aanmeegam
168 Posts • 914K views
saravanan.
695 views 1 months ago
#aanmeegam 🛕 *_சுப காரியங்கள் செய்ய அஷ்டமி, நவமி திதிகள் ஒதுக்கப்படுவதன் ரகசியம்!_* * 🛕🛕🛕பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதியையும், ஸ்ரீராமர் அவதரித்த நவமி திதியையும் அனைவரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அந்த இரு திதி நாட்களில் யாரும் எந்த சுப செயல்களையும் செய்யத் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். பொதுவாகவே ‘அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது’ என்றொரு பழமொழி உண்டு. ஆனால், நவராத்திரி பண்டிகையின்போது வரும் அஷ்டமி, நவமி மற்றும் பகவான் கிருஷ்ணன் அவதரித்த அஷ்டமி மற்றும் ஸ்ரீராமன் அவதரித்த நவமி ஆகிய நான்கு நாட்களும் மிகவும் உகந்த தினங்களாகக் கருதப்படுகிறது. 8, 17, 26ம் தேதிகளில் பிறந்தவர்கள் அஷ்டமி திதி நாட்களில் எது வேண்டுமானாலும் செய்யலாம். இவர்களுக்கு அஷ்டமியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஏனென்றால், அஷ்டமி என்பது 8வது திதி. அதனால் 8ம் எண்ணில் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அது நன்மையே செய்யும். அதேபோல, 8 என்பது சனி பகவானின் ஆதிக்கம் உடைய எண். மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று எது வேண்டுமானாலும் செய்யலாம். மேலும், சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள், அதாவது ஜாதகத்தில் சனி உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும் அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களை பாதிக்காது. நவமி என்பது 9வது திதி. 9ம் எண்ணில் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவமி மிகவும் விசேஷமானதாக இருக்கும். இது செவ்வாயுடைய ஆதிக்கம் உள்ள திதி. அதனால் செவ்வாயினுடைய மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் நவமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். பொதுவாக, ‘அஷ்டமி, நவமி திதிகளில் தொடங்கும் எந்தக் காரியமும் உருப்படாது’ எனக் கூறுவர் முன்னோர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது; தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர். கோகுலாஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார். இறுதியில்தானே வெற்றி பெற்றார். இதேபோல், நவமியில் பிறந்த ஸ்ரீராமர் அரியணை ஏற்கும் நேரத்தில் மற உடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதேபோல், செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி திதிகள் மிகவும் ஏற்றவையாகும். 🍁🍁🍁
16 likes
11 shares
saravanan.
715 views 1 months ago
#aanmeegam தெரியுமா? பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தன் சிரசில் சூட மயிலிறகை ஏன் தேர்வு செய்தார்?_* * 🛕🛕🛕பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருக்கரங்களில் புல்லாங்குழலோடும் சிரசில் மயிலிறகைச் சூடியவாறு புன்னகையோடும் காட்சி தருவதை நாம் பார்த்திருக்கிறோம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் சிரசில் சூட மயிலிறகை ஏன் தேர்வு செய்தார் தெரியுமா? இதற்குப் பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறது. அதைப் பற்றி இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளலாம். திரேதா யுகத்தின் போது ஒரு சமயம் ஸ்ரீராமரும், சீதாதேவியும் காட்டில் வசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் சீதாதேவிக்கு தாகம் உண்டானது. அவர் ஸ்ரீ ராமரிடம், “ஸ்வாமி. எனக்கு தாகமாக இருக்கிறது. உடனே எனக்கு தண்ணீர் வேண்டும். இந்த பகுதியில் அருந்த தண்ணீர் எங்கே உள்ளது என்று கண்டுப்பிடித்து தண்ணீர் கொண்டு வாருங்களேன்” என்று கேட்டார். உடனே ஸ்ரீராமபிரான் பூமித்தாயிடம் தண்ணீர் வேண்டி பிரார்த்தித்தார். அந்த சமயத்தில் அங்கே தோன்றிய ஒரு மயில் இராமபிரானிடம் வந்தது. “இந்த பகுதியில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னைப் பின்தொடர்ந்து வந்தால் அந்த இடத்தை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்...” - மயில் இவ்வாறு ராமபிரானிடம் கூறியது. ஸ்ரீராமபிரானும், சீதாதேவியும் வழித்தவறிச் செல்லாமல் இருக்க அந்த மயிலானது தனது இறகுகளில் இருந்து ஒவ்வொரு இறகாக பிய்த்து அது தான் சென்ற பாதையில் போட்டுக்கொண்டே சென்றது. அதைப் பின்தொடர்ந்து ராமபிரானும், சீதாதேவியும் சென்று கொண்டிருந்தனர். மயில் ஒரு இடத்தில் குளம் ஒன்றைக் காட்டியது. தண்ணீரைக் கண்ட இராமபிரானும், சீதாதேவியும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சீதாதேவி தண்ணீரை அருந்தி தாகத்தைத் தணித்துக் கொண்டார். ஆனால், அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. வழிகாட்டிய மயில் தனது இறகுகளைப் பிய்த்துப் போட்டதால் அது இறந்து போய்க் கிடந்தது. மயிலின் தியாகத்தை எண்ணி மனம் வருந்திய ஸ்ரீராமபிரான், “உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன். இந்த பிறவி மட்டுமல்லாது எனது அடுத்த பிறவியிலும் உன்னை நான் மறக்கவே மாட்டேன்...” என்று வரமளித்தார். ஸ்ரீ இராமபிரான் பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக பூலோகத்தில் அவதரித்தபோது முந்தைய அவதாரத்தில் வழிகாட்டிய மயிலின் தியாகத்தின் நினைவு கூறும் விதமாக தனது சிரசில் மயிலிறகை சூடிக்கொண்டதாக ஐதீகம். ஒருவர் நமக்குச் செய்த நன்றியை இந்த பிறவி மட்டுமின்றி மறுபிறவியிலும் நாம் மறக்கக் கூடாது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. 🍁🍁🍁
10 likes
6 shares
saravanan.
