தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நடிகர் ஜெயம் ரவி, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கலும் செய்தார். அடுத்த சில நாட்களில் ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என்றும் மாற்றிக்கொண்டார். பாடகி கெனிஷா என்பவருடன் அவர் நெருக்கமாக பழகிய நிலையில் பொது இடங்களுக்கும் அவருடன் கைகோர்த்து வந்தார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் ரவிமோகன் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கிய நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். அந்த தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக கெனிஷாவையும் இணைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது நெருங்கிய தோழி கெனிஷாவுக்காக தனது மனைவி, 2 பிள்ளைகளை விட்டு விலகிச் சென்ற நடிகர் ரவி மோகன், இப்போது தனது குடும்பத்தையே நிராகரிக்கும் ஒருநிலைக்கு வந்திருக்கிறார். சமீபத்தில் ரவிமோகனின் அப்பா எடிட்டர் மோகன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்த ரவி மோகனுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, நீ மட்டும் அப்பாவை பார்க்க வா, கெனிஷாவுடன் வர வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.
அதனால் தனது அப்பாவை நேரில் வந்து பார்க்காமல் நடிகர் ரவிமோகன் தவிர்த்து விட்டார். சமீபத்தில் ரவிமோகனின் தங்கை மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கெனிஷா இல்லாமல் தனியாக நீ மட்டும் வா என்று குடும்பத்தினர் அழைத்துள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கும் வராமல் ரவி மோகன் புறக்கணித்து விட்டார். இப்படி கெனிஷாவுக்காக மனைவி, பிள்ளைகள் மட்டுமின்றி இப்போது தனது பெற்றோர், சொந்த உறவுகளையும் அவர் நிராகரித்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢 #சினிமா🎬தகவல் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔

