தெரிந்த மந்த்ரம்- தெரியாத பொருள்.
உபநிஷத்துக்கள் காட்டும் வாழ்க்கை கல்வியின்
முதல் அம்சம் பிரார்த்தனை. எதையும் சாதிப்பதற்கு பிரார்த்தனை பூர்வமான வாழ்க்கை தேவை.
வாழ்க்கையை அணுகுகின்ற இந்த தைத்ரீய உபநிஷதமும் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது. (அனுவாகம்-01.)
இந்தப் பிரார்த்தனை பல தேவதைகளிடம் பிராரதிப்பதாக அமைந்துள்ளது.நாம் காணும் வெளி உலகை இயக்குகின்ற ஸ்தூல சக்திகளும்,
கண்ணிற்கு தெரியாத அக உலகை இயக்குகின்ற
சூட்ச்ம சக்திகள் என ஒவ்வொன்றையும், ஒவ்வோரு தெய்வமாக/ தேவதைகளாக கண்டனர்
ரிஷிகள். இந்த தேவதைகள் அபிமானி தேவதை எனப்பட்டனர். ஒவ்வொரு தேவதையும், பிரபஞ்சத்திலும், மனிதனிலும் ஒன்றை இயக்குவதாக கருதப்பட்டது. அவ்வாறே இந்த மந்த்ரம் அமைக்கப்பட்டுள்ளது.
தைத்ரீய உபநிஷத்.
அநுவாகம்-01. சாந்தி மந்த்ரம்.
ஓம் சன்னோ மித்ர: சம் வருண: /
சன்னோ பவத்வர்யமா /
சன்ன இந்த்ரோ ப்ருஹஸ்பதி: /
சன்னோ விஷ்ணுருருக்ரம: /
நமோ ப்ரஹ்மணே / நமஸ்தே வாயோ /
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி /
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி /
ரிதம் வதிஷ்யாமி / ஸத்யம் வதிஷ்யாமி /
தன்மாமவது / தத்வக்தரமாவது /
அவதுமாம் / அவதுவக்தாரம் //
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
கருத்து -
மித்ரன் நமக்கு நன்மை செய்யட்டும்.
வருணன் நமக்கு நன்மை செய்யட்டும். அர்யமான் நமக்கு நன்மை செய்யட்டும். இந்திரனும் ப்ரஹஸ்பதியும் நமக்கு நன்மை செய்யட்டும். எங்கும் நிறைந்தவரான விஷ்ணு நமக்கு நன்மை செய்யட்டும்.பிரம்மனை வணங்குகிறேன், வாயு தேவனே, உன்னை வணங்குகிறேன், நீயே கண்கண்ட தெய்வமாக இருக்கிறாய். கண்கண்ட தெய்வம் என்று உன்னைப் போற்றுகிறேன் ; ரிதம் என்று போற்றுகிறேன், சத்தியம் என்று கூறுகிறேன். அந்தப் பரம்பொருள் என்னைக் காப்பாராக ; அவர் ஆசிரியரைக் காப்பாராக; என்னைக் காப்பாராக, ஆசிரியரைக் காப்பாராக. //.
மித்ர: - மித்ரன்: ந: - நமக்கு: சம் - நன்மை செய்யட்டும்: வருண: - வருணன்: சம் - நன்மை செய்யட்டும்: அர்யமா - அர்யமான்: ந: - நமக்கு: சம் பவது - நன்மை செய்யட்டும்: இந்த்ர: - இந்திரனும்: ப்ருஹஸ்பதி: - பிருகஸ்பதியும்: ந: - நமக்கு: சம் - நன்மை செய்யட்டும்: உருக்ரம: விஷ்ணு: - எங்கும் நிறைந்தவராகிய விஷ்ணு: ந; - நமக்கு: சம் - நன்மை செய்யட்டும்;
: ப்ரஹ்மணே - பிரம்மனை; நம;-வணங்குகிறேன்; வாயோ - வாயு தேவனே; நமஸ்தே - வணங்குகிறேன்; த்வம் ஏவ - நீயே; ச ப்ரத்யக்ஷம் - கண்கண்ட; ப்ரஹ்ம - தெய்வமாக; அஸி - இருக்கிறாய்: ப்ரத்யக்ஷம் - கண்கண்ட; ப்ரஹ்ம - தெய்வம் என்று; த்வாம் ஏவ - உன்னையே; வதிஷ்யாமி - போற்றுகிறேன்; ரிதம் - ரிதம் என்று; வதிஷ்யாமி - போற்றுகிறேன்; ஸத்யம் - சத்தியம் என்று; வதிஷ்யாமி - கூறுகிறேன்; தத் - அந்தப் பரம்பொருள்; மாம் - என்னை; அவது - காப்பாராக; தத் - அவர்; வக்தாரம் - ஆசிரியரை: அவது - காப்பாராக; மாம் -என்னை; அவது - காப்பாராக; வக்தாரம் - ஆசிரியரை; அவது - காப்பாராக.