609 views 1 months ago
#aanmeegam 🛕 *_பொறாமை பார்வை எனும் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்!_* * 🛕🛕🛕வீட்டுப் பெரியவர்கள், ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்று கூறுவதை அடிக்கடி கேட்டிருப்போம். குறிப்பாக, சின்னக் குழந்தைகளுக்கு மற்றவர் கண் படக் கூடாது என்று மை எல்லாம் இட்டு வைப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாழ்க்கையில் ஒரு முறையாவது கண் திருஷ்டி பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதனால் உண்டாகும் பாதிப்பும் அதிகம் என்பதால்தான் பெரியவர்கள் அனுபவத்தில் கண் அடி படக் கூடாது என்று திருஷ்டி சுத்தி போடுவார்கள். ஃபேக்டரி, ஆபீஸ், கடை என அனைத்து இடங்களிலும் கூட கண் திருஷ்டி வரலாம். அதனால்தான் கடைகளிலும் மற்றும் தொழிற்சாலைகளிலும் அமாவாசை தினங்களில் பூசணிக்காயில் திருஷ்டி வைத்து கழிப்பது வழக்கமாக உள்ளது. சின்னக் குழந்தைகளுக்கு ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் திருஷ்டி சுத்தி போடுவார்கள். குழந்தையின் மீதிருக்கும் கண் திருஷ்டியைப் போக்க, கல் உப்பை கையில் வைத்தப்படி மூன்று முறை clock wise மற்றும் anti clock wise முறையில் சுற்றுவார்கள். கல் உப்பு, தேங்காய் மூடி, கற்பூரம், சிவப்பு மிளகாய், வீடுகளின் ஓலைக்குச்சிகள் இவை அனைத்தும் திருஷ்டி கழிக்கப் பயன்படும். இதன் மூலம் கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. அதாவது, பெரியோர்களின் கருத்தின்படி, கல்லால் அடி வாங்கினாலும் ஓரிரண்டு நாட்களில் குணமாகி விடும். ஆனால், இந்த கண்ணடி என்கிற கண் திருஷ்டி இருக்கிறதே, அது முழுவதுமாக ஒருவரை ஆட்டி படைத்து விடும் என்பதே ஆகும். கண்ணடி என்றால் என்ன? வாழ்க்கையில் நாம் எல்லோருமே பொதுவாக இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒருசிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. இன்னும் சிலருக்கு காலதாமதமாகக் கிடைக்கிறது. வேறு சிலருக்கு கிடைத்தாலும் அது கை நழுவிப் போய்விடுகிறது. பல பேர் எதுவும் கிடைக்காமலேயே ஏமாற்றத்தோடு வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாம் நினைத்ததை, கனவில் கண்டதை பெறாவிட்டால் நமக்கு துக்கமாக இருக்கும். அதேசமயத்தில், நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்குக் கிடைக்கும்போது அதிக மன உளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது எரிமலையாக உருவெடுக்கிறது. இந்த தீய எண்ணங்களின் தோற்றம்தான் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகின்றன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோல், மனதில் எழும் தீய குணங்களை நம் முகமே அடுத்தவர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். ஆகவேதான் ஒருசிலரை பார்த்தாலே, ‘அய்யோ… இவன் / இவள் பார்த்து விட்டார்களா? இனி காரியம் ஆன மாதிரிதான் என்று புலம்புவார்கள். இந்த கண் திருஷ்டியானது மனிதர்களை மட்டுமல்லாமல், விலங்குகள், செடி கொடிகள் என எல்லாவற்றையும் பாதிக்கும். உதாரணத்திற்கு நம் வீட்டில் ஒரு மரத்தில் பூக்களோ அல்லது காய்களோ நிறைய தொங்கி, அதைப் பார்த்து யாராவது ‘அய்யோ… இப்படிக் காய் காய்த்திருக்கு... எத்தனை பூ பூத்திருக்கு...’ என்று கூறும்போது சில சமயங்களில் நாம் கண் கூடாகவே பார்த்திருப்போம், அந்த மரம் அடுத்த சிறிது நாட்களிலேயே இறந்து விடும். ஒருவேளை யாராவது கல்லால் அடித்து அந்தக் காயை பறித்திருந்தால் வெறும் காய்களோடு முடிந்து விடும், மரத்திற்கு எந்த விதமான சேதமுமாகாது. நம்முடைய கண்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சிற்கு அத்தனை ஆற்றல் இருக்கிறது. சில சமயங்களில் நம்முடைய கண்ணடியே சில நஷ்டங்களையோ, தோஷங்களையோ உண்டாக்கலாம். ஆகவேதான், நம் முன்னோர்கள் தினசரி பூஜையில் அன்றாடம் கற்பூர ஆரத்தி செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். கற்பூரத்தின் மூலமாகக் கிடைக்கும் ஒளியால் நம் வீட்டிலிருக்கும் எல்லா எதிர்மறை எண்ணங்களும் நீக்கப்படும். இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், நம்முடைய எண்ணம் நன்றாக இருந்தால் அதுவே போதுமானது. நம்மால் நமக்கும் தீமை வராது, மற்றவர்களுக்கும் ஏதும் நேராது. 🍁🍁🍁
11 likes
13 shares
saravanan.
