
Arab Tamil Daily
@arabtamildaily
|No.1 Tamil News Updater From Gulf|350K+Followers|
குவைத்தில் மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் இன்று சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தனர்:
குவைத்தின் அல்-ராய் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று(09/12/25) செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த ஷுவாய்க் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த துயரமான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுடைய உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும் கட்டிடத்தின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தலைமையில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்த தொழிலாளர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.
#🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
குவைத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இந்திய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்:
குவைத்தில் வேலை செய்து வந்த பிருத்விராஜ்(வயது-27) என்ற இந்திய இளைஞர் சொந்த ஊரில் நேற்றிரவு நடந்த விபத்தில் மரணமடைந்தார். கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முண்டூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பாலக்காடு கண்ணாடி அடுத்த லுலு மால் அருகே வைத்து இரவு 11:00 மணி அளவில் நடந்த வாகன விபத்தில் சிக்கி கொண்டார்.
குவைத்தில் வேலை செய்துவந்த பிருத்விராஜ், துபாய்க்கு வேலை மாற்றம் கிடைத்ததை தொடர்ந்து,விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கி கொண்டார். இவருடைய தந்தை ஹரிதாசன் முத்து குவைத்திலுள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். மகனின் மரண செய்தி அறிந்த அவர் இரவு ஊருக்கு திரும்புகிறார்.
#🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
வணக்கம்
அரபு தமிழ் டெய்லி வாசகர்களே.......
வளைகுடா மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வசிக்கின்ற நாடுகளை சேர்ந்த உறவுகளின் புரிதலுக்காக இந்த பதிவு....
அன்புடன்
Arab tamil daily-Team 🤝
#🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
துபாய் ஆட்சியாளர் இன்று அறிமுகம் செய்த புதிய சட்டம் தவறவிட்ட பொருட்களை ஒப்படைக்கும் நபருக்கு 50,000 திர்ஹம் வரை வெகுமதி வழங்கப்படும்:
துபாயில் தவறவிட்ட பொருட்களை காவல்துறையிடம் திருப்பி ஒப்படைக்கும் நபர்களுக்கு 50,000 திர்ஹம் வரை வெகுமதி கிடைக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் புதிய தொலைந்து போன & கண்டுபிடிக்கப்பட்ட சட்டத்தை(Lost&Found) அறிவித்தார். சட்டத்தின்படி, பொருளின் மதிப்பில் 10 சதவீதம் வரை வெகுமதி வழங்கப்படும். இது அதிகபட்சமாக 50,000 திர்ஹம் வரையில் இருக்கும்.
இந்த புதிய சட்டப்படி பொருட்களை தொலைந்தது மற்றும் கைவிடப்பட்டவை என்று இரண்டாக வகைப்படுத்துகிறது. தொலைந்து போன பொருட்களில் சுயநினைவுடன் வேண்டுமென்றே கைவிடப்படாத உரிமையைக் கொண்ட பணம் அல்லது மதிப்புமிக்க சாதனங்களான பிற பொருட்கள் அடங்கும். வேண்டுமென்றே கைவிடப்பட்ட பொருட்கள் தொலைந்த பட்டியலில் சேராது. தெருவில் திரியும் விலங்குகள் இந்த வகைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
தவறவிட்ட பொருட்களைக் கண்டுபிடிப்பவர்கள் 24 மணி நேரத்திற்குள் துபாய் காவல்துறையின் மின்னணு அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து தங்களிடம் கிடைத்த பொருட்களை 48 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் யாராவது தவறவிட்ட பொருட்களை கண்டுபிடிப்பவர்கள் அதை தன்னுடைய பொருளாக பயன்படுத்த வேண்டாம், அதை தங்களுக்கு சொந்தமானவை என்று கோரக்கூடாது.
இருப்பினும், உரிமையாளர் ஒரு வருடத்திற்குள் நீங்கள் ஒப்படைத்த பொருளை பெற முன்வரவில்லை என்றால், கண்டுபிடிப்பாளர் காவல்துறை நிபந்தனைகளுக்கு உட்பட்டு சொத்தை கையகப்படுத்த விண்ணப்பிக்கலாம். ஒரு வருடம் கழித்து உரிமையாளர் முன்வந்தால், சொத்தை திருப்பித் தர வேண்டும். இவை மீறப்பட்டால், குற்றவியல் சொத்தை கண்டுபிடித்த நபர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார். மீறுபவர்களுக்கு 200,000 திர்ஹாம்கள் வரை அபராதம் விதிக்கப்படும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
குவைத்தில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் குடிமகன் கைதாகியுள்ளார்:
குவைத்தில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த முயன்ற குவைத் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய இவரை தீவிர விசாரணைகள் மற்றும் கண்காணிப்புக்குப் பிறகு கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று(25/11/25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஒரு பயங்கரவாத அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து வெடிபொருட்களை தயாரித்து பெரும் அளவிலான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பது கண்டறியப்பட்டது. சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களின் வழியாக பயங்கரவாதக் கருத்துக்களை பரப்பி சிறார்களை
ஈர்ப்பது மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவை திரட்டுவதும் நோக்கமாக கொண்டு அவர் செயல்பட்டு வந்தார் என்பதையும் உள்துறை கண்டறிந்துள்ளது.
