கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼
80 Posts • 682K views
#🌙இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 தி சீனியஸ் ஒன்லி தி கமல்ஹாசன் Ever green ✨ ⭐ Kamal Haasan. ONLY.ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே, எந்தத் தோட்டாவும் என்ன துளைக்காதே!" - கமல் சொல்லி அடித்த `அபூர்வ சகோதரர்கள்' யாரும் ரீமேக் செய்ய அஞ்சும்படியான ஒரு படத்தைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். 31 வருடங்களுக்கு முன்னால் வெளியான அபூர்வ சகோதரர்கள். பொதுவாக இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களைப் பிற மொழியினர், தங்கள் மொழியில் ரீமேக் செய்வார்கள். ஆனால், சிலரின் வெற்றி பெற்ற படங்களைத்தான் மற்றவர்கள் ரீமேக் செய்ய அஞ்சுவார்கள். அதில் முக்கியமானவர் கமல்ஹாசன். அவரின் பெரிய வெற்றிப்படங்களை ரீமேக் செய்யப் பலரும் தயங்குவர், ஏனென்றால் தன் பர்ஃபாமன்ஸ் மூலம் படத்தை இன்னொரு தளத்திற்குக் கொண்டு சென்றிருப்பார் கமல்ஹாசன். நாயகன் படத்தை `தயாவன்' என இந்தியில் ரீமேக் செய்து வினோத் கன்னா பட்ட பாடு நாடறியும். அதுபோல யாரும் ரீமேக் செய்ய அஞ்சும்படியான ஒரு படத்தைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அதுதான் இதே நாளில் 31 வருடங்களுக்கு முன்னால் வெளியான அபூர்வ சகோதரர்கள். `நாயகன்' திரைப்படம் வெளியாகி, பொது மக்கள், விமர்சகர்கள், திரைத்துறையினர் என அனைவரின் பாராட்டைப் பெற்ற பின்னர், கமல்ஹாசனுக்கு ஒரு சுமை ஏறியது. இதற்கடுத்து அவர் சாதாரணமான கதையம்சம் உள்ள படங்களைச் செய்தால் அவருடைய ரசிகர்களும், மக்களும் ஏற்றுக் கொள்வார்களா என ஒரு சந்தேகம் வந்துது. ஏதாவது ஒரு புதுமை படத்தில் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் அவரையறியாமலேயே அவருக்கு ஏற்பட்டது. `நாயகன்' வெளியான அடுத்த மாதத்திலேயே `பேசும் படம்' (புஷ்பக்) வெளியானது. அதுவும் விமர்சகர்களிடத்தில் நல்ல பெயர் பெற்றது. அடுத்து வந்த `சத்யா'வும் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. அனால், அதற்கடுத்து வந்த `சூரசம்ஹாரம்' வழக்கமான போலீஸ் - பழிவாங்கும் கதைபோல இருந்ததால் பெரிதாக எடுபடவில்லை. அதற்கடுத்து வந்த `உன்னால் முடியும் தம்பி' விமர்சகர்களிடம் பாராட்டு பெற்றாலும் எதிர்பார்த்த கமர்ஷியல் வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் கமலின் சொந்தப்படம் `அபூர்வ சகோதரர்கள்' என்று அறிவிப்பு வெளியானது. இரண்டு வேடம் என முதலில் சொல்லப்பட்டது. இயக்கம் சிங்கீதம் சீனிவாசராவ் என்றதும், கமல் ரசிகர்களுக்கு, `இது எந்த மாதிரிப்படமா இருக்கும்' எனக் குழப்பமே ஏற்பட்டது. பின்னர் ஜெமினி சர்க்கஸில் படம் எடுக்கப்படுகிறது, காந்திமதி அம்மாவாக நடிக்கிறார் எனப் பத்திரிகைச் செய்திகள் வந்தன. இரண்டு கமல்ஹாசன்களின் தந்தை வேடத்திற்கு பிரேம் நசீரை கேட்டதாகவும், அவர் உடல்நலம் சரியில்லாதால் கமலே அந்த வேடத்தையும் ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வந்தன. அப்பா கமலின் ஜோடியாக லட்சுமியை முதலில் கேட்டார்கள். அவரோ கமலுக்கு அம்மாவாக நான் நடிப்பதா? எனக்கு அப்பா கேரக்டரில் அவர் நடிப்பாரா எனக் கேட்க, ஸ்ரீவித்யாவை அந்த கேரக்டரில் ஒப்பந்தம் செய்தார்கள். அபூர்வ சகோதரர்களின் வெளியீட்டுற்கு முன்னர் எல்லாப் பத்திரிகைகளிலும் படத்தைப் பற்றிய செய்தியை கவர் செய்திருந்தார்கள். படத்தில் ஒரு வெளிநாட்டுக் கிளி இருக்கிறது. அது வரும் காட்சிகள் எல்லாம் ஹைலைட்டாக இருக்கும் என்றார்கள். `அபூர்வ சகோதரர்கள்' வரும் முன்னர் `வருசம் 16', `ராஜாதிராஜா' ஆகிய திரைப்படங்கள் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தன. பாடல் கேசட் வெளியாகி பாடல்கள் நன்றாக இருந்தாலும், ஆஹா ஒஹோ எனப் புகழப்படவில்லை. ஏனென்றால் தொடர்ந்து அந்த ஆண்டில் சிக்ஸர்களாக அடித்துக்கொண்டிருந்த இளையராஜாவிற்கு அது இன்னொரு சிக்ஸர். அவ்வளவுதான். இளையராஜா - கமல் 1989-ம் ஆண்டு, ஏப்ரல் 14ல் அபூர்வ சகோதரர்கள் வெளியாகியது. உடன் பார்த்திபனின் `புதியபாதை', அவரின் குருநாதர் பாக்யராஜின் `என் ரத்தத்தின் ரத்தமே', பிரபுவின் `பிள்ளைக்காக' ஆகிய படங்களும் வெளியாகின. உண்மையைச் சொல்லப்போனால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் கமல் ரசிகர்கள் போயிருந்தார்கள். 