744 views 1 months ago
#aanmeegam 🛕 *_திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியில் மறைந்திருக்கும் மகிமைகள்!_* * 🛕🛕🛕திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதம் தனித்துவமும் மகிமையும் வாய்ந்தது. இது தீராத நோய்களையும் தீர்க்கும் குணமுடையது. சூரபத்மனை போரில் வென்று மயிலாவும் சேவலாகவும் தன்னுடன் வைத்துக் கொண்டவர் முருகப்பெருமான். திருச்செந்தூரில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின்போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பன்னீர் இலையை நேராக வைத்து பார்த்தால் முருகப்பெருமானின் வேல் போன்று காட்சியளிக்கும். திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக்கொள்வது செல்வத்தை சேமிப்பது போலாகும். முருகனுக்கு ஒரு பக்கத்துக்கு ஆறு கரங்கள் என இரு பக்கத்துக்கு மொத்தம் 12 கரங்கள். பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உள்ளன. பன்னீரு இலை என்பதே மருவி, பன்னீர் இலையானது. முருகப்பெருமான் தனது பன்னிரு கரங்களால் விசுவாமித்திரரின் காச நோய் நீங்குவதற்காக திருநீறு அளித்ததின் தாத்பரியம் இது என விவரிக்கிறது தல புராணம். சூரபத்மனை வதம் செய்து முடித்த பின் போர் காயங்கள் ஆற வேண்டும் என்பதற்காக முருகப்பெருமான் தனது பரிவாரங்களுக்கு பன்னிரு கைகளினால் விபூதி பிரசாதம் வழங்கினார் என்பது தல புராணம். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் அசுரர்களை எதிர்த்துப் போரிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னீர் மர இலைகள் வேத மந்திர சக்தி உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன. தாடகை என்னும் பெண்ணை ஸ்ரீராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர ஸ்ரீராமபிரான் கனவில் கூறியபடி செந்தில் ஆண்டவர் இலை விபூதியை தரித்துக் கொண்டு நோய் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி. திருமணத்தடையால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை இல்லாதவர்கள், தீராத நோயினால் தவிப்பவர்கள் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை மனதார வேண்டிக்கொண்டு உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை பெற்று நெற்றியில் வைத்துக்கொண்டால் தீராத நோய்களும் தீரும், தடைகளும் அகலும் என்பது நம்பிக்கை. 350 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிக மூர்த்தி தம்பிரான் செந்தூர் மேல கோபுரத்தை நிர்மாணித்தார். அச்சமயம் பொருள் பற்றாக்குறை ஏற்பட, கூலியாட்களுக்கு கூலிக்கு பதிலாக இலை விபூதியை கொடுத்து தூண்டுகை விநாயகர் கோயில் தாண்டிச் சென்ற பின் திறந்து பார்க்கும்படி கூறினாராம். அதன்படி அவர்கள் திறந்து பார்த்தபோது தத்தம் வேலைக்குரிய கூலி அதில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய்சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு. ‘வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரிழிவு, குன்மம் முதலிய கொடுமையான வியாதிகளும் பூத பிரேத பிசாசங்கள் பற்றியதால் உண்டாகும் துன்பங்களும் உன்னுடைய இலை விபூதி பிரசாதத்தை பூசி கொண்ட மாத்திரத்தில் மறைந்து விடுமே’ என்கிறது ஆதிசங்கரர் அருளிய சுப்ரமணிய புஜங்கத்தின் ஒரு ஸ்லோகம். 🌹🌹🌹
9 likes
19 shares