இதேபோல் கடந்த மாதங்களிலும் இதே திட்டத்துடன் செயல்பட்ட சிலரை உள்துறை கண்டறிந்து கைது செய்து தாக்குதல் திட்டத்தை முறியடித்திருந்தனர். இந்நிலையில் இந்த நபர் கைது தொடர்பான செய்தியை உள்துறை இன்று வெளியிட்டுள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
குவைத்தில் இந்தியாவை சேர்ந்த வீட்டு பணிப்பெண் மாரடைப்பால் மரணமடைந்தார்:
குவைத்தில் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த கேரளா மாநிலம் இடுக்கியை அடுத்த காஞ்சியார் பகுதியை சேர்ந்த ரெஷ்மி(47), அமிரி மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார். தன்னுடைய முதலாளி வீட்டில் வைத்து வேலைக்கு இடையே திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை மீட்ட முதலாளி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்,ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இவருடைய கணவர் பெயர் விஸ்வநாதன் என்பதாகும். உயிரிழந்த ரெஷ்மியின் உடலை இந்தியா கொண்டு செல்ல தேவையான ஆவணப்பணிகளை ஓஐசிசி கெயர் குழுவின் தலைமையில் நடைபெற்று வருகின்றன. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
குவைத் எண்ணெய் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் இந்தியர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது:
குவைத்திலுள்ள எண்ணைய் நிறுவனத்தின் உற்பத்தி(ரிக்) பகுதியில் ஏற்பட்ட விபத்தில் கேரளா மாநிலம், கண்ணூர் அடுத்த கூடாளி என்ற ஊரை சேர்ந்த ராஜேஷ்(38) என்ற இந்திய இளைஞர் இன்று(25/11/25) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். ராஜேஷின் உடலை நாட்டிற்கு கொண்டு செல்ல தேவையான ஆவணப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12-ஆம் தேதி அப்தல்லியில் உள்ள எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட விபத்தில் நிஷில்(40) மற்றும் சுனி(43) என்ற
இரண்டு மலையாளிகள் கனமான பொருள் உருண்டு தலையில் விழுந்ததில் தலை நசுங்கி உயிரிழந்தனர். இதே விபத்தில் ஜிஜேஷ்(28) என்ற கேரளா இளைஞரும் படுகாயத்துடன் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த இருவரும் எண்ணெய் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று ஏற்பட்ட விபத்தில் மீண்டும் மற்றொரு இந்தியர் உயிரிழந்தது தொடர்பான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
இந்திய வானிலை அடுத்த சில தினங்கள் இருண்டு காணப்படும்;விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது:
சுமார் 12,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலையில் இருந்து பல கிலோமீட்டர் உயரத்திற்கு எழும்பி பரவத்துவங்கியுள்ள பயங்கரமான சாம்பல் இந்தியா, ஏமன், ஒமான் மற்றும் வடக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை நோக்கி 100-120 கிமீ வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. இரவு 10 மணிக்குள் சாம்பல் இந்தியாவை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த எரிமலை சாம்பலால் வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும். இந்த எரிமலை சாம்பலால் விமான சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சாம்பலில் சல்பர் அளவு அதிகமாக இருப்பதால் விமானத்தின் உடல் பாகங்களை இது கடுமையாக பாதிக்கும். அமில மழையும் பெய்யும், இது உடலுக்கு பல்வேறு வகையான அலர்ஜியை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
நேற்று முதலே வளைகுடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்தியா வருகின்ற மற்றும் புறப்படும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் சில விமானங்கள் பயணத்துக்கு இடையே மற்ற வழிகளில் திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது. எனவே விமான பயணிகள் நீங்கள் விமான பயணச்சீட்டு எடுத்துள்ள விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயண விபரங்களை உறுதி படுத்துங்கள் பிறகு பயணத்தை தொடங்குங்கள்.