விளக்கவுரை-
மித்ரன் பிராணனுக்கும் பகலுக்கும் அபிமானி தேவதை, வருணன் அபானனுக்கும் இரவுக்கும் அபிமானி தேவதை, அர்யமான் கண்ணுக்கும் சூரியனுக்கும் அபிமானி தேவதை, இந்திரன் கைகளுக்கும் வலிமைக்கும் அபிமானி தேவதை, பிருஹஸ்பதி வாக்கிற்கும் புத்திக்கும் அபிமானி தேவதை, விஷ்ணு பாதங்களுக்கு அபிமானி தேவதை. ரிதம் என்பது வ்யாவஹாரிக உண்மை
அதாவது ப்ரபஞ்ச ஒழுங்கு முறை ( உதாரணம்: சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறான்), ஸத்யம் என்பது பாரமார்த்திக உண்மை ( உதாரணம்: சூரியன் உதிப்பதோ மறைவதோ இல்லை) (பிரபஞ்சமும் அதன் இயக்கங்களும் எல்லாமே வ்யாவஹாரிக உண்மை- அதனை இறைவன் பின்னின்று இயக்குகிறான் என்பது பாரமார்த்திக உண்மை).
வேதங்களில் மித்ரனையும், வருணனையும் சேர்த்து சொல்லப்படுவது வழக்கம்.
மித்ரன் என்றால் நண்பன் என்று பொருள்.
பூமியிலுள்ள உயிரினங்களின் நண்பன் சூரியன்.
சூரிய தேவனின் ஒளியும் வெப்பமும் இவ்வுல வாழ்கைக்கும்,உணவு உற்பத்திக்கும் இன்றுயமையாதது.அது போல்( வருணன், வாயு) மழை நீர் காற்றும் அத்யாவசியமானது.எனவே முதலில் பஞ்ச பூதங்களை வணங்கி நன்மைகள் செய்யட்டும் என ப்ரார்த்தனை செய்யப்படுகிறது.
மித்ரன்-
ஶ்ரீ ருத்ரம்.
அனுவாகம்-01 மந்தரம்.07.
அஸௌயஸ் தாம்ரோ அருண உத -
-பப்ருஸ்ஸுமங்ங்கல:/
இங்கு ஶ்ரீ ருத்ரரே ஆதித்யனாக போற்றி வணங்கப் படுகிறார். அதாவது சிவந்த நிறமுடையவர் யாரோ, இளஞ்சிவப்பு உடைவர்யாரோ பிறகு பொன்னிறமாக மாறுகிறாரோ என கூறப்பட்டுள்ளது ( பரமசிவன்)
ஶ்ரீ ருத்ரம்-அனுவாகம்-02 மந்த்ரம்-09.
நமோ ரோகிதாய ஸ்தபதயே வ்ருக்ஷாணாம்
-பதயே./
இந்த மந்தரத்தில்- சிவந்த நிறமுடையவரை வணங்குகிறேன் - என கூறப்படுகிறது.ஶ்ரீ ருத்ரரே
சிவந்த நிறமுடைய சூரியன்.
பிரபஞ்சம் என்பது இயற்கை சக்திகளின் முழுமையான வடிவம்.
இவ்வாறு இயற்கை சக்திகளாகவும், அவற்றை பின்னின்று நடத்துபவருமாகிய இறைவன் மாணவனையிம், ஆசானையும்( குருவையும்) காபாற்றட்டும் என இந்த மந்திரத்தில்
வேண்டப்படுகிறது. 🚩🕉🪷🙏🏻
#மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #சமஸ்கிருதம் பலன் #மந்திரம் #🔯 மகத்தான மந்திரங்கள்📿