ShareChat
click to see wallet page

#🙏ஆன்மீகம் #🙏கோவில் #மஹா பரணி தீபம் 🔥🔥 #🙏🔥பரணி தீபம்🔥🙏 #பரணி தீபம் எம பயம் நீங்க, முன்னோர்கள் அருளை பெற்றிட பரணி தீபத்தை ஏற்றுங்கள்..! நட்சத்திரங்களில் உயர்ந்த நட்சத்திரம் பரணி நட்சத்திரம். அந்த நட்சத்திரத்திற்கு உரியவர் எமதர்மன். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் என்பது முன்னோர்களின் வழிபாட்டிற்குரிய மிகச்சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நன்னாளில் நம் முன்னோர்களை வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கும் இருளை நீக்கி வெளிச்சத்தை தரும் அருளை புரிவார்கள். பரணி தீபம் ஏற்றுவதற்கான வரலாறு வசிஷ்ரவீஸ் என்ற முனிவர் ஓரு யாகத்தின் முடிவாக தானம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய மகன் நசிக்கேதன் தனது தந்தையிடம் பல கேள்வியை எழுப்பினான், என்னை யாருக்காவது தானம் தரப் போகிறீர்களா? என்ற கேட்டான். அதற்கு தந்தை ஆம் உன்னை எமனுக்கு தானமாக தரப்போகிறேன், என்று பதில் அளித்தார். எம உலகம் சென்ற நசிக்கேதன் அங்கு எமனிடமும் ஏராளமான கேள்விகளை கேட்டு வரம் பெறுகின்றான். வரங்களையும் நீண்ட ஆயுளையும் பெற்ற நசிக்கேதன் பூலோகத்துக்கு திரும்புகின்றான். பூலோகம் வரும் வழியில், பூலோகத்திலிருந்து எமலோகம் செல்லும் உயிர்கள் பல இருட்டில் பாதை தெரியாமல் தத்தளிப்பதை பார்க்கிறான். எமலோகம் செல்லும் உயிர்கள் சார்பாக திருவண்ணாமலை சிவனிடம் முறையிட்டான் நசிக்கேதன், கார்த்திகை மாதத்தில் திரு கார்த்திகைக்கு முன்பாக வரும் பரணி நட்சத்திர நாளன்று யார் வீட்டில் எல்லாம் பரணி தீபம் ஏற்றுகின்றார்களோ. அந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் முன்னோர்களுக்கு பூலோகம் முதல் எமலோகம் வரை வெளிச்சம் தெரியும், மேலும் அவர்கள் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பெறுவார்கள் என்ற வரத்தை தருகின்றார் சிவபெருமான். அன்று முதல் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபம் ஏற்றும் முறை: இந்த வருடம் 2023 நவம்பர் மாதம் 26-ம் தேதி காலை 4 மணி அளவில் பரணி தீபத்தை ஏற்ற வேண்டும். அன்று மாலை திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வீட்டு வாசலில் இரண்டு தீபம் ஏற்றி விட்டு பின்பு ஒரு சிறிய தட்டிலோ அல்லது வாழை இலையிலோ ஐந்து விளக்குகளை வைத்து நெய் ஊற்றி பரணி தீபம் ஏற்ற வேண்டும். நீங்கள் ஏற்றும் தீபம் கிழக்கு முகம் பார்ப்பது போல ஏற்ற வேண்டும். மனிதன் வாழ்க்கையில் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகளில் இருந்து விமோசனம் பெற இந்த பரணி தீபத்தை ஏற்ற வேண்டும். மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் பரணி தீபம் ஏற்றி , முன்னோர்களின் அருளைப் பெற்று வாழ்வில் இருள் நீங்கி சுபிட்சமாக வாழ்வீராக.

577 காட்சிகள்
12 மணி நேரத்துக்கு முன்