#தஞ்சை
கோடியம்மன்.!
தஞ்சாவூர்.
💐🙏🏻💐
****************
தஞ்சாவூரு
மண்ணுங்க..!
எண்ணிப்பூஜை
பண்ணுங்க..!
💐
சோறு போடும்
ஊருங்க..!
உலகில் நல்ல
பேருங்க..!
💐
நெற்களஞ்சியம்
தஞ்சையே..!
ஈர்க்கும் நமது
நெஞ்சையே..!
💐
தலை யாட்டிப்
பொம்மையே.!
நம்மை ஈர்க்கும்
உண்மையே..!
💐
ஒருவகையில்
நாமும் கூட
தஞ்சாவூரு
பொம்மையே.!
💐
தலை யாட்டிப்
பொம்மையானால்
வாழும் வரை
நன்மையே..!
💐
தஞ்சைப் பெரிய
கோயிலு..!
உலகை ஈர்க்கும்
வாயிலு...!
💐
இராஜராஜ
சோழனை
நம்மால் மறக்க
முடியுமா..?
💐
அவனில்லையேல்
தமிழனோட
வீரம் நெஞ்சில்
படியுமா..?
💐
தஞ்சை புகழ்
கொஞ்சமா..?
எழுத ஏடு
பஞ்சமா..?
💐
தந்த திங்கு
கொஞ்சமே..!
சிவன் பாதம்
தஞ்சமே..!
💐
அருமையான
கோயிலு..!
பக்தி உலகின்
வாயிலு..!
💐
மூலவர் கோடி
அம்மனு.!
வாழ வைப்பா
ஜம்முனு.!
💐
தன் தலையில்
சிவனையே..!
சூடிக் கொண்டு
உள்ளவ...!.
💐
குறைகள்தீர்க்கும்
வல்லவ..!
எல்லோருக்கும்
நல்லவ..!
💐
கோடி நன்மை
செய்வதால்..!
"கோடியம்மன்"
ஆனவ..!
💐
அனைவரையும்
காப்பதால்..!
ஆன்ற சக்தி
தேனவ..!
💐
பச்சைக்காளி
பவளக்காளி
சூலப்பிடாரி
மூவரே..!
💐
வீதி வலம்
வந்தருளும்
உற்சவமூர்த்தி
ஆவரே..!
💐
இந்த மூவர்
திருவிழாதான்
உலகம்போற்றும்
பெருவிழா..!
💐
லட்சக்கணக்கில்
கூடும் கூட்டம்..!
எள்ளுப் போட்டா
எள் விழா..!
💐
பராசர முனிவர்
ஆணை...!
சாந்தா கார
உருவமே..!
💐
தாயைவணங்கும்
பேர்களுக்கு
வராது என்றும்
கருவமே..!
💐
விஜயாலயச்
சோழன் தாங்க
இக்கோயிலைக்
கட்டினான்..!
💐
"கோடியம்மன்"
அருளினாலே
புகழின் உச்சம்
எட்டினான்..!
💐
கோடி நலம்
அருள்வதாலே
"கோடியம்மன்"
பேருங்க..!
💐
தஞ்சன் என்ற
அரக்கன் வந்து
கோடியம்மன்
தன்னிடம்...!
💐
தஞ்சம் புகுந்த
ஊருங்க..!
தஞ்சாவூரு
பேருங்க..!
💐
மதுரை வீரன்
ஐயனாரு
சூரியன்பைரவர்
சந்நிதி..!
💐
இன்னும் பற்பல
சந்நிதிகள்...!
இருக்கு.! தருது
நிம்மதி..!
💐
பில்லி சூனியம்
செய்வினை ஏவல்
இங்கு வந்தா
தீருமே..!
💐
"கோடியம்மன்"
அருளினாலே
செல்வ வளம்
சேருமே.!
💐
அள்ளிக்கொடுக்கும்
வள்ளலான
கோடியம்மா.!
வருகவே..!
💐
வெள்ளி இன்று
வந்தோமம்மா.!
கோரும் வரம்
தருகவே.!
💐🙏💐
🦚 ஓம்சக்திஓம்சக்தி
ஓம்
ஆதிபராசக்தி
ஓம்.
🙏
முருகா முருகா
🦚🙏🦚