தினம் ஒரு கோயில்
2K Posts • 498K views
*பிரம்மனின் தரித்திர* *சாபம் நீங்கிய மதுரை* *காமாட்சி அம்மன் சமேத* *ஏகாம்பரேஸ்வரர் *ஆலயம் பற்றி* *தெரியுமா*? பிரம்மனுக்கு ஏற்பட்ட கர்வத்தினால் விளைந்த பிரம்மனின் சிருஷ்டிக்கு கட்டுப்படாத தரித்திர சாபம் பற்றிய கதை. முன்பொரு சமயம் மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும், மகா விஷ்ணு தாரை வார்க்க, பிரம்மன் திருமணத்தை மதுரையில் நடத்தி வைத்தார். திருமணத்தை நடத்திக் கொடுத்த பிரம்மனுக்கு தட்சணையாக என்ன வேண்டும்?என சிவன் கேட்டார். அதற்கு பிரம்மன் கர்வத்துடன், என் சிருஷ்டிக்கு கட்டுப்படாததை எனக்கு தட்சணையாக தர வேண்டும் என பரிகாசம் செய்தார். சிவனும் பிரம்மனின் கர்வத்தை அடக்க, ”உமது சிருஷ்டிக்கு கட்டுப்படாத தரித்திரத்தையே உமக்கு தட்சணையாக தருகிறோம்,” என்ற கூறிச் சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த பிரம்மன் அன்னை மீனாட்சியிடம், “”தாயே! ஈசன் எனக்கு இப்படி ஒரு விபரீதமான தட்சணை தந்து எனது கர்வத்தை அடக்கி விட்டார். ஈசனால் எனக்கு கிடைத்த இந்த தரித்திர சாபம் நீங்கிட ஒரு வழி கூற வேண்டும்,” என வேண்டினார். அன்னை மீனாட்சியும், “பிரம்மனே!, தாங்கள் இது குறித்து கவலைப்பட வேண்டாம். நான் இந்த மதுரை மாநகரில் காமாட்சியாக வருவேன். அப்போது என்னை வழிபட்டு உமது தரித்திரத்தை போக்கி கொள்ளுங்கள்,” என்று அருளினார். இந்த உலகின் ஆதி நாயகியான பராசக்தி. இந்த பூமியில், பராசக்தியான நான் தனியாக இருந்து எப்படி ஆளப்போகிறேன் என்று நினைத்து முதலில் பிரம்மனை படைக்கிறார். பிரம்மனும் பராசக்தியை வணங்குகிறார். பின் விஷ்ணுவை படைக்கிறார். விஷ்ணுவும் பராசக்தியை வணங்குகிறார். அதன் பின்னரே சிவனை படைக்கிறார். சிவனோ பராசக்தியை கண்டு வணங்காமல், அவரது கண் அழகில் மயங்கி சிரிக்கிறார். (காமாட்சி என்பது ஆசையை உண்டு பண்ணக்கூடிய அட்சி(கண்). இருந்தாலும் பராசக்தியால் படைக்கப்பட்ட பிரம்மனும், விஷ்ணுவும் வணக்கம் தெரிவிக்க நாம் மட்டும் வணங்காமல், அவளது அழகை கண்டு மயங்கி சிரித்து விட்டோமே என நினைத்து சக்தியிடம் நீயும் என்னை விரும்பினால்,என்னில் பாதியாக இருக்க வேண்டும் என்றவுடன் சக்தியும் சம்மதித்து சிவனின் பாதியாக கலந்து விட்டார். அன்னை மீனாட்சி மதுரையில் காமாட்சியாக வந்த வரலாறு மதுரை மீனாட்சி கோயிலுக்கு தெற்கே முற்காலத்தில் மாந்தோப்பு இருந்தது. அந்த தோப்பில் வனகாளி இருந்து அருள்பாலித்து வந்தாள். இந்த காளியை விஸ்வகர்ம குல மக்கள் வழிபட்டு வந்தனர். ஒரு முறை இந்த கோயில் பூஜாரி இரவு பூஜைக்கு பின்,மறதியாக தன் மகனை இந்தக் கோயிலுக்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்தவுடன் பூஜாரியின் மனைவி, மறந்து விட்டு வந்த தன் மகனை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூற, பூஜாரியும் மகனை அழைக்க பூட்டிய கதவை திறந்தார். அங்கு காளியின் உக்கிரம் தாங்க முடியாத பூஜாரி அதே இடத்தில் இறந்தார். பின் காளிக்கு பெரிய அளவில் கோயில் கட்ட நினைத்து, அங்குள்ள மாமரத்தின் அடியில் தோண்டினார்கள். அப்போது சுயம்புவாக ஈசன் தோன்றினார். “ஆம்ர’ என்றால் வடமொழியில் “மாமரம்’ என்று பொருள். மாமரத்தின் அடியில் பாணலிங்கம் தோன்றியதால் இங்குள்ள ஈசன் ஏகாம்பரேஸ்வரர் ஆனார். எனவே காளிக்காக கட்ட நினைத்த சன்னதி, சிவ ஆகம விதிப்படியும், பிரம்மனுக்காக மீனாட்சி கொடுத்த வாக்கின் படியும், காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் சன்னதியாக மாறியது. ஆலயத்தகவல்கள் இறைவன்: ஏகாம்பரேஸ்வரர் இறைவி:காமாட்சி, தல மரம்:மாமரம் கிராமம்/நகரம்:மதுரை மாவட்டம்:மதுரை மாநிலம்:தமிழ்நாடு திருவிழாக்கள்: நவராத்திரி, கார்த்திகை மாதத்தில் சுவாமி, அம்மன் திருவீதி உலா, மார்கழி மாதத்தில் தனுர் மாத விழா, திருவாதிரை ஆருத்ரா தரிசனம், தை மாத சங்கராந்தி. ஆலயத்தின் சிறப்பு: இத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு கிழக்கு, வடக்கு என இரு வாயில்கள் இருந்தாலும் அம்மன் நோக்கியிருக்கும் வடக்கு வாசல் தான் பிரதான வாசல். ஆலயம் திறந்திருக்கும் நேரம்:காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். பிரார்த்தனை குடும்பத்தில் ஏற்படும் வறுமை, குழப்பங்கள், தரித்திரத்தை போக்கி கொள்ளவும், அடுத்தவர்களை பரிகசிப்பதை நிறுத்திக் கொள்வதோடு துன்பங்களை போக்கவும் இக்கோயிலுக்கு சென்று வழிபடலாம். நேர்த்திக்கடன்: தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஆலயத்தின் அமைப்பு: கோயிலில் நுழைந்தவுடன் கொடிமரம் தாண்டி உள்ள மண்டபத்தில் துவார பாலகிகள். இவர்களுக்கு இடதுபுறம் கணபதி, சரஸ்வதி, பிரம்மா. வலதுபுறம் முருகன், லட்சுமி, விஷ்ணு. இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தரிசிக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதே போல அடுத்துள்ள மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜரும், பாணலிங்கமும் இருக்க அருகே ஆதிகாலத்து உக்கிர காளி தற்போது சாந்த சொருப காளியாக வீற்றிருக்கிறார். மேலும் ஐந்துமுகம், பத்து கைகள், முன்று பாதங்களுடன் காயத்ரி தேவி வீற்றிருக்க, அருகே ஏகாம்பரேஸ்வரர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். அன்னை காமாட்சி பிற சிவ ஆலயங்களில் கிழக்கு அல்லது தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். ஆனால் இங்கு அன்னை காமாட்சி வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார். இங்கு காமாட்சியையும், ஏகாம்பரேஸ்வரரையும் ஒரே இடத்தில் நின்று கொண்டு தரிசித்து, இருவரின் அருளையும் ஒரே சமயத்தில் பெறலாம். இக்கோயில் சுவாமிகளின் அலங்காரம் மிகவும் சிறப்பான அம்சமாகும். கோயில் சுற்றுப்பிரகாரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, ஆஞ்சநேயர், தட்சிணாமுர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் இருக்க, ராமலட்சமணருக்கு உதவிய நளபிரம்மா தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார். பிரம்மன் வழிபட்டு தனது தரித்திர சாபத்தை போக்கி கொண்ட ஆலயம் என்பதால் குடும்பத்தில் நிலவும் தரித்திரம், வறுமை நீங்கிட இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வாருங்களேன். இந்த காளியையும் அன்னை காமாட்சியையும் வழிபட்டு வரும் விஸ்வகர்ம குல மக்கள் தரித்திர நிலை இல்லாமல் செழிப்புடன் வாழ்கின்றனர் என்பது செவிவழிச்செய்தி. ஆலய முகவரி:தெற்கு மாசி வீதி, மதுரை மெயின், மதுரை, தமிழ் நாடு 625001 இந்த ஆலயத்தின் படங்கள் கீழே!👇🏻🚩🕉🪷🙏🏻 #🔱காமாட்சி அம்மன்🙏 #ஸ்ரீ காமாட்சி பரமேஸ்வரி அம்மன் ஆலயம் சிங்கம்புணரி🙏 #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
