📺நவம்பர் 26 முக்கிய தகவல் 📢
55 Posts • 12K views
தமிழகத்தில் 29ம் தேதி அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. #📺நவம்பர் 26 முக்கிய தகவல் 📢 #தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
75 likes
73 shares
செங்கோட்டையனின் அனுபவமும் செல்வாக்கும், வரவிருக்கும் தேர்தல்களில் தமிழக வெற்றி கழகத்திற்கு பல நன்மைகளை கொண்டு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். செங்கோட்டையனின் இணைப்பால், தமிழக வெற்றி கழகம் பல வழிகளில் பயனடையலாம். செங்கோட்டையன் மூலம் தவெகவிற்கு வரப்போகும் முக்கியமான 10 நன்மைகளை இங்கே பார்க்கலாம். 1. செங்கோட்டையனின் நீண்டகால அரசியல் வாழ்க்கையை அறிந்த மூத்த வாக்காளர்களை தவெக கட்சிக்குள் ஈர்க்க முடியும். இப்போது தவெகவிற்கு இளைஞர்கள் ஆதரவே அதிகம் உள்ளது. வரும் நாட்களில் செங்கோட்டையன் வருகையால் மூத்தவர்கள் ஆதரவு அதிகரிக்கும். 2. அதிமுக மீது அதிருப்தியில் உள்ள பாரம்பரிய வாக்காளர்கள் விஜய் பக்கம் திரும்பலாம். பொதுவாக அதிமுக வாக்குகள் எல்லாமே திமுக எதிர்ப்பு வாக்குகள்தான். இப்போது விஜய் திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். பலமான அதிமுக நிர்வாகிகளின் வருகை காரணமாக.. அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளும் விஜய் பக்கம் செல்வார்கள். 3. மேலும், கட்சியின் உள் கட்டமைப்பு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், கட்டுப்பாடுடனும் செயல்பட வாய்ப்புள்ளது. செங்கோட்டையன் போன்ற மூத்தவர் கட்சியின் ஒழுங்கை நிலைநாட்ட முடியும். 4. தேர்தல் பிரச்சார உத்திகள் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை செங்கோட்டையனின் அனுபவம் மேம்படுத்தும். செங்கோட்டையன் ஜெயலலிதாவின் பிரச்சார திட்டங்களையே வகுத்தவர். அதன்படியே விஜயின் திட்டங்களை அவர் வகுக்க முடியும். 5. செங்கோட்டையன் வருகையால்.. தவெகவில் வாக்குச்சாவடி அளவிலான மேலாண்மை மற்றும் அடிமட்ட ஒருங்கிணைப்பு மிகவும் வலுவடையும். கிராமப்புற மற்றும் பாரம்பரிய வாக்காளர்களிடையே TVK-வின் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6. அரசியல் திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் மிகவும் சீரானதாக மாறும். இளம் கட்சி உறுப்பினர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலையும், mentoring-ஐயும் அவர் வழங்குவார். இது சிக்கலான தேர்தல் சூழ்நிலைகளை எதிர்கொள்ள கட்சிக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். 7. கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடு மிகவும் திறம்பட கையாளப்படும். செங்கோட்டையன் போன்றவர் இருந்தால் வலிமையான பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும். வலுவான நிலைப்பாடுகள், கருத்துக்களை செங்கோட்டையன் வைக்க முடியும். 8. ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரச் திட்டங்கள் தெளிவாகவும், இலக்குடன் கூடியதாகவும் மாறும். செங்கோட்டையன் இணைவது, TVK-க்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கரூர் போன்ற தவறுகள், சொதப்பல்கள் நடக்காமல் இருக்க செங்கோட்டையனின் அனுபவம் உதவும். 9. இது, புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தை, தமிழக அரசியலில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் போட்டிமிக்க கட்சியாக மாற்ற உதவும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 10. அதோடு செங்கோட்டையன் வருகையால் வேட்பாளர்களை தேர்வு செய்வது, அவர்களை இன்டர்வியூ செய்து, வேட்பாளர் லிஸ்டை உருவாக்க முடியும். டெல்லி உடன் செங்கோட்டையனுக்கு இருக்கும் சமீப கால தொடர்புகளும் விஜய்க்கு உதவியாக மாறும். #தவெக வில் இணையும் செங்கோட்டையன்..? #அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் #🔴இன்றைய முக்கிய செய்திகள் #📺நவம்பர் 26 முக்கிய தகவல் 📢
8 likes
7 shares
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நவம்பர் 29 ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் அதிகன மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது #📺நவம்பர் 26 முக்கிய தகவல் 📢 #🌪🌀வருகிறது புதிய புயல் 🌀🌪 #வங்கக்கடலில் புதிய புயல்
9 likes
11 shares
திருச்சூர் அருகே முண்டூரைச் சேர்ந்த தங்கமணி (70), ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது வீட்டின் பின்புறப்பகுதியில் மர்மமான நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். முகத்தில் காயங்கள் இருந்ததால், அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் ஆரம்பத்தில் சந்தேகித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில், தங்கமணி கொலை செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்திய போது, தங்கமணி எப்போதும் அணிந்து வரும் தங்கச் சங்கிலி சம்பவம் நடந்த போது காணப்படவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தங்கமணியின் மகள் சந்தியா (45) மீது போலீசார் சந்தேகத்தைத் திருப்பினர்.ஸவிசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன: கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வந்த சந்தியா, அதே பகுதியைச் சேர்ந்த நிதின் (29) என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். நிதினுக்கு ஏற்பட்ட பணத் தேவையை பூர்த்தி செய்ய, சந்தியா தாயிடம் தங்கச் சங்கிலியை கேட்டுள்ளார். தங்கமணி இதற்கு மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்தியா, தாயின் கழுத்தைப் பிடித்து நெரித்து தள்ளியதால் தங்கமணி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தை விபத்து போல காட்ட சந்தியாவும் நிதினும் சேர்ந்து திட்டமிட்டு அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் #🔴இன்றைய முக்கிய செய்திகள் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺நவம்பர் 26 முக்கிய தகவல் 📢
35 likes
1 comment 51 shares