கிருஷ்ணன்
1K Posts • 8M views
ஸ்ரீ (969)🇮🇳🏹🚩🇮🇳ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி/ஸ்ரீ ஜெயந்தி-பதிவு 1 🙏🙏☘🌻🌺🥀🌹☘🙏🙏 எதிர்வரும் ஆடி 31(16/08/25) அன்று ஆடி அஷ்டமி கோகுலாஷ்டமி/ஜென்மாஷ்டமி என்று பல கோயில்களில் கொண்டாடப் படுகிறது.ஆனால் அடுத்த மாதம் ஆவணியில் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த அஷ்டமி திதியும்,ரோஹிணி நட்சத்திரமும் கூடி வருகிறது--ஆவணி 30 (15/09/2025) அன்று.அந்த நாளில் தான்,பல திவ்ய தேசங்களிலும் ஸ்ரீ ஜெயந்தி/ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கொண்டாடப் படுகிறது. ஜென்மாஷ்டமியா ! ஸ்ரீஜெயந்தியா !! 🌷🌺🌻🌼⚘🍁🍀🌹💐 வட இந்தியாவில் பல இடங்களிலும் சூரியனின் சஞ்சாரத்தின் அடிப்படை யில் கணித்த பஞ்சாங்கப்படி, அவர்களுக்கு 16/08 ஸ்ரவண மாத அஷ்டமி.தென்னிந்தியாவில் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், சந்திரனின் சஞ்சாரத்தின் அடிப்படையில் கணித்த பஞ்சாங்கப்படி, அடுத்த மாதம் தான் ஆவணி ரோஹிணி/அஷ்டமி.108 திவ்ய தேசங்களுள் முதல் திவ்ய தேசமும்,பாஞ்சராத்ர ஆகமப்படி யானதுவும் ஆன, ஸ்ரீரங்கத்தில் அடுத்த மாதம் தான், கோயில் ஸ்ரீஜெயந்தி.அடுத்த மாதம்--ஆவணி மாதம் 15/09;அன்று தான் நள்ளிரவிலும் (கிருஷ்ணர் அவதரித்தது நள்ளிரவில் !),காலை உதயத்திலும் அஷ்டமி உள்ளது.எம்பெருமான்கள் அவதரித்த நாட்கள் பெரும்பாலும் திதிகளின் அடிப்படையிலே கணக்கிடப் படுகின்றன--ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ கோகுலாஷ்டமி/ஜன்மாஷ்டமி ,ஸ்ரீ பரசுராம திரிதியை,ஸ்ரீ வராஹ திரயோதசி,நரசிம்ம சதுர்த்தசி ! சில ஆண்டுகளில் ஒரே நாளிலும், ஒரே மாதத்திலும் ஜென்மாஷ்டமியும் ஸ்ரீஜெயந்தியும் வருவது உண்டு. இந்த ஆண்டு ஒரு மாத இடைவெளி ! பாஞ்சராத்ர ஆகமக் கோயில்களி லும்,ஒரு சில வைகானஸ ஆகமக் கோயில்களிலும் அடுத்த மாதம் தான் ஸ்ரீ ஜெயந்தி அனுஷ்டிக்கப் படுகிறது.அந்தந்த திவ்யதேசங்க ளில் கொண்டாடும் வழக்கத்தின் படி அங்குள்ளவர்கள் கொண்டாடலாம். ஆனாலும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள், கோயில் ஸ்ரீஜெயந்தி என்று கொண்டாடப் படுகிறதோ, அன்று கொண்டாடுவதே முறை . (அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்) #கிருஷ்ணன்
12 likes
22 shares