✨ சரஸ்வதி பூஜை 🪔🌸
2K Posts • 18M views
#✨ சரஸ்வதி பூஜை 🪔🌸 🌹ஆயுத பூஜை: 🌹ஆயுத பூஜை எதனால் கொண்டாடப்படுகிறது தெரியுமா? தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் விமர்சையாக கொண்டாடப் படும் விழாக்களில் ஒன்று ஆயுத பூஜை. மகா சக்தியான துர்கா தேவியைப் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் விழா தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் 9 வடிவங்கள் வழிபடப்படுகிறது. இந்த விழாவானது, நவராத்திரியின் 9 ஆவது நாள் கொண்டா டப்படும். அன்றைய தினம், மகா நவமி என்றும் அழைக்கப்படுவதுண்டு. 🌹ஆயுத பூஜையின் வரலாறு: புராண கதைகளின் படி ஆயுத பூஜையா னது நவராத்திரியுடன் தொடர்புடையது. தேவி துர்கா, மஹிஷாசுரா என்ற அரக்க னை அஷ்ட மி மற்றும் நவமி சந்திப்பில் கொன்றதாகவும், அதன் பின்னர் வதத்தி ற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேவி கீழே போட்டு விட்டதாக வும் நம்பப்படுகிறது. அந்த நாளை தான் ஆயுத பூஜையாக கொண்டாட தொடங்கினர். மேலும் ஆயுதபூஜை என்பது அரக்க ராஜாவை தேவி துர்கா வீழ்த்தியதன் வெற்றியின் கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது. மகாபாரத புராணத்தின் படி, நாடுகடத்தப் பட்டதன் காரணமாக பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் தனது ஆயுதங்க ளை ஒரு வன்னி மரத்தின் கீழ் மறைத்து வைத்து சென்றான். வனவாசம் முடிந்து ஒரு வருடத்தி ற்கு பின்னர் பாண்டவர்கள் திரும்பியபோது, தாங்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் அதே இடத்தில் இத்தனை நாளாக இன்னும் இருப்பதைக் கண்டு ஆச்சரிப்பட்டனர். ஆயுதங்களை மீட்டெடுத்த பிறகு, அவர்க ள் வழிபாடு நடத்தி, குருக்ஷேத்திர போரு க்கு சென்று வெற்றியை தமதாக்கினர். பின்னர், அவர்கள் விஜயதசமி நாளில் திரும்பி வந்து வன்னி மரத்தையும் வண ங்கி சென்றனர். எனவே இந்தியாவின் சில பகுதிகளில், தசமி நாளில் வன்னி மரங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப் படுகின்றது. 🌹ஆயுத பூஜையின் முக்கியத்துவம்: ஆயுத பூஜை ஆயுதங்களை குறிக்கிறது. பண் டைய காலங்களில், ஆயுதங்களை வணங்கும் நாளாகவே ஆயுத பூஜை திகழ்ந்தது. தற்போதைய நவீன காலக்கட்டத்தில், விஸ்வ கர்மா பூஜையைப் போலவே, கருவி அல்லது கைவினைஞர்களின் கருவிகளுக்கும் மரியா தை செலுத்தும் விதமாக இது மாற்றப்பட்டு ள்ளது. ஆயுத பூஜையானது கைவினைஞர்களு க்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனி ல், ஒவ்வொரு கருவிகளும் அந்தந்த தொழி லில் வெற்றியை அடைய உதவுகின்றன என்று நம்பப்படுகிறது. மேலும், அவர்கள் சிறப்பாக செயல் படுவ தற்கும், வெகுமதி பெறுவதற்கும், வழிபா டு நடத்தப்படுகிறது. ஒரு வியாபார விருதி யந்திரத்தை வழிபடுவ து உங்கள் தொழில்முறை உறவுகளை மேம் படுத்தவும், உங்கள் வணிகத்திற்கு நேர்மறை யான மாற்றத் தை கொண்டு வரவும், தொழி லை விரிவு படுத்தவும் உதவிடும். சமீபத்திய காலங்க ளில், மக்கள் தங்கள் வாகனங்களை யும் வணங்க தொடங்கிவிட்டனர். 