19 likes
13 shares
*நரசிம்மர் ஆலயங்கள் 08* *சோளிங்கர் நரசிம்மர்* *ஆலயம்* சென்னையில் இருந்து 100 கல் தொலைவிலும் வேலூரில் இருந்து 50 மைல் தொலைவிலும் அமைந்திருக்கும் ஆலயம் . காஞ்சிபுரத்துக்கும் திருப்பதிக்கும் இடையில் அமைந்திருக்கும் இந்த சோளிங்கர் நரசிம்மர் ஆலயம், மகா விஷேஷமான ஆலயம் வைஷ்ணவ திவ்யதேசங்களில் இது 65ம் தலம் மகா புண்ணியமானது. வடமொழியில் "பிரம்ம கைவர்த்த புராணத்தில்" இதன் சிறப்புக்கள் சொல்லபட்டிருக்கின்றன நரசிம்ம ஆலயங்களில் தொன்மையானது இதுதான், இதன் வரலாறு சப்தரிஷிகளிடம் இருந்து துவங்குகின்றது பகவானின் அவதாரங்களில் உடனே நடந்து மின்னல் வேகத்தில் பலன் கொடுத்தது நரசிம்ம அவதாரம், எவ்வளவு பெரிய இக்கட்டில் ஒருவன் சிக்கினாலும் இனி தப்பவே முடியாது என பெரும் நெருக்கடியில் வீழ்ந்தாலும் அங்கு ஓடிவந்து அவனை காக்கும் அற்புதமான சக்தி நரசிம்ம அவதாரத்துக்கே உண்டு நாளை வா என்றோ பின்னர் தருகின்றேன் என்றோ சொல்லாமல் நினைத்த மாத்திரம் வந்து வரமருளும் நரசிம்ம மூர்த்தியினை அதுவும் அதுவேண்டுமா இதுவேண்டுமா என கேட்காமல் இதுதானே வேண்டும் என செயலில் காட்டும் அவதார மூர்த்தியினை தரிசிக்கும் விருப்பம் சப்தரிஷிகளுக்கு உண்டாயிற்று அதுவும் உக்கிர நரசிம்மரை தவிர்த்து தங்களை போல் தவக்கோலத்தில் அமைதியாய் உலகை இயக்கும் கோலத்தில் இருக்கும் யோக நரசிம்மரை காண விரும்பினார்கள். வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் என ஏழுபேரும் மிகுந்த தவமிருந்து பகவானின் யோக நரசிம்ம‌ காட்சியினை ஒரு கடிகை அதாவது 24 நிமிடம் கண்ட தலம் இது பிரகலாதனை காக்க பகவான் வந்து நின்ற நேரம் ஒரு கடிகைதான் அது 24 நிமிடம் என வரையறுக்கபடும் . பழைய கால நேர அளவு, கடிகாரம் எனும் சொல் இதில் இருந்துதான் வந்தது இவ்வாறு 24 நிமிடங்கள் அந்த சப்தரிஷிகள் பகவானை மனதார கண்ணார தரிசித்த தலம் இது. அப்படியே அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பகவானும் இங்கு வந்து தன்னை 24 நிமிடம் தரிசிப்போர்க்கு முக்தி என திருவுளம் பற்றிய தலமும் இதுதான். ஆம், இத்தலத்தில் 24 நிமிடங்கள் தரிசித்தால் முக்தி. இங்கு எந்த காணிக்கை வேண்டாம், நேர்ச்சை வேண்டாம், மந்திர வழிபாடு யாகம் என எதுவும் வேண்டாம், 24 நிமிடங்கள் அவர் சன்னதியில் நின்றால் எல்லா தோஷமும் சரியாகும் மனதில் எண்ணியது பலிக்கும். இத்தலம் மிக பழமையானது . கடிகாசலம் அதாவது கடிகைமலை என அழைக்கபட்டது. பின் சோழர்கள் ஆட்சியில் இது சோழபுரமாகி பின் சோழிங்கர் என்றாயிற்று சோழி என்றால் காவல், கவசம் எனும் பொருளும் உண்டு. எல்லோருக்கும் காவல் தரும் நரசிம்மரின் தலமாதனால் சோழிங்கர் என்றாயிற்று என்பதும் ஒரு கோணம் இந்த தலம் இரு கோவில்களை கொண்டது மலையடியில் உற்சவராக பக்தவச்சலம் எனும் பெயரில் சுதாவல்லி, அமிர்தவல்லி என இரு தேவியரோடு எழுந்தருளியிருக்கின்றார். மூலவர் மலை மேல் ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். பக்தவத்சலம் என்றால் பக்தர்மேல் அன்புகொண்ட பெருமாளின் மலை என பொருள். 