1986-ல் வெளியான விக்ரம் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பைவிட சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், படம் திரையிடப்பட்டதும் எல்லாமே மாறிப்போனது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, நான்கு சமூக விரோதிகளால் கொல்லப்படுகிறார். கர்ப்பமாக இருக்கும் அவர் மனைவிக்கு விஷம் கொடுக்கப்படுகிறது. இதனால் ஒரு மகன் குள்ளமாகவும் (அப்பு), இன்னொரு மகன் வழக்கமானவனாகவும் (ராஜா) பிறக்கிறார்கள். பிரிந்து வெவ்வேறு இடங்களில் வளர்கிறார்கள். தன் குள்ள உருவம் காரணமாக மன வேதனைக்குள்ளாகும் அப்பு, தற்கொலைக்கு முயல, அம்மா வில்லன்களைப் பற்றிச் சொல்ல, பழிவாங்கப் புறப்படுகிறான் அப்பு. பழி, முக ஒற்றுமை காரணமாக ராஜாவின் மேல் விழுகிறது. எப்படி எல்லாம் சுபமாக முடிகிறது என்பதுதான் கதை. இடைவேளை வரை எங்குமே கவனத்தைத் திருப்ப முடியாதபடி கவனமாக நெய்யப்பட்ட திரைக்கதை எல்லோரையும் கட்டிப் போட்டது. இரண்டாம் பாதியும் அதே போலத்தான். படம் முடியும் வரையுமே இது தன் தந்தையைக் கொன்றவர்களை மகன் பழிவாங்கும் படம்தான் என்ற உணர்வே யாருக்கும் வரவில்லை. வில்லன்களின் பெயரில்கூட தர்மராஜ், நல்ல சிவம், அன்பரசு, சத்தியமூர்த்தி எனப் பெயர் வைத்து விளையாடியிருப்பார்கள். அதைவிட இன்னொரு முக்கிய விஷயம், குள்ள உருவத்தில் இருக்கும் கமல் (அப்பு), எப்படி அப்படி நடித்தார், என்று யோசனையே யாருக்கும் வரவில்லை. அப்படி ஒரு திரைக்கதை. காட்சிகளின் பின்னால் நாம் தொடர்ந்து சென்றுகொண்டிருப்போம். படம் முடிந்து வந்த பின்னர்தான், அதைப்பற்றியே யோசிக்கத் தோன்றும். இந்த அப்பு கேரக்டர் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், அந்த ஆண்டு முதல் குறைந்து ஐந்தாறு ஆண்டுகளுக்குக் கல்லூரி கலை விழாக்கள், பள்ளி விழாக்கள் போன்றவற்றில் அப்பு வேடம் அணிந்து (கால்களை மடித்துக் கட்டியோ, அவரவர்க்குத் தோன்றும் விதத்திலோ) பர்ஃபாமன்ஸ்கள் செய்யத் தூண்டியது. 90-களின் ஆரம்பத்தில், இன்னிசைக் கச்சேரி நடத்தும் குழுக்களுக்குப் போட்டியாக, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தும் நாட்டியா, நர்த்தனா போன்ற பெயர்களில் ஏராளமான நடனக் குழுக்கள் தோன்றின. அவற்றிலும் கட்டாயமாக ஒரு அப்பு பர்ஃபாமன்ஸ் இருந்தது. சில இயக்குநர்கள், மக்களுக்குத் தங்கள் படங்களின் மூலம் உணர்ச்சிகளைக் கடத்துவதில் வல்லவர்கள். திரைக்கதை, வசனம், நடிப்பு ஆகியவற்றால் உருக்கமான காட்சிகளை உருவாக்கி, கண்ணீர் சிந்த வைத்துவிடுவார்கள். சில இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். கேமரா கோணங்கள், சிறப்பாக கட் செய்யப்பட்ட காட்சிகள் என்று படம் பார்ப்பவர்களை `அடடே' என்று வியக்க வைத்துவிடுவார்கள். கமல்ஹாசன் போன்ற ஒரு சிலரின் படங்களில்தான் இரண்டும் இருக்கும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, அபூர்வ சகோதரர்கள். எந்த அளவிற்கு மனதை உருக்கும் காட்சிகள் இருந்தனவோ, அந்த அளவிற்குத் தொழில்நுட்பத்திலும் (அப்போது இருந்த வசதிகளைக் கவனத்தில் கொண்டால்) ஒரு பாய்ச்சல் பாய்ந்திருந்தார்கள். குற்றவாளியின் படத்தை சாட்சி ஒருவர் வரைய, அது அப்படியே ஆளாக மாறும் கிராபிக்ஸ் காட்சி தமிழ் சினிமாவிற்குப் புதிது. இப்போது அது `டைம் லேப்ஸ்' எனப் பரவலாக மென்பொருள் செயலிகள் மூலம் செய்யப்படுகிறது. கமலின் குள்ள வேடத்தை எப்படி எடுத்தார்கள் என்று, பல ஆண்டுகள் வரை தயாரிப்புத் தரப்பிலிருந்து சொல்லவில்லை. ஆனால், பின்னர் அந்தப் படத்தில் பணியாற்றிய பல்வேறு கலைஞர்கள் மூலம் தெரியவந்தது. கால்களை மடக்கி, பிரத்யேக பூட்ஸ்கள் அணிந்து, சில சமயம் கேமரா கோணங்கள் மூலம், (ஒளிப்பதிவு : பி.