⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
ShareChat
click to see wallet page
@coffeeday
coffeeday
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
@coffeeday
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
*டிசம்பர் 05, 1952* 5 நாட்களுக்கு நீடித்து, சுமார் ஆறாயிரம் பேர்வரை பலிகொண்ட, லண்டன் பெரும் பனிப்புகை மூட்டம் ஏற்பட்ட நாள். ஒரு லட்சத்திற்கும் அதிகமோனோருக்கு மூச்சுக்குழல் தொடர்புடைய உடல்நலக்குறைவுகளும் ஏற்பட்டன. குளிரை எதிர்கொள்ள லண்டன் மக்கள் நிறைய நிலக்கரியை எரித்தனர். இரண்டாம் உலகப்போருக்குப்பின், தரமான நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டதால், வீடுகளில் கனப்புக்குப் பயன்படுத்த கந்தகம் அதிகமாகக்கொண்ட, தரம் குறைந்த நிலக்கரியே பயன்படுத்தப்பட்டது. நிலக்கரியால் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்கள் ஏராளமாக இருந்ததுடன், பழங்கால வாகனம் என்று, மின்சார ட்ராம் வண்டிகள் நிறுத்தப்பட்டு, டீசல் பேருந்துகள் புழக்கத்துக்கு வந்ததும் மாசுபாட்டை அதிகரித்திருந்தது. 1000 டன் புகைத்துகள்கள், 140 டன் ஹைட்ரோகுளோரிக் அமிலம், 14 டன் ஃபுளோரின் சேர்மங்கள், 800 டன் கந்தக அமிலத்தை உருவாக்கவல்ல 370 டன் கந்தக டை ஆக்சைட் ஆகியவை அக்காலத்து லண்டனில் ஒவ்வொரு நாளும் வெளியானதாக வளிமண்டல ஆய்வகம் பதிவு செய்துள்ளது. காற்றிலிருந்த எண்ணைப் பிசுக்குடன் கூடிய கரித்துகள்களால் மஞ்சள் கலந்த கருமை நிறத்தில் ஏற்பட்ட புகையும், பனியும் கலந்த மூட்டம், சில அடி தூரத்துக்குமேல் பார்க்க இயலாமல் செய்ததால், சமிக்ஞைகளைப் பார்க்க முடியாத நிலையில், சிறிய குண்டுகளை வெடித்து ரயில்களுக்கு சமிக்ஞைகள் செய்யப்பட்டது. 13ம் நூற்றாண்டிலிருந்தே காற்று மாசு நிறைந்த நகராக லண்டன் இருந்திருந்தாலும், இவ்வளவு மோசமான நிலையைச் சந்தித்ததில்லை. உடனடியாக '1952ன் தூய காற்றுச்சட்டம்' இயற்றப்பட்டு, மாசுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰
தெரிந்து கொள்வோம் - ShareChat
*டிசம்பர் 05, 2013* *நெல்சன் மண்டேலா நினைவு நாள்* நெல்சன் மண்டேலா  தென்னாப்பிரிக்காவின்  மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர்  நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர்  (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். #😎வரலாற்றில் இன்று📰 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
😎வரலாற்றில் இன்று📰 - ShareChat
*டிசம்பர் 05, 1954* *கல்கி அவர்களின் நினைவு நாள்* 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம்  இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.  தியாகபூமி, பொன்னியின் செல்வன் புதினங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰
தெரிந்து கொள்வோம் - ShareChat
*05, டிசம்பர் 1896* சென்னையிலுள்ள கன்னிமரா பொது நூலகம் (Connemara Public Library) வாசகர்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. கன்னிமரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி ராபர்ட் போர்க் கன்னிமரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara) என்பவராவார். இது இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும். 1890-ல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது. 1948-ம் ஆண்டு மதராஸ் பொது நூலகச் சட்டத்தின்படி, (இச்சட்டமே இந்தியாவிலேயே முதன் முதலில் பொதுநூலகங்களை அங்கீகரித்து, அமைத்து, நிர்வகித்தல் சம்பந்தமான முக்கிய செயல்பாடு ஆகும்) கன்னிமரா பொது நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாயிற்று. 1981-ம் ஆண்டு இந்திய நடுவண் அரசின் ஆணைப்படி கன்னிமரா பொது நூலகம் நாட்டின் களஞ்சிய நூலகமானது. நாட்டில் மொத்தம் நான்கு களஞ்சிய நூலகங்கள் உள்ளன. 1973 ம் ஆண்டு இந்த நூலக வளாகத்தில் புதிய விரிவாக்க கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. #😎வரலாற்றில் இன்று📰 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
😎வரலாற்றில் இன்று📰 - ShareChat
*டிசம்பர் 05,* *வால்ட் டிஸ்னி* (Walt disney) உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி 1901ம் ஆண்டு டிசம்பர் 05ம் தேதி அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் பிறந்தார். இவர் மிக சிறந்த காட்டூன் ஓவியர். இவர் தன்னுடைய பணியார்களும் சேர்ந்து உருவாக்கிய கற்பனை தான் மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவைகளாகும். வால்ட் டிஸ்னி திரைப்பட, இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். மேலும் இவர் வணிக நோக்குடைய பூங்கா மற்றும் அசைப்படம் எடுப்பதில் வல்லுனராக இருந்தார். இவர் ஐம்பத்தி ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமிக்கப்பட்டு , இருபத்திரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனையாகும். மிக அதிக முறை ஆஸ்கர் விருதுக்கான நியமனம செய்யப்பட்ட வால்ட் டிஸ்னி தன்னுடைய 65வது வயதில் (1966) மறைந்தார். #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰
தெரிந்து கொள்வோம் - ShareChat
*டிசம்பர் 05, 1766* உலகின் மிகப்பெரிய ஏல நிறுவனம் என்று குறிப்பிடப்படும் க்றிஸ்ட்டீ'ஸ் நிறுவனத்தின் முதல் ஏலம், அதன் உரிமையாளரான ஜேம்ஸ் க்றிஸ்ட்டியால் லண்டனில் நடத்தப்பட்ட நாள். கி.மு.500களில் ஏலம் நடத்தப்பட்டதற்கான வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ளன. பாபிலோனில், திருமணம் செய்துகொள்வதற்குப் பெண்களை ஏலம் விடுதல் நடைமுறையிலிருந்ததாக, ஹிரோடோட்டஸ் குறிப்பிட்டுள்ளார். மகளை ஏலமில்லாத முறையில் விற்பது (திருமணம் செய்து தருவதுதான்!), அங்கு சட்டவிரோதமாக இருந்துள்ளது. ரோமப் பேரரசில் போர் வெற்றிக்குப்பின் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம்விட்டு, போர்ச் செலவை ஈடு செய்திருக்கிறார்கள். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் சொத்துகளை ஏலம்விட்டு, கடனுக்கு ஈடு செய்வதும் அங்கு நடைமுறையிலிருந்திருக்கிறது. 1674ல் ஸ்வீடனில் உருவான ஸ்டாக்ஹோம் ஏல நிறுவனம்தான், உலகின் முதல் ஏல நிறுவனமாகும். அதைத் தொடர்ந்து உருவாகிய பல ஏல நிறுவனங்களில் சில இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. க்றிஸ்ட்டீஸ் நிறுவனத்தின் இணையத்தளம், 1766 டிசம்பர் 05ல் முதல் ஏலத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டாலும், 1759லேயே அந்நிறுவனத்தின் விற்பனை குறித்து செய்தித்தாள்களில் வெளியான விளம்பரங்களும் கிடைத்துள்ளன. ஹாமில்ட்டன் அரண்மனையில் சேகரிக்கப்பட்டிருந்த பொருட்களை 1882லேயே 3.32 லட்சம் பவுண்டுகளுக்கு (தற்போது சுமார் ரூ.400 கோடி!) ஏலத்தில் விற்ற இந்நிறுவனம், 2015வரை ஏலத்தில் விற்ற பொருட்களின் மதிப்பு 480 கோடி பவுண்டுகளாம் (ரூ.53,300 கோடி)! இணையத்தின் வரவு, இத்தகைய ஏல விற்பனைகளில் அதிக மக்கள் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கி, வளர்ச்சிக்கே இட்டுச் சென்றுள்ளது. #😎வரலாற்றில் இன்று📰 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
😎வரலாற்றில் இன்று📰 - ShareChat
*டிசம்பர் 05,* *சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம்.* சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் டிசம்பர் 05ம் தேதி கொண்டாடப்படுகிறது. தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபை 1985ம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰
தெரிந்து கொள்வோம் - INTERNATIONAL VOIUITGGR DIY FOR ECONOMIC AND SOCIAL DEVELOPMENTI DECEMBER  05 INTERNATIONAL VOIUITGGR DIY FOR ECONOMIC AND SOCIAL DEVELOPMENTI DECEMBER  05 - ShareChat
*டிசம்பர் 05,* *உலக மண் தினம்.* உலகின் இயற்கைச் சூழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை மையமாகக் கொண்டு உலகளாவிய ரீதியில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் டிசம்பர் 05ம் தேதியை உலக மண் தினமாகக் கடைபிடித்து வருகிறது. #😎வரலாற்றில் இன்று📰 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
😎வரலாற்றில் இன்று📰 - உலக மண் தினம் உலக மண் தினம் - ShareChat
*வரலாற்றில் இன்று* *05 டிசம்பர் 2025-வெள்ளி* *==========================* 1082 : பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பேரிங்கர் கொல்லப்பட்டார். 1360 : பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது. 1496 : போர்ச்சுகல் மன்னர் முதலாம் இமானுவெல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்தார். 1560 : ஒன்பதாம் சார்லஸ் பிரான்ஸின் மன்னராக முடிசூடினார். 1746 : ஸ்பெயின் ஆட்சிக்கு எதிராக ஜெனீவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. 1766 : லண்டன், உலகின் மிகப்பெரிய ஏலக்கம்பெனி கிரிஸ்டியின் முதல் விற்பனை நடந்தது. 1786 : கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த வில்லியம் பெட்ரி என்பவரால் முதல் வானிலை ஆராய்ச்சி நிலையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது. 