🗞️01 டிசம்பர் முக்கிய தகவல்📺
63 Posts • 34K views
வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.868.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதத்துக்கான 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை ரூ.10.50 குறைக்கப்பட்டு, ரூ.1739.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தாவிலும் விலை குறைந்துள்ளது. #🗞️01 டிசம்பர் முக்கிய தகவல்📺 #😯கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு
19 likes
13 shares
தமிழகத்தில் வரும் 2026-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு அடுத்தாண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. தேர்தலை முன்னிட்டு தற்போதே பல்வேறு கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன நிலையில் தமிழக அரசும் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் 3 மெகா திட்டங்களை டிசம்பர் மாதத்தில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளது. இந்த 3 திட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் திமுக அரசு கடந்த பட்ஜெட்டின்போது, 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் இவர்கள் லேப்டாப்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மாதம்(டிசம்பர்) தொடங்கி வைக்க உள்ள நிலையில் முதல்கட்டமாக வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! மகளிர் உரிமை தொகை இந்த தேதியில் இருந்து கிடைக்கும்- உதயநிதி ஸ்டாலின்..! மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம் கடந்த தேர்தலில் பெண்களை கவரும் வகையில் கொண்டு வரப்பட்டது தான் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதம்தோறும் 15-ந் தேதி தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்த நிலையில் இதுவரை 28 லட்சம் பெண்கள், உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கும் டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் போடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆனால் எத்தனை பெண்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது. பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி மாதம் செயல்படுத்தப்படும் என்றாலும், இந்த திட்டப்பணிக்கான முடிவுகள் டிசம்பரிலேயே எடுக்கப்பட்டுவிடும். கடந்த ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன், ரூ.1000 கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு மட்டும் கொடுக்கப்பட்டு ரொக்கபணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்தாண்டு தேர்தல் வரும் நிலையில் மக்களை கவரும் வகையில் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புடன், ரொக்க தொகையும் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் தேர்தலை மையப்படுத்தி அரசு நிச்சயம் ரொக்கத்தொகை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே 2026 தேர்தலில் முன்னிட்டு, மக்களை வரும் வகையில், லேப்டாப் வழங்கும் திட்டம், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டம் மற்றும் பொங்கல் ரொக்கத்தொகை திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்களை டிசம்பர் மாதத்தில் செயல்படுத்தப்பட அரசு தீவிரம் காட்டி வருகிறது. #🗞️01 டிசம்பர் முக்கிய தகவல்📺 #தமிழக அரசு அறிவிப்பு
17 likes
18 shares