திருக்குறள் அனைத்தையும் குறித்து பேசுகிறது.
ஆனால், மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய, மிக முக்கியமான அந்த நான்கு விடயங்களை குறித்த தனியாக எந்த அதிகாரமும் இல்லை.
ஏனென்றால் அந்த நான்கும் இந்து வேத மரபு சார்ந்தவை.
இதுவே கடவுள், மதம், சாதி, குடும்பம் என்று விரிவாக்கம் பெறுகிறது. இதுவே மனிதர்களிடையே சமத்துவமற்ற தன்மையை உருவாக்கி இன்று வரை அதை பாதுகாத்து வருகிறது.
திருக்குறளானது ஒரு மனிதன், தான் சார்ந்த இருத்தலின் அடிப்படையில் அரசாளுபவனாக, துறவியாக இன்னும் பலவாக இருப்பவனின் குணாம்சம்ங்களின் மாசற்ற தன்மை எவ்வாறு இருக்கவேண்டும் என்று கூறுகிறது. அதனால்தான் அது "உலக பொதுமறை" என்று அழைக்கப்படுகிறது.
'பெண்வழிச் சேறல்' என்ற அதிகாரம், மற்றும் சில குறள்கள் இன்றைய பெண்ணியவாதிகள் விமர்சனத்துக்குரியதாக இருப்பதை தவிர்த்து, பொதுவாக நிறைவுள்ளதாக இருக்கிறது.
உண்மையில், திருக்குறள் எந்த நூற்றாண்டில் யாரால் உருவாக்கப்பட்டது என்பதற்கான சரியான வரைமுறை இல்லை.
"நாலடியார்" சமண முனிவர்களால் சொல்லப்பட்டது. அது போல திருக்குறளுக்கு பவுத்த பின்புலம் இருக்கலாமே தவிர, இந்து வேத மரபுக்கும் திருக்குறளுக்கும் துளியும் சம்மந்தமில்லை.
'கீழடி' யில் அறியப்படுவது போல எந்த ஒரு இந்து கடவுள்களும் திருக்குறளில் இல்லை.
அதுவும் பொதுவாக சொல்லப்படும் கடவுள் பற்றிய கருத்துக்கள் கூட மனிதர்களின் வாழ்வியல் நெறிகளுக்கு கீழாக, ஒரு உதாரணமாக மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்துமதத்துடன் திருக்குறளை இணைத்து பேசுவது மாபெரும் அயோக்கியதனமாகும்.
நூற்றுகணக்கான சாமிகளை உருவாக்கி, வித விதமான சடங்குகளை திணித்து நம்மை நம்ப வைத்ததன் பலன் இதுதான்.
இனி அடுத்தது, திருவள்ளுவருக்கு நாமம் போடுவதா அல்லது பட்டை போடுவதா என்ற போராட்டம்தான்.
அறிவுக்கு உதவாத கடவுள் கருத்தாக்கங்கள் 'திருவள்ளுவர்' என்ற பிம்பத்தையும் கடவுளாக மாற்றி, அதன் காரணமாக மதவெறியை வளர்க்க உருவாக்கப்படும் மோசடியை முறியடிப்போம்!
#திருக்குறள்