1824 : கிட்டூர் கோட்டையை பிரிட்டிஷ் படைக் கைப்பற்றியது. இப்போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1837 : இலங்கையில் முதலாவது சர்க்கரை தொழிற்சாலை தூம்பறை என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1839 : இந்தியாவில் பிரிட்டிஷ் அஞ்சல் துறை ஒரே சீரான அஞ்சல் கட்டணம் வசூலிக்கும் முறையைப் பின்பற்ற ஆரம்பித்தது. 1848 : கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் போக் அறிவித்தார். 1863 : இங்கிலாந்தில் கால்பந்தாட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டன. 1896 : இந்தியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா நூலகம் சென்னையில் திறக்கப்பட்டது. 1922 : பிபிசியில் முதன்முதல் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. 1924 : இத்தாலியில் பத்திரிகை தணிக்கை முறை அமலுக்கு வந்தது. 1931 : மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. 1933 : அமெரிக்காவில் மது விலக்கு ரத்து செய்யப்பட்டது. 1934 : இத்தாலிப் படையினர் அபிசீனியாவின் வால்வால் என்ற நகரைத் தாக்கினர். நான்கு நாட்களுக்குப் பின்னர் நகரைக் கைப்பற்றினர். 1941 : இரண்டாம் உலகப் போர் :- பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரிட்டன் போரை அறிவித்தது. 1943 : கல்கத்தாவில் ஜப்பான் விமானங்கள் குண்டு வீசின. 1945 : பெர்முடா முக்கோணத்தில் 14 வீரர்களுடன் ஐந்து குண்டுவீச்சு விமானங்கள் மாயமாக மறைந்தன. தேடிச் சென்ற விமானமும் 20 நிமிடங்களில் மறைந்தது. 1952 : லண்டனில் குளிர் மேக மூட்டம் சூழ்ந்து காற்று மாசு அடைந்ததால் இருவாரங்களில் மட்டும் 12 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 1954 : பெர்முடாவில் ஒரு எண்ணெய்க் கப்பல் 23 ஊழியர்களுடன் மறைந்தது. 1957 : இந்தோனேஷியாவிலிருந்து 3,26,000 டச்சு மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 1958 : பிரிட்டனில் முதன்முதலாக S.T.D. தொலைபேசி தொடர்பு வசதி அமைக்கப்பட்டது. 1969 : மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது. 1978 : சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1980 : பேங்க் ஆஃப் கனடாவின் நாணய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 1982 : பிரிட்டன், தொலைக்காட்சியில் முதன் முதல் முப்பரிமாணப் படம் ஒளிபரப்பப்பட்டது. 1983 : அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. 1988 : கேமரூனில் உயர்நிலைப் பள்ளியில் திடீரென கட்டிடம் இடிந்து விழுப்போகிறது எனப் புரளி கிளம்ப, மாணவர்கள் வெளியே ஓடி வரும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். 1995 : இலங்கைப் போர் :- யாழ்ப்பாணத்தை முழுமையாக விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் கைப்பற்றியதாக இலங்கை அரசு அறிவித்தது. 2003 : இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர் திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது. 2006 : பிஜியில் ராணுவத் தளபதி பிராங்க் பைனிமராம ராணுவப் புரட்சி மூலம் அரசைக் கைப்பற்றினார். மத்திய அரசில் நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 ல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றார். 2013 : ஏமன், சனா நகரில் போராளிகள் தாக்கியதில் 56 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். 2017 : 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட ரஷ்யாவுக்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழு தடை விதித்தது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰
தெரிந்து கொள்வோம் - 350 10 २० P N 320 330 340  ೦ % 310 8 % ನ n UIIITTIIU &क 02 081 081 021 091 / 350 10 २० P N 320 330 340  ೦ % 310 8 % ನ n UIIITTIIU &क 02 081 081 021 091 / - ShareChat
*🔹🔸The End of Sati: India’s Historic Reform (1829)* > *On this day in 1829, the cruel practice of 'Sati' was legally abolished in India. Thanks to the relentless efforts of Raja Ram Mohan Roy, Governor-General Lord William Bentinck passed the law declaring the burning of widows illegal and punishable by courts. A major victory for human rights!* 📜🇮🇳🔥 #😎வரலாற்றில் இன்று📰 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
😎வரலாற்றில் இன்று📰 - ShareChat
01:55