சி.ஸ்ரீராம்) எடுக்கப்பட்ட விதங்கள் தெரிய வந்தது. ஒவ்வொரு படமும் சில கதைக்களங்களில் ஒரு மைல்கல்லை வைத்துவிட்டுச் செல்லும். அதுபோல தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் கதைக்களத்திற்கும், உருவ ஒற்றுமை உள்ள இரண்டு சகோதரர்கள் கதைக்கும் அபூர்வ சகோதரர்கள் படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்திற்குப் பின்னர் இரண்டு சகோதரர்கள் கதையெனில் இருவருக்கும் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு வேறுபாட்டை வைத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தமிழ்சினிமா இயக்குநர்கள் தள்ளப்பட்டார்கள். `அபூர்வ சகோதரர்கள்' படத்தின் வெற்றியில் இன்னொரு முக்கிய பங்கு கிரேஸி மோகனின் வசனங்களுக்கு உண்டு. `பொய்க்கால் குதிரை', `கதாநாயகன்' போன்ற படங்களில் கிரேஸி மோகனின் பங்களிப்பு இருந்தாலும், ஜனகராஜ் - சிவாஜிராவ் - மனோரமா ஆகியோரின் வசனங்கள் மூலம் தமிழ்த் திரையுலகினரால் இப்படத்தின் மூலம் பெரிதும் கவனிக்கப்பட்டார். இளையராஜா இந்தப் படத்திற்குக் கொடுத்த எல்லாப் பாடல்களுமே சிறப்பு என்றாலும், `உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்' காதல் தோல்விப் பாடல்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. `அண்ணாத்தே ஆடுறார்'க்கு துள்ளிசைப் பாடல்களில் ஓர் முக்கிய இடம். கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; எல்லாத் தரப்பு ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் பிடித்த படமாகிப்போனது `அபூர்வ சகோதரர்கள்'. சென்னை, கோவை, மதுரை போன்ற அப்போதைய பெரு நகரங்களிலும் மற்ற மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தப் படம் 50 நாள்கள் வரையிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடியது. பல இடங்களில் வெள்ளி விழா கண்டது. பின்னர் சிறு நகரங்கள், சிற்றூர்கள் என எல்லா இடங்களிலும் அதுவரை இருந்த வசூல் சாதனைகளை முறியடித்தது. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் இந்தப் படம் பல சாதனைகளைப் புரிந்தது. ஓராண்டு கழித்து அப்பு ராஜா என்ற பெயரில் இந்தியில் டப் செய்து வெளியிட்டு அங்கும் பல சாதனைகளைச் செய்தது. முதலில் காந்திமதி, ராஜா கமலை வளர்ப்பவராக எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள், எடிட்டிங்கில் குறைக்கப்பட்ட அப்புவின் சர்க்கஸ் சாகசக் காட்சிகள் ஆகியவை படம் 100 நாள்களைக் கடந்ததும், இடைவேளையில் திரையிடப்பட்டது. அதைப் பார்க்கவும் ரிப்பீட் ஆடியன்ஸ் வந்தார்கள். 1973-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், அதற்கு முன்னரான வசூல் சாதனைகளைத் தகர்த்து இண்டஸ்ட்ரி ஹிட் அந்தஸ்தைப் பெற்றிருந்தது. 1979-ல் வெளியான சிவாஜி கணேசனின் திரிசூலம் அதை முறியடித்தது. 1982-ல் வெளியான `சகல கலா வல்லவன்', `திரிசூலத்தின்' வசூல் சாதனையை முறியடித்தது. சகல கலா வல்லவனின் ஏழாண்டுச் சாதனையை அபூர்வ சகோதரகள் முறியடித்தது. அபூர்வ சகோதரர்கள் கமல் கமலின் திரை வாழ்க்கையில் `அபூர்வ சகோதரர்கள்' ஒரு முக்கியமான படம். தன்னால் இந்தியா முழுக்க ஓட வைக்கக் கூடிய படத்தைத் தமிழிலேயே எடுத்துக் காட்ட முடியும் என நிரூபித்த படம். அதற்கு முன்னர் அந்தந்த மொழிகளிலேயே நடித்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர், படத்திற்கு முன்னதான பேட்டி ஒன்றில்,`` எய்தவனுக்குத் தெரியும் அம்பு எங்கு போய் விழுகுமென்று. நிச்சயம் இது வெற்றிப்படம்" என்று சொல்லியிருந்தார். பின் நடந்தது சரித்திரம். அண்ணாத்தே ஆடுறார் பாடலில் ஒரு வரி வரும். `ஒத்தயா நின்னுதான் வித்தய காட்டுவேன் என் கித்தாப்பு' என்று. அன்று முதல் இன்று வரை தனியாகவே தமிழ்சினிமாவிற்கு அளப்பரிய பங்களிப்பை நல்கிவரும் கமலின் திரைப்பயணத்தில் அபூர்வ சகோதரர்கள் ஒரு மறக்க முடியாத படமாகவே மாறிவிட்டது.