🌹ஆயுத பூஜை எவ்வாறு கொண்டாடப்படுகிறது? ஆயுத பூஜை செய்வதற்கான நடைமுறை ஒவ்வொரு மாநிலங்களிலும் வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆயுத பூஜை தினத் தில் பூஜை செய்ய இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்: பூஜை அன்று மாலை நேரத்தில், உங்கள து வீட்டு கருவிகள், தொழில் கருவிகள் அல்லது உங்களது வாகனங்களை கழுவி, சுத்தப்படு த்தி வைக்க வேண்டும். தேவைப்பட்டால் அவற்றிற்கு வண்ணம் கூட தீட்டலாம். மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைக் கொண்டு கருவிகள், வாகனங்களுக்கு திலகமிட வேண்டும். ஆயுதங்களைப்பொறுத்தவரை, நீங்கள் அவற் றை சுத்தம் செய்து கழுவ வேண்டு ம். முன்பு போல் அவற்றிற்கும் திலகத்தை வைக் க மறவாதீர்கள். பூக்களால் ஒரு சுவருக்கு எதிராக, ஒரே வரிசையில் அவற்றை வைக்கவும். ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் சாமந்தி பூ மிகவும் குறிப்பிடத்தக்க மலர். எனவே, அன்றைய தினம் அந்த மலர் கொண்டு பூஜை அறையை அலங்கரியுங்கள். அடுத்த நாள் காலை, மகா நவமி நாளில், தேவி சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி ஆகியோரின் சிலைகள் அல்லது படங்க ளை வைத்து அனைத்து கருவிகளையும் அல்லது ஆயுதங்களையும் வைத்து வணங்குங்கள். சில இடங்களில், ஆயுத பூஜை மந்திரத்தை உச்சரித்த படியே தேவி அபராஜிதாவையும் வழிபடுவார்கள். 🌹ஆயுத பூஜை மந்திரம் ‘ஜெயதே வரதே தேவி தஷ்மயம்பராஜிதே'. தரயாமி பூஜே தக்ஷா ஜெயலாபபவித்தியே. ' இசைக்கருவிகள் மற்றும் புத்தகங்களையும் இதே வழிமுறையில் வணங்கலாம். ஆயுத பூஜை நாளில், இந்த கருவிகள், ஆயுதங்கள் அல்லது புத்தகங்களை ஒருபோதும் பூஜையி ல் இருந்து எடுக்கவோ, நகர்த்தவோ கூடாது. 🌹ஆயுத பூஜை நமக்கு கற்பிப்பது என்ன? ஆயுத பூஜை என்பது ஆயுதங்கள், கருவிகள், வருவாய் ஊடகங்கள் ஆகியவற்றை வணங்கு வதற்கும், நம் வாழ்வில் அவற்றிற்கான பங்குகளைப் பற்றி சிந்திப்பதற்குமான நாளாக கருத வேண்டும். பண்டைய காலங்களில், எதிரிகளை வென்றெ டுக்கும் மற்றும் போர்வீரரைப் பாதுகாக்கும் ஆயுதங்களைப் போற்றி வணங்கும் தினமாகும். ஆனால் இன்றை ய நவீன உலகம் ஆயுத பூஜைக்காக வரையறையை மாற்றியுள்ளது. அதன்படி, நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற உதவும் ஒவ்வொரு சிறுசிறு விஷயங்களுக் கும் நன்றியுடன் இருக்க வேண்டும். 🌹01.10.2025... நேசமுடன் விஜயராகவன்.... #🪔✨ ஆயுத பூஜை 🌸 #🌸🙏 இனிய மகாநவமி நல்வாழ்த்துக்கள் 🪔 #🙏அம்மன் துணை🔱 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
19 likes
25 shares