⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
601 views • 7 days ago
*கார்த்திகை ஸ்பெஷல்* 🌹
⚘ஐந்து மிகப்பெரிய நந்திகள்⚘🐂
🐮பல பெருமைகளை உடைய நந்தி தேவருக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் உள்ளன.
🐮இந்தியாவில்,புகழ் பெற்ற நந்திகள் ஏராளம்.குறிப்பாக,தென்னிந்தியாவில் நந்திகள் அமைந்துள்ள கோவில்கள் நிறைய உண்டு.
🐮சிவபெருமான் ஆலயங்கள் என்றாலே சிறிய அளவிலான நந்தியாவது அமைந்திருக்கும்.இந்தியாவில் உள்ள ஐந்து மிகப்பெரிய நந்தி சிலைகளைப் பற்றி இங்கு காண்போம்.
1️⃣பிரகதீஸ்வரர் கோவில்,தஞ்சாவூர்.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது.இந்தச் சிலை 13 அடி உயரமும்,16 அடி நீளமும் கொண்டது.
2️⃣வீரபத்ரர் கோவில்,லேபாக்ஷி
ஆந்திரப்பிரதேச மாநிலம்.லேபாக்ஷியில் விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயத்தில் இந்த நந்தி சிலை அமைந்திருக்கிறது.இந்த நந்தி தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தி சிலையாக கருதப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் நந்தியாகவும் இது அறியப்படுகிறது.இச்சிலை 15 அடி உயரமும்,27 அடி நீளமும் கொண்டது.
3️⃣சாமுண்டி மலை,மைசூர்.மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் 1664-ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய நந்தி நிர்மாணிக்கப்பட்டது.இது 15 அடி உயரமும்,24 அடி நீளமும் கொண்டது.
4️⃣பசவனகுடி பெங்களூர்.பெங்களூரின் தென்பகுதியில் உள்ள பசவனகுடியில் இந்த நந்தி சிலை அமைந்துள்ளது.இந்தக் கோவில் இருக்கும் இச்சிலை 15 அடி உயரமும்,20 அடி நீளமும் கொண்டது.
5️⃣ஹோய்சாலேஸ்வரர் கோவில்,ஹலேபீடு.ஹோய்சாலேஸ்வரர் கோவில் 12-ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நின்று போனது.இந்தக் கோவிலில் 14 அடி உயரம் கொண்ட இரண்டு ஒற்றைக்கல் நந்தி சிலைகள் காணப்படுகின்றன.
#ௐ #நந்தீஸ்வராய #நமஹ.✍🏼🌹 #😎வரலாற்றில் இன்று📰 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
13 likes
9 shares