தேய்பிறை அஷ்டமி
149 Posts • 310K views
தேய்பிறை அஷ்டமி.. கஷ்டங்கள் நீங்கி.. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற பைரவரை வழிபடுங்கள். சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்குத்தான். ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது. பைரவரை, தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மகத்துவங்களைத் தந்தருளும். வைகாசியில் செவ்வாய்க்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு மட்டுமல்ல முருகப்பெருமானையும் வணங்க வேண்டிய நல்ல நாள். அன்றைய தினம் சதாசிவாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. பைரவர் நவகிரகங்களில் சனியின் குருவாகக் கருதப்படுபவர். எனவேதான் பைரவரை வழிபடுவதன் மூலம் சனியின் சங்கட பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும். இந்த நன்னாளில் மாலையில் விளக்கேற்றி பைரவரை வழிபடுவதன் மூலம் நோய்கள் நீங்கும்; கடன் தொல்லைகள் அகலும். இந்த அஷ்டமி திதி செவ்வாய் அன்று வருவது, மிகவும் விசேஷமானது. இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. பைரவரை வணங்கும் முறை : நவகிரக தோஷங்கள் நீங்க பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். இழந்த செல்வத்தை திரும்பப்பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். பைரவ தீபம் என்பது மிளகைச் சிறு மூட்டையாகக்கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவதாகும். சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடைமாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். வீட்டில் செல்வம் செழிக்க அஷ்டமிகளில் பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்த காசுகளை வீட்டில் பணப் பெட்டியில் வைக்கச் செல்வம் செழிக்கும். ஸ்ரீ பைரவரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார முன்னேற்றம், தனலாபம், பயம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பைரவருக்கு மிளகு கலந்த அன்னம் மற்றும் வடை நைவேத்தியமாக படைக்கலாம். அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது போல், பைரவருக்கும் வடைமாலை சாற்றி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். பரிகாரம் : தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் உண்டாகும். சனி மற்றும் ராகு-கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்வது நல்லது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆறு மாதங்கள் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பைரவரை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் : சனி தோஷம், ஏழரை சனி, அஷ்டம சனி, பாத சனி போன்ற துன்பங்களில் இருந்து நிவாரணம் பெறலாம். காலபைரவரை வழிபட்டால் எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும். வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும். பணம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். நன்றியுடன்_ரவிசங்கர் ராஜா, ஆரணி இனிய இரவு வணக்கம் வாழ்க வளமுடன் 🚩🕉🪷🙏🏻 #தேய்பிறை அஷ்டமி 🙏 #🐚 வளர்பிறை அஷ்டமி 🐚 #தேய்பிறை அஷ்டமி #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
15 likes
2 comments 28 shares