🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
1K Posts • 9M views
Arab Tamil Daily
582 views 23 hours ago
குவைத்தில் மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் இன்று சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தனர்: குவைத்தின் அல்-ராய் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று(09/12/25) செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த ஷுவாய்க் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த துயரமான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுடைய உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் கட்டிடத்தின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தலைமையில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்த தொழிலாளர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
9 likes
7 shares