15 likes
8 shares
#🌙இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba! சமகால இளைய தலைமுறையினர், கமல் என்னும் கலைஞனின் முழுமையான பரிமாணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரின் திரைப்பயணத்தில் உள்ள மிகச்சிறந்த திரைப்படங்கள் அனைத்தையும் அவர்கள் பார்த்தாக வேண்டும். . கமல்ஹாசனின் திரைப்பட வரிசையில் மிக முக்கியமான திரைப்படம் ‘மூன்றாம் பிறை’. கமல் மட்டுமல்ல, ஸ்ரீதேவி என்கிற நடிப்புப் பிசாசையும் அறிந்து கொள்ள இந்தப் படத்தை நீங்கள் கட்டாயம் பார்த்தாக வேண்டும். அழகு + திறமை ஆகிய இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற பிரத்யேகமான நடிகைகளுள் ஸ்ரீதேவி முக்கியமானவர் ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்திற்காக ‘சிறந்த நடிகர்’ பிரிவில் கமல்ஹாசனுக்கும் ‘சிறந்த ஒளிப்பதிவாளர்’ பிரிவில் பாலுமகேந்திராவிற்கும் தேசிய விருது கிடைத்தது. ஆனால், ஸ்ரீதேவிக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்பதே பலரின் ஆதங்கமாக இருந்தது. அந்தளவிற்கு அவர் தன் திரைப்பயணத்தில் மிகச் சிறந்த நடிப்பை தந்த படம் இது. அதிலும் கமல்ஹாசன் போன்றதொரு நடிப்பு ராட்சசன் இருந்தும் அவர் தனிப்பட்ட வகையில் பிரகாசித்ததை ஒரு சாதனை என்றே சொல்லலாம். ஓர் இளம் பெண் விபத்தில் சிக்குகிறாள். அவளுடைய நினைவுகள் தற்காலிகமாக அழிந்துபோகின்றன. 6 வயது வரைக்குமான நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனவே, உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் அவள் ஒரு சிறுமிதான். இப்படியொரு குழந்தையை பாலியல் விடுதியிலிருந்து மீட்டெடுக்கிறான் ஓர் இளைஞன். தன்னுடனே வைத்து பராமரிக்கிறான். . ஆனால், இவனுடைய முயற்சியில் ஒரு நாள் அவளுக்கு பழைய நினைவுகள் திரும்புகின்றன. துரதிர்ஷ்டவசமாக இவன் அப்போது அருகில் இருக்க முடியாத சூழல். கடைசி முறையாக இவளைப் பார்த்து விட முடியாதா என்று ஓடி வந்து கீழே விழுந்து அடிபட்டு ரயில் நிலையத்திற்கு வருகிறான். ஆனால், அவளால் இவனை அடையாளம் காணவே முடியவில்லை. “விஜி... சீனு... விஜி...” என்று முன்னர் குரங்கு போல் பாவனை செய்து அவளை சிரிக்க வைத்த சேஷ்டைகளை இப்போதும் செய்து காட்டுகிறான். ம்ஹூம்... அத்தனையும் வீண். ‘விஜி’ என்கிற அவனுடைய தோழி, நினைவு திரும்பி ‘பாக்யலஷ்மி’யாக திரும்பிப் போவதை அவனால் தடுக்க முடியவில்லை. மூன்றாம் பிறை அழுகையும் துயரமுமாக கிளம்பிச் செல்லும் ரயிலின் பின்னாடியே ஓடி வந்து இரும்புத் தூணில் கமல் முட்டிக்கொண்டு கீழே விழும் போது அவருக்கு வலித்ததோ... இல்லையோ... பார்வையாளர்களுக்கு அத்தனை வலித்தது. இந்தியச் சினிமாவின் மிகச் சிறந்த கிளைமாக்ஸ்களைக் கணக்கெடுத்தால் அதில் ‘மூன்றாம் பிறை’ உத்தரவாதமாக இடம் பெறும். கிரிக்கெட் ஆட்டத்தில் ஒருவர் எதிரணியிடம் நீண்ட நேரம் தாக்குப் பிடித்து அதிக ரன்களை எடுத்து அவுட் ஆகியிருப்பார். ஆனால், பரபரப்பான இறுதி ஓவரில் ஒருவர் வந்து அட்டகாசமாக ஆடி மேட்ச்சை வென்று தருவார். பார்வையாளர்களின் கவனம் முழுவதும் இவர் மீது வந்து விழுந்துவிடும். இதிலும் அப்படியே! படம் முழுக்க ஸ்ரீதேவி அபாரமாக ஸ்கோர் செய்திருப்பார். கமலும் சிறப்பாகவே நடித்திருப்பார். ஆனால் கிளைமாக்ஸில் கமல் வெளிப்படுத்திய இந்த அசுரத்தனமான நடிப்பு அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்துவிட்டது. ‘உடலால் இளம்பெண், உள்ளத்தால் 6 வயது சிறுமி’ - இப்படியொரு விநோதமான பாத்திரத்தை ஸ்ரீதேவியைத் தவிர வேறு யாராவது திறம்பட கையாண்டிருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஸ்ரீதேவிக்கு இயல்பிலேயே களங்கமற்ற முகமும் உடல்மொழியும் இருந்ததால் இது