1035 படிகள் கொண்ட மலைபாதையில் கோவிலுக்கு செல்லும் வழியில் சங்கு சக்கரம் ஏந்திய அனுமர் சிலையினை காணலாம். அம்முனிவர்கள் தவமிருந்தபோது காலகேய அசுரர்கள், கும்போதர அசுரர்கள் அட்டகாசம் செய்தார்கள். அவர்களை தடுக்க அனுமனுக்கு தன் ஆயுதங்களை கொடுத்து பகவான் அனுப்பினார் என்பது புராண செய்தி. பகவானே இங்கு தன் பக்தர்களை அனுமனுடன் காக்கின்றார் என்பது இதன் தாத்பரியம். இந்த ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது சிறப்பு. மலையில் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளதாக ஆலயம் அமைந்துள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். அனுமன் காவல் காப்பதால் இங்குள்ள குளம் அனுமன் தீர்த்தமாயிற்று. இதில் நீராடுவது நல்ல பலனை தரும். இது மிக தொன்மையான தலம் என்பதாலும், பகவானே யோக நிலையில் இருப்பதாலும் ஆழ்வார்களெல்லாம் மங்கள சாசனம் செய்தார்கள். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது. நம்மாழ்வார் தவிர பல ஆழ்வார்கள் வந்து பணிந்த ஆலயம் இது. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்து வணங்கி அருள் பெற்றது வரலாறு. வைகுண்டம், திருபாற்கடல், திருவேங்கடத்துக்கு இணையாக போற்றபடும் தலமும் இதுதான். இங்கு வேண்டி கொண்டால் 24 நிமிடம் அமர்ந்து பகவானை மனமொன்றி தியானித்தால் எல்லா சிக்கலும் தீரும். குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். தொழில் வளரும் பெரும் வாழ்வு கிட்டும் இங்கு சொந்தமாக நிலம் வாங்கி வீடுகட்டி குடியேற விரும்புவோர் செய்யும் வினோத வழிபாடு ஒன்று உண்டு. அதன்படி மலைக்கு செல்லும் வழியில் கிடக்கும் கற்களை எடுத்து சென்று கோவில் முன் கல்லின் மேல் கல் அடுக்கி வழிபடுவார்கள். அந்த வழிபாடு நிச்சயம் சொந்தவீட்டை கொடுக்கும். இதற்கு சாட்சிகள் ஏராளம் இங்கு நரசிமம்ம தீர்த்தம் உண்டு. அது விஷேஷம் இங்கு நீராடுவதால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் இந்த தலம் பாற்கடலுக்கும் வைகுண்டத்துக்கும் ஈடானது என்பதால் இங்கு தான தர்மம் செய்வதும் இதர வழிபாடுகளை செய்வதும் கயாவில் செய்வதற்கு ஈடானது. சில துண்டு கற்கண்டுகளுக்கும், ஒரு கட்டி வெல்லத்துக்கும், வாழைபழ நைவேத்தியத்துக்கும் ஓடிவந்து அந்த எளிய பக்திக்கே இங்கு அருள்புரிவார். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம். இங்கு வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியை வணங்கினால் எல்லா நலமும் அடையலாம் வேண்டியன கிடைக்கும். இது கயாவுக்கு ஈடான தலம் என்பதால் இங்கு தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம் தானம் தவம் முதலியன செய்தால் பரம்பரை செழித்து வாழும் வம்சம் தொடரும். மாசி மாதத்தில் சூரியோதயத்தின் போது பிரம்ம தீர்த்தத்தில் நீராடிக் பகவானை