ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
572 views • 13 hours ago
சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் வசித்து வந்தவர் பாரதி.. இவரது அப்பாவின் பெயர் டெல்லி ஆறுமுகம். அதிமுக முக்கிய பிரமுகர் ஆவார்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடி பழக்கம் உள்ளவர்... ஆனால், சில வருடங்களுக்கு முன்பு டெல்லி ஆறுமுகம் இறந்துவிட்டார்.
38 வயது பாரதி
ஆனால், மகள் பாரதியை பிடெக் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார்.. 38 வயதான பாரதி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.. சேலம் சங்கர் நகரில் டியூஷன் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார், அங்கேயே தங்கியும் வந்தார்..
இதற்கு முன்பு பெங்களூரில் வேரை பார்த்து வந்தாராம் பாரதி.. அப்போது சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அது இப்போது சேலம் டியூஷன் சென்டர்வரை தொடர்ந்து வருகிறது.. சொந்தபந்தமும் யாரும் தட்டிக்கேட்காத முடியாத சூழலில், பாரதி சுதந்திர பறவையாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
சிஇஓ உதய சரண்
இந்நிலையில்தான், பல்வேறு தொழில்களுக்கான நிகழ்ச்சி சேலத்தில் பிரபல ஓட்டல் ஒன்றில் நடந்தபோதுதான், உதயசரண் என்ற 49 வயது நபர் அறிமுகமானார்.. சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் CEO-வாக பணியாற்றி வருகிறார் உதயசரண்.. இவரும் சேலம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர்தான்.. நாளடைவில் பாரதியுடன் தகாத முறையில் பழக ஆரம்பித்தார்..
உதயசரணுக்கு ஏற்கனவே கல்யாணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.. ஆனால், பாரதியிடம் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதையே உதயசரண் மறைத்துவிட்டாராம்.
10 பவுன் பிரேஸ்லெட்
இதனால் உதயசரணை உயிருக்கு உயிராக காதலித்ததுடன், அவரையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு பாரதியும் வந்து நெருங்கி பழகி உள்ளார்.. உதயசரண் மீது பாரதிக்கு கூடுதல் பிரியம் இருந்து வந்துள்ளது.. 10 சவரனில் பிரேஸ்லெட் வாங்கி காதலனுக்கு கிஃப்ட் தந்துள்ளார்.. ஆனால் ஆசை ஆசையாக பாரதி போட்ட பிரெஸ்லெட்டை, உதயசரண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விற்று செலவு செய்துவிட்டாராம்,.
அப்போது முதல் கள்ளக்காதலர்கள் இடையே தகராறு வெடிக்க துவங்கியது.. மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாரதி நெருக்கடியும் தந்துவிட்டதால், இதனாலும் கள்ளக்காதலர்களுக்குள் மோதல் அதிகரித்தது. போதாக்குறைக்கு உதயசரணின் வீட்டிலும் இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரிந்து அவரது மனைவி கொந்தளித்துவிட்டார்.
மனைவி தகராறு
விரைவில் கள்ளக்காதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மனைவியை ஒருவழியாக சமாதானம் செய்துள்ளார் உதயசரண்.. இதற்கு பிறகுதான் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதை பாரதியிடம் உதயசரண் சொன்னாராம். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பாரதி, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.. இதற்கும் உதயசரண் மறுத்துள்ளார்.. இதனால் இவர்களுக்குள் சண்டை இன்னும் அதிகரிக்க துவங்கியது.
ஒவ்வொருமுறை சண்டை வரும்போதும், பாரதியை உதயசரண் சமாதானப்படுத்தி வந்துள்ளார்.. 2 நாளைக்கு முன்பு இருவரும் நைட்ஷோ சினிமாவுக்கு சென்றுள்ளனர்.. அன்றைய இரவு பாரதி தங்கியிருக்கும் ரூமிலேயே உதயகிரணும் தங்கியிருக்கிறார்..
2 சிகரெட் ஒன்றாக ஊதிய பாரதி
பாரதி எப்போதும் 2 சிகரெட்டை ஒரே நேரத்தில் அடிப்பாராம்.. அப்படித்தான் அன்றைய தினமும் 2 சிகரெட்டுகளை ஊதி கொண்டிருந்தபோது, இந்த ஜோடிக்குள் திருமண பேச்சு எழுந்துள்ளது.. மீண்டும் தகராறு, சண்டை, வாக்குவாதம், கைகலப்பு வரை சென்றுள்ளது..
அப்போது ஆத்திரத்தில், பாரதியை கடுமையாக தாக்கிவிட்டாராம் உதயசரண்.. இதில் நிலை தடுமாறி பாரதி கீழே விழுந்தபோது, தலையணையால் அவரை அமுக்கியிருக்கிறார்.. அப்போது பாரதியின் பின்கழுத்து எலும்பு உடைந்துள்ளது..
மூச்சுத்திணறல்
இதனால் அதிகாலையில், உதயசரண் தான் வேலை செய்யும் சீலநாயக்கன்பட்டி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சை வரவழைத்து பாரதியை கொண்டு சென்றார்.. ஆனால், பாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர்.
இதற்கு பிறகு, பாரதியின் உறவினர்களுக்கு போன் செய்த பாரதி, மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறியிருக்கிறார்கள்.. அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது பாரதி பிணமாக கிடந்தார்.. மேலும் அவர் அணிந்திருந்த நகையும் காணாமல் போயிருந்தது.. எனவே பாரதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம் செய்தனர்.. பிறகு அதிகாரிகள் விரைந்து வந்து, அவர்களை சமாதானம் செய்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்..
போஸ்ட் மார்ட்டம் அம்பலம்
பாரதியின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பி வைத்தனர். அப்போதுதான், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் பாரதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது... இதற்கு பிறகே உதயசரணை போலீசார் கைது செய்தனர்.
இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், டியூஷன் சென்டர் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது இன்னொரு நபரும் அங்கு வந்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.. அந்த நபர் யார்? என்ற விசாரணையும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.. அதிமுக பிரமுகரின் மகள் கொலை செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் சேலத்தை பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢
5 likes
12 shares