சாத்தியமாயிற்று. இந்தப் படத்திலிருந்து ஓர் உதாரணக்காட்சி. கமல் தந்த புடவையை ஸ்ரீதேவி கட்டிக்கொண்டு வர வேண்டும். கமலின் மனக்கண்ணில் ஒரு காட்சி வரும். அதில் புடவை விளம்பரத்தில் வருவது போல் மிக நேர்த்தியான ஒப்பனையுடன் புடவையை கச்சிதமாக கட்டிக் கொண்டு வரும் ஸ்ரீதேவியை மலைப்புடன் பார்ப்பார் கமல். கண்களில் ரொமான்ஸ் பொங்கும். ஆனால், சிறிது நேரத்திலேயே அது தன் பகல் கனவு என்று தெரிந்து விடும். அடுத்த காட்சியில் ‘பப்பரப்பே’ என்று புடவையை கன்னாபின்னாவென்று தன் உடல் மீது சுற்றிக் குழந்தைத்தனமாக நிற்பார் ஸ்ரீதேவி. மூன்றாம் பிறை இந்த சிறிய காட்சிக் கோர்வையில் இரண்டு விதமாகவும் ஸ்ரீதேவி தந்திருக்கும் நடிப்பை மட்டும் பார்த்தாலே போதும், இந்தப் படத்திற்கு அவரை விட்டால் வேறு எவரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று எவருக்கும் தோன்றிவிடும். உடல் ரீதியாக வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் அதில் ஒரு சிறுமியின் உடல்மொழியை வெளிப்படுத்துவது அத்தனை எளிதான விஷயமல்ல. அடக்கி வாசித்தால் சரியாக வராது. மிகையாகச் சென்றால் ‘ஓவர் ஆக்ட்’ ஆகி கதாபாத்திரமே செத்து விடும். இந்த இரண்டிற்கும் இடையில் ஓர் ஆறு வயது சிறுமியின் உடல்மொழியை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதேவி. பாலியல் விடுதியில் இவரைச் சந்திக்கும் கமல், “வீடு எங்க?” என்று விசாரிக்கும்போது “கோயில் பக்கத்துல… குளம் இருக்கும்.. புறால்லாம் இருக்கும்.. கைத்தட்டினா பறந்து போயிடும்” என்று மலங்க மலங்க விழித்து திக்கித் திணறி வீட்டிற்கு வழி சொல்லும் காட்சி அத்தனை அழகு. அதில் ஒரு குழந்தையை மட்டுமே நம்மால் காண முடியும். அது போலவே கமலுடன் ஊட்டியில் ரயிலில் வந்து இறங்கிய பிறகு... திறந்திருக்கும் கம்பார்ட்மென்ட்டின் கதவுகளை வரிசையாக இவர் மூடிக்கொண்டே வருவது சிறார்களுக்கே உள்ள குணாதிசயம். இதை அழகாக வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதேவி. இப்படி அந்தப் பாத்திரத்திற்கேற்ற பல நுண்விவரங்களை இயக்குநர் யோசித்து காட்சியில் வைத்திருந்தாலும், இயல்பு கெடாதவாறு அதை வெளிப்படுத்திய ஸ்ரீதேவிக்கு எத்தனை விருது கொடுத்தாலும் தகும். கைவிரலை சூப்பிக் கொண்டு ஸ்ரீதேவி தூங்கும் ஒரு க்ளோசப் காட்சியில், ஒரு குழந்தையைப் போலவே அவரை நம்மால் உணர முடியும். மூன்றாம் பிறை ஸ்ரீதேவி ஒருபுறம் இப்படி கலக்கிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் அவரை ஓவர் டேக் செய்ய முயன்று கொண்டேயிருப்பார் கமல். ஸ்ரீதேவியைக் காணாமல் ஊர் பூராவும் தேடும் காட்சி ஒன்றே போதும். எங்கும் காணாமல் துயரத்துடன் அவர் வீட்டில் நுழையும் போது, போர்வையை போர்த்திக்கொண்டு திருவிழாவில் காணாமல்போன சிறுமி மாதிரி மலங்க மலங்க விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பார் ஸ்ரீதேவி. அதைக் கண்டதும் கமலின் முகத்தில் தோன்றும் பாவங்கள் அத்தனை அட்டகாசமாக இருக்கும். “சீனு….” என்று அழைத்தபடி கமலை ஓடி வந்து கட்டிக் கொள்வார் ஸ்ரீதேவி. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரீதேவியிடம் மேலதிக பாசத்தைக் காட்டுவார் கமல். சின்ன சின்ன அசைவுகள், முகபாவங்கள் போன்ற மெனக்கெடல்களைத் தந்து ஒரு காட்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதில் கமல் வல்லவர். . இதிலும் குரங்கு போல் மேலே இருந்து குதிப்பது, பல்ட்டி அடிப்பது, ஒரு நாற்காலியில் இருந்து இன்னொன்றிற்கு தாவுவது போன்ற விஷயங்களை மிக அநாயசமாக செய்வார். உடலை இதற்காக தயார் செய்து வைத்திருந்தால்தான் இது சாத்தியமாகும். க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் மலைச்சரிவுகளில் இருந்து வேகமாக இறங்கி, காரில் அடிபட்டு, சகதியில் விழும் காட்சிகள் எல்லாம் அத்தனை இயல்பாக இருக்கும். இந்த இரு பிரதான பாத்திரங்களைத் தவிர இன்னொரு சுவாரஸ்யமான பாத்திரமும் உண்டு. ஆம்.. ‘ச்சுப்பிரமணி... ச்சுப்பிரமணிக்குட்டி’ என்று வாய்க்கு வாய் ஸ்ரீதேவி அழைக்கும் ஒரு நாய்க்குட்டி. ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தின் பார்வையாளர்கள் பெரும்பான்மையோரால் மறக்க முடியாத பெயர் இந்த ‘‘ச்சுப்பிரமணி’... கீச்சென்ற குரலில் அத்தனை அழகாக கூப்பிடுவார் ஸ்ரீதேவி. இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய பாத்திரம் ‘சில்க்’ ஸ்மிதா. கமல் பணிபுரியும் பள்ளியின் முதலாளியின் இரண்டாம் தாரமாக இருப்பார். . வயதான கணவர் என்பதால் தீராத காமத்துடன் ஸ்மிதா, கமல்ஹாசனுக்கு தூண்டில் இடுவது போல் சில காட்சிகள் அமைந்திருக்கும். கவர்ச்சியான பாத்திரம் என்றாலும் கூட இதையும் ஒருவித தனித்தன்மையுடன் படைத்திருப்பார் இயக்குநர். ஆனால், இந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டதற்கு ஒரு நுட்பமான காரணம் உண்டு என்பதை உணர முடியும். உள்ளத்தால் குழந்தையென்றாலும் உடலால் ஸ்ரீதேவி ஓர் இளம்பெண். கமலுடன் அவர் தங்கும்போது கமலுக்கு தன்னிச்சையாக தவறான எண்ணம் ஏதும் தோன்றியிருக்குமோ என்று பார்வையாளர்கள் சந்தேகப்பட வாய்ப்புண்டு. எனவே, கமலை ‘நேர்மையானவர், எளிதில் சபலத்திற்கு ஆளாகாதவர்’ என்பதை நிறுவ, ஸ்மிதாவின் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடியும். ஆனால், ஒரு காட்சியில் ஸ்மிதாவின் அழைப்பை மறுத்த கமல், ‘உங்க கணவரோட உப்பைச் சாப்பிட்டிருக்கேன்’ என்று வசனம் பேசுவது சற்று நெருடல். எனில் கமலுக்கு அது மட்டும்தான் பிரச்னையா என்று தோன்றிவிடும். கவர்ச்சிக்காகத்தான் ஸ்மிதாவின் பாத்திரம் இணைக்கப்பட்டது என்றாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பார் ஸ்மிதா. "...ச்சீனு…” என்று ஸ்ரீதேவி, கமலை அழைப்பது குழந்தைத்தனமாக இருக்கும் என்றால் இவரும் ‘ச்சீனு..’ என்று கமலை கிறக்கத்துடன் அழைப்பது அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். (ஸ்மிதாவிற்கு டப்பிங் குரல் தந்தவர் அனுராதா). “பகவானே... என்ன சோதனை இதெல்லாம்” என்று புலம்பும் மிடில் கிளாஸ் ஆசாமியாகத்தான் பெரும்பான்மையான திரைப்படங்களில் பூர்ணம் விஸ்வநாதனை கண்டிருப்போம். அவர் இதில் ஸ்மிதாவின் கணவராக வருவார். சட்டையைக் கழற்றி விட்டு முகத்தில் மோகம் பொங்க ஸ்மிதாவின் கவுன் ஜிப்பை இவர் கழற்றும் போது நமக்கு அறிமுகமில்லாத ‘வேறொரு ஆசாமியைப்’ பார்ப்பது போல விநோதமாக இருக்கும். (‘பகவானே.. இது என்ன சோதனை!" என்று மனதில் நினைத்திருப்பார் பூர்ணம்.) இளையராஜா பாலுமகேந்திராவின் ரசனையையும் எதிர்பார்ப்பையும் நன்கு அறிந்தவர் அவர். 'மூன்றாம் பிறை’ படத்தின் ஆல்பத்தில் ஐந்து பாடல்கள் உண்டு. இதன் ஆல்பம் என்றாலே பலருக்கும் உடனே நினைவிற்கு வருவது ‘கண்ணே.. கலைமானே’ பாடல்தான். கேட்கும் ஒவ்வொரு முறையும் மனதை உருக வைக்கும் தாலாட்டுப் பாடல் இது. இதை மேடையில் பாடும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் விடுவார் பிரபல பாடகர் உஷா உதூப். தனது பிரத்யேகமான கந்தர்வ கான குரலில் பாடி நெகிழ வைத்து விடுவார் ஜேசுதாஸ். `கண்ணே... கலைமானே’ இந்தப் பாடல்தான் கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடல் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை கண்ணதாசனே அப்போது உள்ளூற உணர்ந்திருந்ததுதான் ஆச்சர்யம். அடுத்த பாடல் ‘பூங்காற்று புதிரானது’. இதுவும் கண்ணதாசன் எழுதியதுதான். பாலுமகேந்திராவின் பிரத்யேகமான ‘மாண்டேஜ் ஷாட்களின்’ மூலம் கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையேயான