Failed to fetch language order
bharathiyar
41 Posts • 726K views
Sadhguru/சத்குரு
1K views 9 days ago
மகாகவி பாரதியார் எனும் ஒரு யோகி! மகாகவி பாரதியின் கவிதைகள் தமிழ் உணர்வுள்ள அனைவருக்குமே ஒரு மாபெரும் அனுபவமாகவே இருக்கும். சுதந்திர உணர்வு மட்டுமல்லாது, ஆன்மீக உணர்வையும், ஆழமிக்க உள்நிலை உணர்தலையும் தன் கவிதைகளால் வெளிப்படுத்திய மகாகவி, நம் சுப்பிரமணிய பாரதி! அவரது கவிதையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட சத்குரு, யோகத்தின் அம்சத்தை பாரதி உணர்ந்திருப்பதை உறுதிசெய்கிறார். மேலும் படிக்க: https://isha.sadhguru.org/ta/wisdom/article/bharathiyar #bharathiyar #article #yogi #blog #sadhgurutamil
12 likes
8 shares
இன்று செப்டம்பர் 11 மஹாகவி பாரதியின் நினைவு நாள் **************************************** சிலரைப் பார்த்து நாம் வாய் கூசாமல், “நீ அடுத்த பிறவியில் மிருகமாய் பறவையாய் பாம்பாய் பிறந்திடுவாய்” என்று திட்டி விடுகி றோம். அப்போது அவர்களுடைய மனது மிகவு ம் வேதனைப்படுவதையும் பார்க்கிறோம். ஆனால் இந்தப் பிறவியிலேயே சிலர் மிருக மாய் பறவையாய் பாம்பாய்த் திகழ்வதை நாம் காண முடிகிறது. மனிதன் இப்பிறவியில் எப்படி, எப்போது ஐந்தறிவுப் பிராணியாக மாறுகிறான் என்பதற்கு மகாகவி பாரதியார் விளக்கம் தந்திருக்கிறார். ◆வஞ்சனையால் சமய சந்தர்பத்திற்குத் தகுந்த படி கபடங்கள் செய்து வாழ்பவன் நரி. ◆உற்சாகமில்லாமல் சோர்வாய், சுறுசுறுப்பை தொலைத்துவிட்டு உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. ◆மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு. ◆அற்ப சுகத்தில் ஆழ்ந்து கிடப்பவன் பன்றி. ◆பிறருக்குப் பிரியமாய் நடந்து, அவர்கள் கொடுப்பதை உண்டு வாழ்பவன் நாய். ◆கண்ட கண்ட விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுபவன்வேட்டைநாய். ◆தேடலினால் அறிவைச் சேர்க்காமல், பிறர் சொன்னதைச் சொல்லித் திரிபவன் கிளிப்பிள்ளை. ◆மற்றவர்கள் மரியாதை இல்லாமல் நடத்தினாலும் பொறுத்துப் போகிறவன் கழுதை. ◆வீண் ஆடம்பரத்தில் படோடோபமாக வாழ்பவன் வான்கோழி. ◆தான் சம்பாதிக்காமல் பிறர் சொத்தை அபகரிப்பவன் கழுகு. ◆மாற்றங்களை அங்கீகரிக்க மறுப்பவன் ஆந்தை. பிடித்த பாடல் வரிகள்... ************************* தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதியவுயி ராக்கி - எனக் கேதுங் கவலையறச் செய்து - மதி தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.. #bharathiyar #bharathiyar history.... #Bharathiyar arts and sciences College for womens #bharathiyar kavithai #bharathiyar
27 likes
1 comment 11 shares