ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views • 29 days ago
🎏🎏 ஸ்ரீ காமாக்ஷி மூகபஞ்சசதீ 🎏🎏
♣️ ஆர்யா சதகம் - பகுதி 4
16. मधुरधनुषा महीधरजनुषा नन्दामि सुरभिबाणजुषा ।
चिद्वपुषा काञ्चिपुरे केलिजुषा बन्धुजीवकान्तिमुषा ॥16॥
மதுரதனுஷா மஹீதரஜனுஷா நந்தாமி ஸுரபி பணஜுஷா |
சித்வபுஷா காஞ்சிபுரே கேளிஜுஷா பந்துஜீவ காந்திமுஷா || 16 ||
இனிமையோடு (கரும்பு வில்லாகையால்) கூடிய வில்லையுடையதும், பர்வதராஜன் வழியாக பிறப்புற்றதும், மணமுள்ள (புஷ்பபாண சாபா!) பாணங்களை உடையதும், காஞ்சீபுரியில் விளையாடிக் கொண்டிருப்பதும், குளிர்ச்சியூட்டும் செம்பரத்தம் (பரத்தம்பூ) பூவின் காந்தியை தோற்கடிக்கக்கூடியதும், சித்ஸ்வரூபத்தோடு கூடிய ஒரு பொருளினால் ஆனந்தமடைகிறேன்.
"இனியவில் லுற்ற, இமவான் விரும்பி இகத்துதித்த
நனிமண வம்புடை நாரியால், சித்தாய நற்பொருளால்,
புனிதமாம் காஞ்சீ புரத்தினில் கேளி புரியுமொன்றால்,
பனிக்கும் பரத்தம் பகர்வென் றதாலே பரவசமே"
17. मधुरस्मितेन रमते मांसलकुचभारमन्दगमनेन ।
मध्येकाञ्चि मनो मे मनसिजसाम्राज्यगर्वबीजेन ॥17॥
மதுர ஸ்மிதேன ரமதே மாம்ஸல குசபார மந்த கமனேன |
மத்யே காஞ்சி மனோ மே மனஸிஜ ஸாம்ராஜ்ய கர்வ பீஜேன || 17 ||
இனிய புன்சிரிப்போடு கூடியதும், பருத்த தனபாரத்தினால், மெதுவான நடையோடு கூடியதும், காஞ்சீ நகரின் மத்தியில், மன்மதனுடைய அரசாட்சி செய்வதினால், அவனுக்கு உண்டான அகந்தைக்கு, மூல வித்தாக இருக்கும் பரம்பொருளால் என்னுடைய மனமானது களித்துக்கொண்டிருக்கிறது.
"இன்னகை ஏந்தி, இடைச்சுமை கூடும் எழில்தனத்தால்
மென்னடை கொண்டது, மேவிடும் காஞ்சி மிசையினிலே!
மன்மத னாட்சி மமதைக்கே காரண மாயதுவாம்
உன்முகி யாமதால் உள்ளம் மகிழ்ந்து உவக்கிறதே"
18. धरणिमयीं तरणिमयीं पवनमयीं गगनदहनहोतृमयीम् ।
अम्बुमयीमिन्दुमयीमम्बामनुकम्पमादिमामीक्षे ॥18॥
தரணிமயீம் தரணிமயீம் பவனமயீம் ககன தஹன ஹோத்ருமயீம் |
அம்புமயீம் இந்துமயீம் அம்பாம் அனுகம்பம் ஆதமாம் ஈஷே || 18 ||
உலகம், சூரியன், வாயு, வானம், தீ, நீர் (சலம்), கர்தன் (வேள்வி செய்பவன்), சந்திரன் இவர்கள் வடிவிலெலாம், சகலமாயும் இருக்கிற, இவ்வண்டத்திற்கெல்லாம் முதலாய் உலவுகின்ற அன்னையை ஓடுகின்ற கம்பை நதிக்கரையில் உணர்ந்து கண்டேனே.
"உலகின் உருவில், உதிக்கும் உதயன் உருவிலுமாய்
வலமிடு வாயு வடிவினில் வான வடிவிலுமாய்
சலம்தீ கருத்தனாய் சந்திர னோடு செகமுதலாய்
உலவுமம் மையை உரவுகம் பைத்தீரம் ஓர்ந்தனனே"
19. लीनस्थिति मुनिहृदये ध्यानस्तिमितं तपस्यदुपकम्पम् ।
पीनस्तनभरमीडे मीनध्वजतन्त्रपरमतात्पर्यम् ॥19॥
லீன ஸ்திதி முனிஹ்ருதயே த்யான ஸ்திமிதம் தபஸ்யத் உபகம்யம் |
பீனஸ்தனபரம் ஈடே மீனத்வஜ தந்த்ர பரம் தாத்பர்யம் || 19 ||
முனீச்வரர்களின் இதயத்தில் இலயமுற்றதும், கம்பை நதிக்கரையில் தியானத்தில் அசைவற்று தவம் செய்வதுவும், பருத்த தனபாரங்களை உடையதுமான, மன்மதச் சாத்திரத்தின் சாரமாயும், இரசமாயும் இருப்பதை துதிக்கிறேன்.
"முனிகள் இதயத்தில் முற்றும் இலயத்தில் மோதமுறும்
தனியே தியானத் தவத்தில்கம் பைக்கரை தானமரும்
நனிமார் பகங்களும் நற்சார மாய்மாரன் நற்றிறமும்
இனிதே இணைந்த இருப்பை துதிப்பேன் இசைவுடனே"
20. श्वेता मन्थरहसिते शाता मध्ये च वाड्भनोஉतीता ।
शीता लोचनपाते स्फीता कुचसीम्नि शाश्वती माता ॥20॥
ச்வேதா மந்த்ர ஹஸிதே சாதா மத்யே ச வாங்மனோதீதா |
சீதா லோசனபாதே ஸ்பீதா குசஸீம்னி சாச்வதீ மாதா || 20 ||
அழிவில்லாத, சாஸ்வதனமான என் தாயாம் காமாக்ஷியானவள், தன் மென்சிரிப்பில் வெண்ணிறமுள்ளவள்; இடை சிறுத்தவள்; வாக்கிற்கும், எண்ணத்துக்கும் உட்படாதவள்; பார்வையில் குளிர்ந்தவள்; புஷ்டி மிகுந்த மார்பினள்.
"இளநகை வெண்மை, இளைத்த சிறிய இடையுடைத்தாள்
அளப்பிலா வாக்கினள்; அன்னை நினைப்புக்கும் அவ்வருகாம்;
குளிர்ந்தயின் பார்வையாள்; குன்றெனப் பூத்த குசத்தவளாம்;
உளத்தினில் தாயவள் உத்தமி நித்தியள் ஊன்றினளே"
தொடரும்...
ஓம் ஸ்ரீ களின்கார்யை நமஹ! 🚩🕉🪷🙏🏻 #🔱காமாட்சி அம்மன்🙏 #ஸ்ரீ காமாட்சி பரமேஸ்வரி அம்மன் ஆலயம் சிங்கம்புணரி🙏 #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள்
16 likes
40 shares