நேசம் வளர்ந்து வருவது கவிதைத்தனமாக சொல்லப்பட்டிருக்கும். இந்த ஆல்பத்தின் இன்னொரு ‘க்யூட்டான’ பாடல் ‘வானெங்கும் தங்க விண்மீன்கள்’… இன்றைக்கு கேட்டாலும் புத்துணர்ச்சியை அடையும் படி நவீன பாணியில் இசையமைத்திருப்பார் இளையராஜா. படத்தின் துவக்கத்தில் வரும் பாடல் இது. இதன் இறுதியில் நடக்கும் விபத்து காரணமாகத்தான் ஸ்ரீதேவி பழைய நினைவுகளை இழப்பார். இந்தப் பாடலின் ஒரு காட்சியில் ஸ்ரீதேவி நளினமாக நடந்து வருவதைப் பார்க்க அத்தனை அட்டகாசமாக இருக்கும். இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து. எஸ்.பி.பியும் ஜானகியும் அருமையாகப் பாடியிருப்பார்கள். ஸ்ரீதேவிக்கு கமல் ‘நரிக்கதை’ சொல்வது போல் ஒரு பாடல் அமைந்திருக்கிறது. இதை அவர்களே பேசி, பாடி நடித்திருந்தது ஒரு புதுமையான அம்சம். ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தின் நாயகியாக நடிக்க முதலில் ஸ்ரீப்ரியா அணுகப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. ஸ்ரீப்ரியாவும் திறமையான நடிகைதான் என்றாலும் ஸ்ரீதேவியின் அளவிற்கு உயரத்தை எட்டியிருக்க முடியுமா என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. கமல், ஸ்ரீதேவி மீது காட்டுவது ஒரு குழந்தையின் மீது காட்டும் பாசம்தானா, அல்லது அதையும் மீறிய உணர்வா என்பது மிக நுட்பமாக சில காட்சிகளில் பதிவாகியிருக்கும். கத்தி மீது நடக்கும் விளையாட்டு போன்றது இது. இந்த விஷயத்தை மிக லாகவமாக கையாண்டிருப்பார் பாலுமகேந்திரா. புடவையை மிக நேர்த்தியாக கட்டி வரும் ஸ்ரீதேவியை கமல் பார்க்கும் காட்சியில் காதல் தெரியும். அதிலும் சிலவற்றை உணர முடியும். இன்னொரு காட்சியில், கமலின் பக்கத்து வீட்டில் இருக்கும் பாட்டி “ஏம்ப்பா.. இப்படி ஒரு வயசுப் பொண்ணைக் கூட்டிட்டு வந்துட்டியே.. ஊர் உலகம் என்னப்பா சொல்லும்?” என்று ஒரு எதார்த்தமான கேள்வியைக் கேட்பார். “ஊரு கெடக்கு பாட்டி..” என்று சொல்லும் கமல்ஹாசன் ‘என்னமோ தெரில பாட்டி.. அவளைப் பார்த்தவுடனே.. எனக்கு ‘அவ’தான்னு தோணுச்சு’ என்பார். சில காட்சிகள் மட்டுமே வந்தால் பக்கத்து வீட்டுப் பாட்டி நம்மை மிகவும் கவர்ந்து விடுவார். சிறந்த நடிகர் (கமல்), சிறந்த ஒளிப்பதிவாளர் (பாலுமகேந்திரா) என்று இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம், தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வென்றது. 80-களில் வெளியான அதிசிறந்த திரைப்படங்களைப் பட்டியலிட்டால் அதில் ‘மூன்றாம் பிறை’ மிக உறுதியாக இடம் பெறும். அத்தனை சிறந்த படம். கமல் மற்றும் ஸ்ரீதேவியின் அற்புதமான நடிப்பு, இளையராஜாவின் அபாரமான இசை, பாலுமகேந்திராவின் எதார்த்தமான கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் போன்ற காரணங்களுக்காக இந்தத் திரைப்படம் இளைய தலைமுறையினரால் கட்டாயம் கண்டு ரசிக்கப்பட வேண்டிய ஒரு படைப்பாகும். #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 Genius ONLy the Kamal Hassan. முகநூல் பதிவு தரவுகளில் இருந்து
5 likes
12 shares
மருதநாயகம் ஃப்ளாஷ்பேக் மருதநாயகம் படம் இன்னும் ஏன் முடிந்தபாடில்லை என ஆளாளுக்கு கேலி பேசிக்கொண்டிருக்கிறார்கள் இதற்கான பதிலை கந்தசாமி பாலசுப்ரமணியம், சுயாதீன சட்ட வங்கி ஆலோசகர் என்பவர் Quora வில் பதிவு செய்துள்ளதை படிக்க நேர்ந்தது அதை உங்களுக்காக பதிவிடுகிறேன். அவருடைய பதிவு ... 1995 ஆம் ஆண்டில் - ஒரு ரஜினி படத்திற்கான பட்ஜெட் சுமார் 5 - 5.5 கோடிகள். அது ஒரு மெகா பட்ஜெட்டாகக் கருதப்பட்டது. தெலுங்கு படங்கள் மிகவும் விலையுயர்ந்த படங்கள் கூட அரிதாகவே ரூ. 3 கோடிக்கு மேல் செலவாகும், அதே நேரத்தில் மலையாள படங்கள் மிகவும் விலையுயர்ந்த வணிகப் படமாக ரூ. 