ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views • 4 months ago
நினைத்தலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம் நடமாடும் தெய்வம் காஞ்சி காமகோடி மஹா பெரியவா கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் காஞ்சி காமகோடி மஹா பெரியவா ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹரஇன்று நம் நவாப், கோட்டையில் இருந்து எந்த வழியாக வெளியேறி, வேட்டைக்குப் போகப் போகிறார் "
(பெரியவா சொன்ன ஜோஸ்யரின் கதை)
சொன்னவர்-பி.எம்.நடராஜ சர்மா மகன்
நான் சொல்லும் நிகழ்ச்சி நடந்து பல வருடங்கள் ஆகிறது. அப்போது என் அப்பா பி.எம். நடராஜ சர்மா, திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றினார். காஞ்சி மகா ஸ்வாமிகள்- ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் மரியாதையும் பக்தியும் கொண்டவர் அவர்.
திருச்சி மாவட்டத்தில், காவிரியின் வடகரையில் உள்ளது நத்தம் கிராமம். ஒரு முறை மகா ஸ்வாமிகள் அங்கு முகாமிட் டிருந்தார். அவர் நடத்தும் ஸ்ரீதிரிபுர சுந்தரி ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் பூஜையை தரிசிக்க விரும்பினார் என் அப்பா. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக் கிழமை இரவில் நத்தம் கிராமத்தை அடைந்தார். பூஜை முடிந்தது. அப்பாவை அங்குள்ள எவருக்கும் தெரியாது. எனவே, எவரும் உபசரிக்கவில்லை. மகா ஸ்வாமிகள் தந்த விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு பந்தலில் ஒரு மூலையில் படுத்து விட்டார் அப்பா. அடுத்து வந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் அப்படியேதான் கழிந்தன! பூஜைகளையும், ஆராதனையையும் கண்ணாரக் கண்டு தரிசித்தார்.
மூன்றாம் நாள் விநாயகர் சதுர்த்தி. சிறப்பு பூஜைகள் முடிந்ததும் ஸ்வாமிகளிடம் பிரசாதம் பெறச் சென்ற என் அப்பா, ‘‘நான் ஊருக்குப் போய் வருகிறேன்!’’ என்றார். நிமிர்ந்து பார்த்த ஸ்வாமிகள், ‘‘முதலில் பிள்ளையாருக்கு முன் உள்ள கொழுக்கட்டையை எடுத்துச் சென்று, நிதானமா சாப்பிட்டப்புறம் வாங்கோ. ஊருக்குப் போறதைப் பத்தி பேசிக்கலாம்!’’ என்றார்.
‘ஊருக்குப் போய் வருகிறேன்’ என்று ஒரு மரியாதை நிமித்தம் சொன்ன தற்கு ‘முதல்ல சாப்பிட்டு வா’ என்கிறாரே ஸ்வாமி கள்?! அப்பாவுக்கு பிரமிப்பு. ‘சரி’ என்று சாப்பிடப் போனார். சாப்பிட்டு முடித்ததும் அப்பாவை அழைத்து விசாரித்தார் ஸ்வாமிகள்.
என் அப்பா, லால்குடி தாலூகாவில் உள்ள புதுக்குடி சீனிவாச ஜோதிடரின் பிள்ளை வழிப் பேரன் என்பதை அறிந்ததும் பெரியவா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என் அப்பாவின் தாத்தாவைப் பற்றியும் அவரது காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்து சொன்னார் ஸ்வாமிகள். அப்பாவுக்கோ ஆச்சரியம்!
ஸ்வாமிகள் தொடர்ந்தார்: ‘‘உன்னோட தாத்தா மலையாள தேசம் போய் ஜோதிஷத்தை முறையா கத்துண்டு வந்தவர். தேவதைகளின் உபாசனையும் உண்டு. அவர், ஆற்காடு நவாபுக்கு ஜோசியர் ஆனது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அப்போது திருச்சி ராப்பள்ளி, ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்தது. நவாப் பிடம் பல ஜோசியர்கள் உண்டு. ஒரு நாள் நவாப் தன் கச்சேரியில் (அரசவையில்) இருந்த ஜோசியர்களுடன், தனது ஆட்சிப் பிரதேசத்தில் இருந்த அனைத்து ஜோசி யர்களையும் அவைக்கு வரும்படி அறிவித்தார். புது ஜோசியர்கள் பலரும் கூடினர். அதுல உன்னோட புதுக்குடி தாத்தாவும் ஒருத்தர்.
கச்சேரிக்கு நவாப் வந்ததும் திவான் எழுந்து நின்று அங்கு கூடி இருந்த ஜோதிடர்களைப் பார்த்து, ‘உங்களுக்கெல்லாம் இன்று ஒரு போட்டி வைக்கப் போகிறார் நவாப். இன்று நம் நவாப், கோட்டையில் இருந்து எந்த வழியாக வெளியேறி, வேட்டைக்குப் போகப் போகிறார் என்று நீங்கள் எல்லோரும் ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுத் தர வேண்டும். எல்லாக் கூடுகளும் முத்திரையிடப்பட்டு எனது பாதுகாப்பில் இருக்கும். நவாப் திரும்பியதும் கூடுகளின் முத்திரைகள் உடைக்கப்பட்டு ஓலைகள் படிக்கப் படும். யார் எழுதியது சரியாக இருக்கிறதோ அவருக்கு நவாப் தக்க மரியாதை செய்வார்!’ என்று அறிவித்தார். உடனே எல்லா ஜோசியர்களும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்று அவரவர் கணக்குப்படி ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுக் கொடுத்தார்கள்.
