்த...
வம்சி : 9 மணிக்கு...
குரு : எங்க போன...
வம்சி : சும்மா ஒரு walk...
குரு : சரி எனக்கு ஒரு coffee...
வம்சி :"ம்ம்ம்..."என்று எழுந்து செல்ல...
குரு fresh ஆகி வர... வம்சி cup உடன் வந்தான்...
வம்சி : இந்தா... அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்... அம்மா call பண்ணாங்க டா...
குரு : எப்போ டா...
வம்சி : 6 மணி இருக்கும்...
குரு :"6 ஹ..."என்று மணியை பார்க்க...
7 மணி...
குரு : எதுக்கு டா...
வம்சி : அம்மா ஊருக்கு போறாங்களாம்...
குரு : எங்கவாம்...
வம்சி :"உன் மா..."என்று யோசித்து விட்டு "ம்ஹீம் மாமா னு சொன்னா வாயிலேயே மிதிப்பான்... எதுக்கு வம்பு..."
குரு : டேய் என்ன டா...
வம்சி : அவங்க அண்ணா வீட்டு...
குரு அவனை முறைக்க...
வம்சி :என்னைய எதுக்கு டா முறைக்கிற...
குரு : அவங்களுக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை...
வம்சி : உனக்கு ஏன் டா அவரு மேல் இவ்ளோ கோவம்...
குரு : அந்த அந்தாளு மட்டும் அன்னக்கி எங்களை கை விடாம இருந்திருந்தா... இந்நேரம் என் அப்பா உசுரோட இருந்திருப்பாரு... என் அப்பா என்னைய விட்டு போகும் போது எனக்கு பத்து வயசு... எனக்கு இப்ப கூட நல்லா ஞாபகம் இருக்கு...
என் அப்பாவுக்கு உடம்பு முடியாம hospital ல வச்சு இருந்தோம்... அப்போ ரொம்ப கஷ்டம்... அந்தாளு கிட்ட உதவி கேட்டு நின்றோம்... ஆனா என்ன பண்ணா னு தெரியுமா டா... நானே இப்ப கஷ்டத்துல தான் இருக்கேன்... இப்ப வந்து பணம் கேட்டா நா எங்க மா போவேன் னு சொன்னாரு...
நாங்களும் அது உண்மை னு நினைச்சு கிளம்பிட்டோம்... அந்தாள பத்தி நா தெரிஞ்சுக்கனும் தான் அப்படி நடந்துச்சா னு தெரியல...எனக்கு தாகம் தண்ணி குடிக்க அங்க போனேன்... அந்தாளு அங்க இருந்த ஒருத்தன் கிட்ட ஒரு பை ய கொடுத்து எனக்கு வெளிய வேலை இருக்கு...
இதுல அஞ்சு லட்சம் பணம் இருக்கு... அக்கா கிட்ட கொடு... நா வெளிய போயிட்டு வரேன்... கூட இருந்தவே என்னய்யா தங்கச்சி வந்து கேட்டப்போ பணம் இல்ல னு சொன்னீங்க னு கேட்டான்...
ஆமா இல்ல னு தான் சொன்னேன்... அவ கிட்ட பணத்தை கொடுத்து நா எங்க போறது... எனக்கு னு ஒரு குடும்பம் இருக்கு ல... தங்கச்சி கிட்ட பணத்தை கொடுத்து எப்படி நா கேட்பேன்...
கூட பொறந்த தங்கச்சிக்காக பணத்தை இழக்க நா தயாரா இல்ல... யாரு எப்படி போனா எனக்கு என்ன... நா என் பொண்டாட்டி என் பொண்ணு நல்லா இருக்கனும்...அவ்ளோ தான்...
வம்சி ஆதரவாக அவன் தோளில் கை வைக்க...
குரு 😭😭😭கண்ணீர் வடிய "சொந்தத்தை வெறுத்துட்டேன் டா... அங்கே இருந்து போறதுக்கு அப்பறும் என் அப்பா இறந்துட்டாரு... என் அம்மாக்கு இது எதுவுமே தெரியாது... அந்தாள வெறுத்துட்டேன் டா..."என்று அவனை கட்டி கொண்டு அழ...
வம்சி : குரு அழாத டா...
குரு : அம்மாக்கு தெரிஞ்சா மனசு உடைஞ்சு போயிடு டா... அதனால் தான் என் மனசுக்குள்ளே வச்சு இருக்கேன்... அவங்களும் பல தடவ கேட்டாங்க... நா சொல்லல... உன் கிட்ட மட்டும் தான் சொல்லி இருக்கேன்...
வம்சி : அந்த பொண்ணு மட்டும் எப்படி டா...
குரு : அந்தாளு பண்ண தப்புக்கு அவ என்ன பண்ணுவா... அப்போ அவளுக்கு மூனு வயசு தான்... ஏன் என் அத்தைக்கு கூட தெரியாது...
வம்சி : அப்போ நீ...
குரு : "டேய் டேய் விடு... தேவை இல்லாம அந்தாள பத்தி பேசிக்கிட்டு.."என்று எழுந்து நகர்ந்து ஏதோ யோசித்தவாறு திரும்பி "வம்சி இஷா நம்ம பேசுறதுக்கு response பண்றாளா..."என்று கேட்க...
வம்சி தலையை ஆட்ட...
குரு : இத ஏன் டா என் கிட்ட சொல்லல...
#கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #தன்னம்பிக்கை கதைகள் #💪ஊக்குவிக்கும் கதைகள் #கதை
10 likes
7 shares