Failed to fetch language order
🕉️நவகிரகங்கள்
64 Posts • 535K views
*வித்தியாசமான நவகிரகங்கள்* நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் வெவ்வேறு திசையை நோக்கி இருக்கும். அவை ஒவ்வொன்றும் எந்த திசையை நோக்கியுள்ளன என்று தெரியுமா? சூரியன்: கிழக்கு சந்திரன்: மேற்கு செவ்வாய்: தெற்கு புதன்: கிழக்கு வியாழன்: வடக்கு சுக்கிரன்: கிழக்கு சனி: மேற்கு ராகு: தெற்கு கேது: தெற்கு. *ஒரே கல்லில் நவகிரகங்கள்* கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோயிலில் நவகிரகங்கள் ஒரே கல்லில் (நாலடி சதுரம்) செதுக்கப்பட்டுள்ளன. நடுவில் சூரியன் அமைந்துள்ள அற்புதமான சிற்பம்! *தஞ்சைபெரிய கோவில்* *லிங்க வடிவில் நவகிரகங்கள்* தஞ்சைபெரிய கோவிலில் நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்களுக்கு பதில் லிங்க வடிவில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றனர் இந்த நவ லிங்கங்களை சுற்றிவர முடியாத அமைப்பில் உள்ளது *திருப்பைஞ்ஞீலி ஆலய்* *நவக்கிரக குழிகள்* திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் ஒன்பது படிக்கட்டுகளையே நவகிரகங்களாக வழிபாடு செய்கின்றனர்.. சனீஸ்வர பகவானுக்கு அதிபதி எமதருமராஜன். இங்கே, திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் எமதருமனுக்கு சந்நிதி இருப்பதால், சனீஸ்வரரை உள்ளடக்கிய நவக்கிரகத்துக்கு சந்நிதி இல்லை. மாறாக, ராவண கோபுர வாசலை அடுத்து சுவாமியை தரிசிக்கச் செல்லும் போது ஒன்பது படிக்கட்டுகள் இருக்கின்றன. இந்த ஒன்பது படிக்கட்டுகளும் நவக்கிரகங்களாகவே திகழ்கின்றன என்றும் இந்தப் படிகளைக் கடந்து சிவ சந்நிதிக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு கிரக தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பதும் உறுதி. சிவனாரின் சந்நிதிக்கு எதிரில் நந்தி உள்ளது. நந்திக்கு அருகே ஒன்பது குழிகள் இருக்கின்றன. இந்த ஒன்பது குழிகள் தீபமேற்றி, நவக்கிரக வழிபாடாகச் செய்கிறார்கள் பக்தர்கள். உடுப்பியில் உள்ள கோயிலில் ஒன்பது துவாரங்களாக நவகிரகங்களை தரிசிக்கலாம். *சுசீந்திரம் கோவில் மேலிருந்து* *பக்தர்களை பார்க்கும்* *நவக்கிரகங்கள்*.!! சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத்தில் மேல் தளத்தில் நவக்கிரக சிலைகள் உள்ளன. ஒரே கல்லில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அந்த கல்லில் 12 ராசிகளும் இடம் பிடித்துள்ளன. புதிதாக செல்பவர்கள் நவக்கிரக மண்டபத்துக்கு சென்றால் அங்கு வெறும் மேடை மட்டுமே தென்படும். தலையை உயர்த்தி மேலே பார்த்தால் தான் நவக்கிரகங்களையும், ராசிகளையும் காண முடியும். சிவனும், பார்வதி தேவியும் இக்கோவிலில் அமர்ந்து யாகம் செய்தபோது நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிபட்டதால் எல்லா நவக்கிரகங்களும் கீழ் நோக்கி பார்ப்பதாக கூறப்படுகிறது லிங்கத்தை வழிபடும் நவக்கிரகங்கள் உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில். *கடலூர் மாவட்டம், விருத்தாசலம்* *வட்டம் வயலூர் குபேரலிங்க ஆலய* *பெருமுக நவக்கிரகங்கள்*! கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வயலூர் குபேரலிங்கம் /பெருமுக நவக்கிரக கோயில். பழமலைநாதர் கோயில் என்று அழைக்கப்படும் விருத்தாசலம் கோயிலின் எட்டு திக்கிலும் அஷ்ட திக்கு லிங்கங்கள் இருந்துள்ளன. விருத்தாசலத்தின் நேர் வடக்கில் 2கிமி தூரத்தில் உள்ளது வயலூர் கிராமம், இது குபேரதிக்கு ஆகும். அதனால் இங்குள்ள இறைவனுக்கு குபேரலிங்கம் என பெயர். விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள தொடர் வண்டி மேம்பாலத்தினை ஏறிஇறங்கினால் உள்ளது வயலூர் . இங்கு பிரதான சாலையில் ஒரு பெரிய குளத்தின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கிய விநாயகர் கோயில் உள்ளது. அதனை ஒட்டி கிழக்கு நோக்கிய இறைவனாக உள்ளவர் குபேரதிக்கு இறைவன். முன்னர் பெரிய சிவாலயமாக இருந்த இத்தலம் இன்று விநாயகர் தனியாகவும், லிங்கம் தனியாகவும், சண்டேசர் நாகம்,பாதி உடைந்த பைரவர்மூர்த்திகளும் நவகிரகங்களும் தனித்தனி சன்னதி கொண்டு ஒரு சிறிய காம்பவுண்டுக்குள் அடங்கியுள்ளன. இவர் தற்போது உள்ள இடம் ஒரு நீண்ட ஓட்டு கொட்டகை. விநாயகர் சிற்றாலயம் கிழக்கில் உள்ள குளத்தினை நோக்கியுள்ளது அவரின் இடப்புறம் குபேரலிங்க மூர்த்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார், அவரின் எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. வடகிழக்கு பகுதியில் நவகிரகங்கள் உள்ளன. பிற தலங்களில் காண இயலாத காட்சியாக நவகிரகங்களின் முக அமைப்பு பெரிது பெரிதாக உள்ளது இதன் காரணம் அறிய முடியவில்லை இந்த பெருமுக நவகிரகங்கள் அனைவரும் கண்டு தொழவேண்டிய ஒன்று. இந்த குபேர இலிங்கத்தினை வழிபடுவோருக்கு செல்வங்கள் கிடைக்கும் என்பது மட்டுமன்றி, இந்த லிங்கமூர்த்தியின் பூஜைக்கு, திருப்பணிக்கு பொருள் தருவோர், முறையில்லா வழியில் செல்வம் சேர்த்திருந்தாலும், அப்பாவங்கள் விலகும் என்பதும் ஒரு நம்பிக்கை. விசேஷ நாட்களில் மக்கள் குழுவாக வந்து செல்கின்றனர். மேற்கண்ட ஆலயங்களில் காணப்படும் வித்தியாசமான நவகிரகங்களின் படங்கள் கீழே!👇🏻🚩🕉🪷🙏🏻 #நவக்கிரகங்கள் #🕉️நவகிரகங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
14 likes
19 shares