தியானித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கும். பிரம்மதீர்த்தினருகில் பைரவ தீர்த்தம் இருக்கிறது. அதில் திங்கட்கிழமையில் நியமுடன் நீராடினால் பூதபிசாசுகளால் வரும் தொல்லை நோங்கும். இந்த ஆலய நரசிம்ம பகவானின் கண்கள் 11 மாதம் மூடியிருக்கும். கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பு நடைபெறும், கார்த்திகையில்தான் பகவான் கண்விழிப்பார் என்பதை மிக அழகாக காட்டும் ஏற்பாடு இது. வேறெங்கும் இந்த ஏற்பாட்டினை காணமுடியாது. சோளிங்கர் ஆலயம் சக்தி மிக்கது. நவகிரகங்களால் ஏற்படும் தொல்லை முதல் பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வரை இங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் எல்லா சிக்கலும் தீரும் பலமிக்க எதிரிகள், எப்பக்கமும் பெரும் சிக்கல்கள், உயிராபத்து இதர பெரும் அழுத்தங்கள் கொண்டவர்கள் இங்கு வந்து வணங்கினால் நரசிம்மர் எல்லா விக்னங்களையும் நொடியில் அழித்து உங்களுக்கு காவல் தருவார். இந்த தலம் மன அமைதி தரும் தலம், அம்மலையில் இருக்கும் மூலிகளின் காற்றே பாதி நோயினை தீர்த்து நலமெல்லாம் தரும். வேலூர் பக்கம் செல்லும் போது இந்த சோளிங்கரை தரிசிக்க மறவாதீர்கள். அவருக்கு கல்கண்டும் வெல்லமும் வாழைபழமும் கொண்டு சென்று மனமொன்றி தரிசனம் செய்யுங்கள். நெய்விளக்கேற்றிவிட்டு 24 நிமிடம் அவர் சன்னதியில் அமர்ந்திருங்கள். அது போதும் அது மட்டும் போதும். கருணையே உருவான நரசிம்மம் உங்கள் சிக்கல் எதுவோ, உங்கள் ஆபத்து எதுவோ, எது உங்களை மிரட்டி அஞ்சவைக்கின்றதோ, எது உங்களை மனதால் வாட்டுகின்றதோ அதையெல்லாம் தீர்த்து எல்லா சிக்கலிலும் இருந்தும் உங்களை விடுவிப்பார். இது சத்தியம். பிரம்ம ரிஷியார். 🚩🕉🪷🙏🏻 #ஸ்ரீ நரசிம்ம பெருமாள் #🙏 லட்சுமி நரசிம்மர் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
29 likes
31 shares
*பைரவர் ஆலயங்கள்* *தாடிக்கொம்பு* *சௌந்தரராஜ* *பெருமாள் கோவிலில்* *அருள் பாலிக்கும்* *சகல செல்வங்களையும்* *தந்தருளும் சொர்ண* *ஆகர்ஷண பைரவர்*! திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி. அஷ்ட பைரவர்களில், சொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோவிலில், சிவப்பெருமானின் ஒரு அவதாரமாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றால் பொன்னை இழுத்து தருபவர் என்று பொருளாகும். இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து வழிபாடு செய்கின்றனர். அந்த நாளில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம்; தொல்லைகள் நீங்கி, வாழ்வில் முன்னேறலாம். தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது ஆயிரம் லிட்டர் அளவில் பாலபிஷேகம் சிறப்புற நடைபெறுகிறது. அந்த நாளில், தீபமேற்றி அவரை வழிபட்டால், சொத்துப் பிரச்னைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் அருள் பாலிக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் படங்கள் கீழே!👇👇🚩🕉🪷🙏🏻 #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #🌷🌹தேய்பிறை அஷ்டமி பைரவா நாதா போற்றி🌹🐕 🐕 #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
48 likes
41 shares