ShareChat
click to see wallet page

*இன்று*(24-9-25) *நவராத்திரி* *மூன்றாம் நாள்*: *பூஜையின் சிறப்பம்சம்*! சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம். நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு சாற்ற ஒவ்வொரு விதமான மலர், ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள், அம்பாளைப் பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்: அந்தவகையில் நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று(5-10-24) என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம்!! நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று அம்பிகையை நான்குவயது பெண்ணாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்று முத்துபோல் விளங்கும் ஜவ்வரிசியினால் மலர்க் கோலம் போட வேண்டும். மூன்றாவது நாளுக்கு உரியதேவி – இந்திராணி. குமாரியின் பெயர் – கல்யாணி. மந்திரம் ஓம் கல்யாண்யை நம: சுவாசினியின் பெயர் – சந்த்ர காண்டா. மந்திரம் ஓம் சந்த்ர கண்டாயை நம:. நைவேத்தியம் – சர்க்கரைப் பொங்கல். வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் – வித்யை, ராஜ்யம், பதவிகள் கிடைக்கும் நவராத்திரி மூன்றாம் நாள் – தீய குணங்களை நீக்கும் ‘சந்திரகாண்டா’ வழிபாடு!! மூன்றாவது தினமான இன்று நமது தீய எண்ணங்களை அடியோடு ஒழிக்க சந்திர கண்டா அம்பாளை வழிபட வேண்டும். சந்திரக்கண்டா துர்க்கையை வழிபடும் முறையை பற்றி இந்த பதிவில் காணலாம். அசுரர்களை அழிக்க தோன்றியவர்கள் நவதுர்க்கைகள் இந்த நவதுர்க்கைகள் சிவபெருமானின் தாண்டவங்களில் இருந்து பிறந்தவர்கள். ஒவ்வொரு நாளும் தாண்டவத்தில் இருந்து ஒவ்வொரு துர்கைகள் அவதரித்தார்கள். இவ்வாறு மூன்றாவது நாள் ஆடிய நடனத்தில் இருந்து பிறந்தவளே சந்திரகாண்டா. நீதியை நிலைநாட்டி சந்திர பிறையை அணிந்து கொண்டவள் சந்திரகாண்டா. சந்திர என்றால் நிலவு, காண்டா என்றால் மணி என்று பொருள். சந்திர பிறையானது இவளது நெற்றியில் மணி போன்று இருப்பதால், சந்திரகாண்டா என்று அழைக்கப்படுகிறாள். சிங்க வாகனத்தில், 3 கண் மற்றும் 10 கரங்களுடன் காட்சி தருகிறாள். சந்திரகாண்டாவின் 2 கரங்கள் பக்தர்களுக்கு அருள் செய்யும் விதமாக உள்ளன. போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருவதால், தனது பார்வையின் மூலமாக பக்தர்களின் துன்பங்களை நீக்கி அவர்களுக்கு இன்பத்தை அளிக்கிறாள். கடும் கோபமும், ஆக்ரோஷமும் கொண்டிருக்கும் சந்திரகாண்டா தேவியை வழிபட சிங்கத்தைப் போன்ற வீரம் கிடைக்கும், பாவம் அழியும், அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சந்திரகாண்டா மந்திரம்: ப்ரிடிஞ்சபர வரூதா சந்திரகோபஸ்த கரியுதா பிரசாதம் தந்துனே மகாயும் சந்திரகண்டெதி விஸ்ருதா இந்த மந்திரத்தை சொல்லி சந்திரகாண்டா தேவியை வழிபட அனைத்து நன்மைகளும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சந்திரகாண்டா கோயில் உள்ளது. இந்த சந்திரக்கண்டாவை வழிபடுவதற்கு முக்கிய காரணம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்து மனதில் அமைதியை நிலைநாட்டுவதே. மேலும் நவராத்திரி தொடங்கி முதல் இரண்டு நாட்கள் பூஜையை தவற விட்டவர்கள் இந்த மூன்றாம் நாளில் கொலு வைத்து பூஜையை ஆரம்பிக்கலாம். தேவி ஸ்ரீ சந்திரக்கண்டாவிற்குரிய மந்திர ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🎵 நவராத்திரி பஜனை ✨ #📿நவராத்திரி பூஜை முறை🪔 #அம்பாளின் மந்திரங்கள்.

3K காட்சிகள்
18 நாட்களுக்கு முன்