95 லட்சங்களை எட்டின. இந்தக் கட்டத்தில் கமலின் ஆரம்ப பட்ஜெட் 26 கோடியாக இருந்தது. மெகா பட்ஜெட் படத்தை விட கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகம். இன்று அது ரூ. 600 கோடிக்கு ஒரு படத்தை உருவாக்குவது போல இருக்கும். அப்போது CGI இல்லை, உண்மையான கூடுதல் காட்சிகள் தேவைப்பட்டன. கமல் திரைக்கதையில் 22 காட்சிகள் இருந்தன, அதில் 1500 கூடுதல் காட்சிகளும் 184 குதிரைகளும் தேவைப்பட்டன, கமல் ஜெனரல் குதிரைகளை (அவற்றில் 24) தூய அரேபிய குதிரைகளாக இருக்க விரும்பினார், இதன் விலை ஒவ்வொன்றும் $85000 (சுமார் ரூ. 32 லட்சம்) அல்லது கிட்டத்தட்ட ரூ. 8 கோடி. கமல் ஒரு ரஷ்ய ஹாலிவுட் நிபுணருடன் செட்களைப் பற்றி விவாதித்தார், அவர் 2 செட்களுக்கு $700,000 மற்றும் ஒரு ஒற்றை செட்டுக்கு $850000 - கிட்டத்தட்ட $2 மில்லியன் அல்லது ரூ. 3 செட்களுக்கு ரூ. 8.5 கோடி மற்றும் அவரது கட்டணம் கிட்டத்தட்ட $200K (ரூ. 85 லட்சம்). கமல் பாலிவுட்டில் இருந்து ஆடை வடிவமைப்பாளர்களை விரும்பினார். இப்போது 26 கோடி பட்ஜெட்டுடன் - கமல் ரூ. 5 கோடி முன்பணம் செலுத்த முடிவு செய்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அரண்மனை மூதாதையர் வீட்டின் பங்கை அடமானம் வைத்து ஆழ்வார்பேட்டை நன்மை நிதியிலிருந்து ரூ. 4.5 கோடி கடன் வாங்கினார். மாயவரத்தில் (மயிலாடுதுறை) உள்ள ஒரு பெரிய சொத்தை இந்தியன் வங்கியில் ரூ. 2.6 கோடிக்கு அடமானம் வைத்தார். இந்தப் பணத்தில் சத்யராஜ், நாசர் உட்பட பலருக்கு முன்பணம் செலுத்தினார், மேலும் ரஷ்ய செட் டிசைனருக்கு முன்பணம் செலுத்தி 4 குதிரைகளை வாங்கினார். பின்னர் காட்சிகளும் திரைக்கதைகளும் அதிகரித்தன. 26 கோடி பட்ஜெட் ஒரு காலத்தில் 34 கோடியாக மாறியது, கமல் இந்தி மொழியிலும் அகில இந்திய வெளியீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். குல்ஷன் குமாரின் டி சீரிஸின் பிரதர்ஸ் (அவர்களின் பெயர்கள் எனக்கு நினைவில் இல்லை) நிதி உறுதிப்பாட்டிலிருந்து பின்வாங்கியபோது இது ஒரு செங்கல் சுவரைத் தாக்கியது. அதேபோல் பிரிட்டிஷ் நிறுவனமான ரீகல் மீடியா குழுமம் செலவை மறுபரிசீலனை செய்த பிறகு திட்டத்திலிருந்து பின்வாங்கியது. கமல் பணத்திற்காக நிறைய போராடினார், ஆனால் இறுதியில் கமல் காதலா காதலா, ஹே ராம் போன்ற பிற படங்களில் பணியாற்றியதால் அந்த யோசனை தாமதிக்க வேண்டியிருந்தது. 2006 ஆம் ஆண்டில் - ஒரு அமெரிக்க இந்திய நிறுவனத்திடமிருந்து அவருக்கு சில ஆர்வம் இருந்தது, ஆனால் புதிய பட்ஜெட்டைக் கேட்ட பிறகு அவர்களும் பின்வாங்கினர் (ரூ. 120 - ரூ. 150 கோடி) அவர் தனது குதிரைகளை விஜய் மல்லையா மற்றும் எம்ஏஎம் ராமசாமி ஆகியோருக்கு குறைந்த விலையில் விற்றார், மேலும் 2008 ஆம் ஆண்டில் அவரது சொத்து ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டு அடமானங்கள் இறுதியாக செலுத்தப்பட்டபோது - உயர்நீதிமன்றத்திற்கு (ஏபிஎஃப் அதிகாரப்பூர்வ லிக்விடேட்டர்) ரூ. 3.6 கோடி மற்றும் இந்தியன் வங்கிக்கு ரூ. 2.2 கோடி - ஒரு பெரிய ஹேர்கட். கமல் தான் வழங்கிய எந்த முன்பணத்தையும் ஒருபோதும் திருப்பிக் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் படத்திற்காக கமல் யாரையும் தங்கள் முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்கக் கோரவில்லை, ஆனால் நாசர் போன்ற சில நடிகர்கள் கேட்காமலேயே தங்கள் முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்கள், ஆனால் சத்யராஜ் போன்ற மற்றவர்கள் அவ்வாறு செய்யவில்லை. #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 THE GENIUS ONLY THE KAMAL HASSAN. முகநூல் பதிவு தரவு களில் இருந்து ( புன்னகை மன்னன்) .
18 likes
12 shares