கடைசியில், அன்று நவாப் கோட்டையின் பிரதான வாசல்கள் வழியாகப் போகவே இல்லை. மேற்கு வாசலின் வடக்குப் புறம் (தற்போது மெயின்கார்டு கேட் எனப்படும் வாயிலுக்கு வடக்கே பெட்ரோல் பங்க் இருக்கும் வழி) கோட்டை மதிலை இடித்து வெளியேறி, மேற்குத் திசையில் உறையூர் நோக்கிக் கொஞ்ச தூரம் சென்றார். பிறகு, வடக்குத் திசையில் திரும்பி காவிரிக் கரை வரை போனார். அதன் பிறகு தெற்கு நோக்கித் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியில் இடிக்கப்பட்ட வாசப்படி (புதுப்படி சந்து என்று தற்சமயம் பெயர்) வழியாக மலைக்கோட்டை வடக்கு வீதியில் நுழைந்தார். பிறகு, கிழக்குத் திசையில் திரும்பி சறுக்குப் பாறைத் தெரு வழியாகக் கிழக்கு ஆண்டார் வீதிக்கு வந்தார். மலையை வலமாக வந்து தற்சமயம் உள்ள சின்னக் கடைத் தெரு வழியாக இப்போ டவுன்ஹால் என்று சொல்லப்படுகிற கச்சேரிக்கு வந்து விட்டார். வேட்டையாடவே இல்லை. நவாப் கச்சேரிக்குத் திரும்பிய பின், ஜோசியர்கள் கொடுத்த கூடுகள் ஒவ்வொன்றும் முத்திரை உடைக்கப்பட்டு பிரிக்கப்பட்டன. ஓலைகள் எடுத்துப் படிக்கப்பட்டன. உன்னோட தாத்தா எழுதிக் கொடுத்த ஓலை ஒன்று மட்டுமே துல்லியமாக நவாப்பின் நடவடிக்கையைக் குறிப்பிட்டிருந்தது. நவாப் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். கச்சேரில இருந்தவர்களும் பிரமிச்சுப் போயிட்டா.
அப்புறம் நவாப், உன்னோட தாத்தாவுக்குப் புதுக்குடியில் 80 ஏக்கர் நிலம் பட்டயம் செய்து கொடுத்தார். மலைக்கோட்டை தெற்கு வீதில மேற்கே ஒரு கருப்புக் கோயில் இருக்கு. அதுக்குப் பக்கம் இரும்புக் கிராதி போட்ட ஒசரமான ஒரு பெரிய வீடு இருக்கு. அதன் எதிரே திண்ணை உள்ள ஒரு சின்ன வீடு உண்டு. இந்த ரெண்டு வீட்டையும் தாத்தாவுக்குக் கொடுத்தார். அந்த 80 ஏக்கர் நிலம், மலைக்கோட்டைப் பகுதியில் தந்த அந்த ரெண்டு வீடுகள் எல்லாத்தையும் சிறுகச் சிறுக தர்ம காரியங்களுக்கே செலவு பண்ணினார்’’ என்று கூறி முடித்தார் மகா ஸ்வாமிகள். இதன் பின் அப்பாவுக்கு ஆசியளித்து வழியனுப்பி வைத்தார் மகா ஸ்வாமிகள்.
மகா ஸ்வாமிகளின் தரிசனத்துக்குப் போய், அவரிடம் இருந்து பூரண அனுக்ரஹமும் பெற்று வந்த என் அப்பா, இந்த சம்பவத்தை அடிக்கடி என்னிடம் சொல்லிப் பெருமைப்படுவார்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்; “இன்னம் உவப்பன் நான்” என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!…"
(பெரியவா பண்ணின வேடிக்கை)
ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.
அவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தமது உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். “கஜானா” சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. “ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்?” என்ற சந்தேகம். பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. “நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, “அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடு”ன்னார்” என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.
“கஜானா” மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் “கஜானா”விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.
“நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்” என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா. அதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா “நீ இல்லாட்டா மடம் நடக்காதோ?” என்றார்.
“அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்” என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.
“சரி! பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன? இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா?” என்றார் பெரியவா
“காத்துண்டு இருக்கேன்” என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.
“அவனை ஏன் கூப்பிடறே? ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன்? நீயும் ஒப்புத்துண்டையே!”
“அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு…..” கஜானா இழுத்தார்.
“அளவு தெரியாட்டா என்ன? இருக்கறதை ஜாடா கொண்டா”
“சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்” என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.
அதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது “சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே? கொண்டா சட்னு”
கஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.
“அதி”க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். “இவ்வளவுதானா?” என்று வேறு கேட்டார்.
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்; “இன்னம் உவப்பன் நான்” என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!…………என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.
பழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று “இன்னும் என்ன இருக்கு” என்று கேள்வி
கஜான வெலவெலத்து போனார்.
“வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே! உசிர் போறதே!” என்ற பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.
“பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்” என்று விக்கினார்.
குழந்தையாக சிரித்த பெரியவா, “இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ?” என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்
Jaya Jaya shankara hare hare shankara
Jaya Jaya Shankara hare hare shankara 🚩🕉🪷🙏🏻 #மகாபெரியவா #ஸ்ரீ மஹா பெரியவா சரணம் #🙏🪔காஞ்சி மஹா பெரியவா ஆன்மீக சிந்தனைகள்🪔🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
14 likes
44 shares