அதேபோல் இந்த ஏரிமலை தொடர்ந்து வெடிக்கும் அபாயம் உள்ளது. மக்கள் வசிக்கின்ற பகுதி இந்த இடம் இல்லை என்பதால் இந்த எரிமலை வெடிப்பு காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவலில்லை. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
குவைத்தில்||😳ஆசனவாயில் மறைத்து போதைப்பொருள் கடத்திய பயணி சிக்கினார்:
குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து 412 கிராம் அளவுக்கு போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து வந்த ஐரோப்பியா நாட்டவரான பயணியே கைது செய்யப்பட்டவர் ஆவார். ஒருவர் போதைப்பொருட்களுடன் நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பயணி சுங்கத்துறை பிரிவுக்கு வந்த தருணத்திலிருந்து கண்காணிப்பில் இருந்தார்.
அதிநவீன எக்ஸ்ரே பரிசோதனையில் அவரது ஆசனவாயில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது உடலில் இருந்து போதைப்பொருட்களை அகற்றுவதற்காக அவர் ஃபர்வானியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்று விமான நிலைய சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
இந்தியாவில் இருந்து புறப்படும் பல விமானங்களின் சேவை எரிமலை வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது:
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் ஒரு எரிமலை இன்று பயங்கரமாக வெடித்துள்ளன. 12,000 ஆண்டுகளில் இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதனால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து புறப்படும் பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்நாட்டின் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் உள்ள ஹைலே குப்பி எரிமலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த எரிமலையிலிருந்து எழும்பிய கடுமையான சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஒமான் மற்றும் வடக்கு பாகிஸ்தானை அடைந்தன. இதன் மூலம், நாட்டில் விமானப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கண்ணூரில் இருந்து அபுதாபிக்கு சென்ற இண்டிகோ விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. எத்தியோப்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பின் பின்னணியில் இந்த விமான சேவை பாதிக்கப்பட்டது. ஏர்பஸ் 6E1433 என்ற அந்த
விமானம் அகமதாபாத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் கண்ணூருக்குத் திரும்புவதற்காக ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இண்டிகோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் நெடும்பச்ஷேரியில் இருந்து இரண்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஆகாஷ் ஏர் நிறுவனத்தின் மாலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஜித்தா விமானமும், இண்டிகோவின் மாலை 5.10 மணிக்கு புறப்பட வேண்டிய துபாய் சேவையும் ரத்து செய்யப்பட்டன. மாலையில் துபாயிலிருந்து வர வேண்டிய இண்டிகோ விமானம் வரவில்லை. ஆகாஷ் ஏர் நிறுவனத்தில் ஏராளமான உம்ரா யாத்ரீகர்கள் இருந்தனர். இண்டிகோ பயணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) துபாய்க்கு அழைத்து வரப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகாஷ் ஏர் பயணிகள் புறப்படுவது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நிறுவன பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தமிழகத்தில் இருந்து புறப்பட வேண்டிய எத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான கூடுதல் விபரங்கள் தெரியவில்லை. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️











![🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - ARAE BREAKING NEWS] DA III০ --I 24-11-2025 M AL 4u ஆசனவாயில் மறைத்து போதைப்பொருள் கடத்தியவர் சிக்கினார் குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து 412 கிராம் அளவுக்கு போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார் Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, Contact ಚrobtomilddily com editoratdnews@gmail com| arabtamildaily WWW ARAE BREAKING NEWS] DA III০ --I 24-11-2025 M AL 4u ஆசனவாயில் மறைத்து போதைப்பொருள் கடத்தியவர் சிக்கினார் குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து 412 கிராம் அளவுக்கு போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார் Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, Contact ಚrobtomilddily com editoratdnews@gmail com| arabtamildaily WWW - ShareChat 🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - ARAE BREAKING NEWS] DA III০ --I 24-11-2025 M AL 4u ஆசனவாயில் மறைத்து போதைப்பொருள் கடத்தியவர் சிக்கினார் குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து 412 கிராம் அளவுக்கு போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார் Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, Contact ಚrobtomilddily com editoratdnews@gmail com| arabtamildaily WWW ARAE BREAKING NEWS] DA III০ --I 24-11-2025 M AL 4u ஆசனவாயில் மறைத்து போதைப்பொருள் கடத்தியவர் சிக்கினார் குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து 412 கிராம் அளவுக்கு போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார் Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, Contact ಚrobtomilddily com editoratdnews@gmail com| arabtamildaily WWW - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_140940_33a25194_1764016137668_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=668_sc.jpg)
