
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
கிட்னி பழுதா? சிறுநீரக கோளாறா?
சத்தியத்திலும் சத்தியம். உண்மையிலும் உண்மை. உங்களுக்கு கிட்னி பழுதா? சிறுநீரக கோளாறா? குணமடைய வேண்டி சென்று தரிசிக்க வேண்டிய கோயில்.
பஞ்ச நதன நடராஜர்" ஸ்தலம் ஊட்டத்தூர்.
திருச்சி To பெரம்பலூர் சாலையில் பாடாலூர் என்ற ஊரிலிருந்து வலதுபுறமாக திரும்பி 6 கி.மீ சென்றால் ஊட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் பஞ்ச நதன நடராஜரை தரிசிக்கலாம். சிறுநீரக நோயை போக்கி கொள்ளலாம்.
அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநதன கல்லில், ஒரே கல்லால் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. இந்த வகை தெய்வ சிலை தற்போது வேறு எங்குமே கிடையாது
சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரிய தலம் ...
சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.
இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து வணங்கி மீண்டும் இந்திர பதவியை பெற்றார்.
பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.
பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் சந்நிதிக்கு முன் பிரம்ம தீர்த்தம் கிடையாது.
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்!
ஊட்டத்தூர், திருச்சி மாவட்டம்.
திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது
மூலவர் : சுத்தரெத்தினேஸ்வரர்
அம்பாள் : அகிலாண்டேஸ்வரி
நடை திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
ஸ்தல வரலாறு......
பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது.
ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.
ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.
அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.
அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடலூர் என அழைக்கப்பட்டது. இந்த பாடலூர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் உள்ளது.
(இந்த எல்லையின் பெருமை தெரிந்தும், வணங்காமல் உதாசீனம் செய்து பாடாலூரை கடக்கமுயலும் வாகன ஓட்டிகளில் பலர் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். நெடுஞசாலை துறையினரால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் பாடலூருக்கு சில கிலோமீட்டர் முன்பே "விபத்துப்பகுதி; எச்சரிக்கையாக செல்லவும்" என்ற எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளது.)
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின் போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது.
மேற்கூரையில் நவக்கிரகங்கள்:
ஊட்டத்தூர் சுத்தரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சமும் உள்ளது. அது கோவில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. அதன் அருகிலேயே 9 கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் தனித்தனி சன்னதியாக தான் இருக்கும். ஆனால் ஊட்டத்தூர் கோவிலில் இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.
இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.
மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.
அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.
இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது.
இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று.
அபூர்வ நடராஜர்......
இந்த கோவிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.
அகிலாண்டேஸ்வரி காலபைரவர் சுரங்கப்பாதை:
ஊட்டத்தூர் சிவன் கோவில் அருகிலேயே பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரம்ம தீர்த்தத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று பூஜைகள் செய்யப்பட்டதாகவும் கோவில் வரலாறுகள் கூறுகின்றன. இதற்காக சிவன் கோவிலில் இருந்து பெருமாள் கோவில் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது அந்த சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நோய் தீர்க்கும் தீர்த்தம்:
உலகின் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து உள்ளார். இதனால் இந்த பிரம்ம தீர்த்த நீரை எடுத்துச்சென்று நோயுற்றவர்களின் உடலில் தெளித்தால் அவர்கள் குணமடைவதாக கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.
இதற்கு சான்றாக ராஜராஜ சோழன் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட, தனது ஆயுட்காலம் வரை நோய் நொடியின்றி வாழ்ந்ததை சான்றாக தெரிவிக்கின்றனர்.
தற்போதும் கோவில் மூலஸ்தானத்தில் இறைவனை வழிபட நிற்கும்போது தீபாராதனைக்கு முன்பாக, பக்தர்களின் கையில் பிரம்ம தீர்த்த நீரை ஊற்றி கையை கழுவிய பின்னரே கோவில் குருக்கள் வழிபாடு நடத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
சக்தி வாய்ந்த காலபைரவர்:
இந்த கோவிலில் உள்ள காலபைரவர் சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். கால பைரவருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து சகஸ்ரநாம வழிபாடு செய்தால் சிறு குழந்தைகளின் மன பயம் நீங்குவதாகவும், மாடுகளுக்கு வியாதிகள் தீர்வதாகவும் ஐதீகமாக கூறப்படுகிறது.
சந்தன காப்பு அலங்காரம்:
மேலும் அஷ்டமி திதியன்று கால பைரவருக்கு யாகம் நடத்தி, அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து காலாஷ்ட மந்திரம் ஓதி வழிபாடு செய்தால் மரண பயம் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்கள்.
கோயில் சிலாச்சாரியாரின் அலைபேசி எண் : 9788062414 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
🫶🏽அகிலம்_காக்கும்_அண்ணாமலையார்…
🫶🏽கிரிவலம்
கார்த்திகை தீபப் பெருநாள் அன்றுதான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தான். அந்த நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான புண்ணியத்தைத் தரும். குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது.
🫶🏽கிரிவலமலையின்_பெருமை
திரு அண்ணாமலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது.
சீல முனிவோர்கள் செறியு மலை.
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை.
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை என்றெல்லாம் அண்ணாமலை வெண்பாவில் குரு நமசியாவர் இம்மலையைப் போற்றுகிறார்.
கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.
🫶🏽கிரிவலம்
இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரிவலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணா மலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.
மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்க்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும். மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும். தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.
வழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22க்கு மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. மன அமைதியைத் தர வல்லது. தியானம் செய்ய ஏற்ற இடம் அது.
அடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது நம்பிக்கை.
அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும். வழியில் அடிமுடி சித்தர் ஜீவ சமாதி இருக்கும். இங்கு தியானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும். இது மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய இடம். இவ்வாலயம் செல்லும் வழியில் மாணிக்கவாசகரின் ஆலயம் உள்ளது
அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும். அடுத்து இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர்.
அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். அதனை அடுத்து எதிரே ஒரு சிறிய விருஷபாரூடர் சன்னதி இருக்கும். அதை அவசியம் வணங்க வேண்டும். ஏன் என்றால் அந்த இடத்தில்தான் உமையம்மைக்கு சிவன் காட்சி அளித்து இடப்பாகம் தந்தருளினான். ஆதலால் அதையும் தரிசித்தல் மிக மிக முக்கியமானது. அதன் பிறகு மீண்டும் பூதநாராயணர் ஆலயம் அடைந்து அவருக்கு நன்றி கூறி, தீபம் ஏற்றி வழிபட்டு, வழித்துணையாக விக்னங்கள் இல்லாமல் காத்த இரட்டைப் பிள்ளையாரையும் வணங்கி வழிபட்டு, பின் அருணாசலேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் முழுமையாகப் பூரணத்துவம் அடைகிறது.
🫶🏽கிரிவலம்_செல்லும்_முறை
நடந்துதான் செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். ஈசன் மகிமையை பற்றி பேசிக் கொண்டும் தேவார திருவாசகம் படித்துக் கொண்டும் செல்லாம். தேவையின்றி அங்கும் இங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாக ஒரு ஒன்பது மாத கர்ப்பிணி நடந்து செல்வது போல அடி மீது அடி வைத்து அடி பிரதட்சனமாக செல்வது போல மெதுவாக நடக்க
வேண்டும்.
🙏🏽மலை_வலம்_வர_உகந்த_நாட்கள்
எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும். ஏகாதசி, நீத்தார் நினைவு நாள்களிலும் கிரிவலம் வரலாம். அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.
🫶🏽கிரிவலமகிமை
புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.
🙏🏽நந்திமுகதரிசனம்
சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
🫶🏽கிரிவல பலன்கள்
ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!’ -என்கிறது தேவாரம்.
மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும்.
மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். மலையைப் பற்றியும், மலை சுற்றுவதைப் பற்றியும் நினைப்பவர்களுக்கே இந்தப் பலன் என்றால், மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்…???
முறையாக 1008 முறை கிரிவலம் செல்பவர்கள் கைலாசத்திற்குள் நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி, மோட்சமாகிய உயர் பதவியை அடைவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கின்றது.
ஞாயிற்றுக் கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்.
திங்கட்கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.
புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும்.
வியாழக்கிழமை சுற்றினால் ஞானி களாவார்கள்.
வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்.
சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரக தோஷம் நீங்கும்.
நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். கர்ம வினைகள் அனைத்தும் தொலையும்.
அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனம் நிம்மதி அடையும். பாவங்கள் அனைத்தும் நீங்கும். பித்ரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.
ஆகவே, திரு அண்ணாமலையை வலம் வருவோம். சிவனருள் பெற்று அவன் தாழ் சரணடைவோம்.
நற்றுணையாவது அண்ணாமலையாரே
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ...
சிவாய நம சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
வாழ்த்துகள்.
வாழ்க_வளத்துடன். #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🔱🔱🔱ஓம் நமச்சிவாய வாழ்க 🔱🔱🔱
🔱🔱🔱கடலின்நஞ்சம்அமுது உண்டுஇமையோர்தொழுது
ஏத்தநடம் ஆடி
அடல்இலங்கைஅரை யன்வலிசெற்றுஅருள்
அம்மான்அமர் கோயில்
மடல்இலங்குகமு கின்பலவின்மது
விம்மும்வலி தாயம்
உடல்இலங்கும்உயிர் உள்ளளவும்தொழ
உள்ளத்துயர் போமே.🔱🔱🔱
🔱🔱🔱பொருள் : -🔱🔱🔱
🔱🔱🔱பாற்கடலைக் கடைந்து அமுதம் எதிர் பார்த்த நிலையில் நஞ்சு வெளிப்பட்டது. அதனையே அமுதமென உண்டு தேவர்களைக் காத்தவன் இறைவன்; நடனம் புரிந்து மகிழ்வித்தவன் வன்மையுடைய இலங்கையின் வேந்தனான இராவணனுடைய வலிமையை அடக்கி அருள் புரிந்தவன். அத்தகைய கடவுள் அமர்ந்து விளங்கும் இடம் பலா கமுகு முதலான மரங்கள் பெருகியுள்ள திருவலிதாயம் ஆகும். அத் திருத்தலத்தை உடலில் உயிர் உள்ள அளவும் தொழுது வணங்கிட மனத்துயர் நீங்கும்.🔱🔱🔱
🔱திருச்சிற்றம்பலம் 🔱 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
சிவ சிவ
சிதம்பர ரகசியம் - -
மூச்சை இழுத்து விடுங்க!
====================================================================
யோகம் அறிந்தவர்களும், அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்த முயன்றவர்களுமே அறிந்த உண்மை இது. நாம் இப்போ தினமும் செய்யற ஆசனங்கள் எல்லாம் யோகம் ஆகி விடாது. உண்மையாக யோகக் கலையைக் கற்றவர் இன்று மிகச் சிலரே இருக்கின்றனர்.
இந்த யோகக் கலையின் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி வேண்டியபோது விடுவதற்கும், இழுப்பதற்கும் தெரிந்தவரே யோகி ஆவார். இது சித்தர்களால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்.
பதஞ்சலி முனிவரும், வியாக்ரம பாதரும் சித்தர்களில் சேர்ந்தவர்கள். ஆகவே அவர்களால் அடைய முடிந்தது. இவர்கள் இருவரும் முக்தி அடைந்ததும் ராமேஸ்வரத்தில் என்று சொல்லுவார்கள். இங்கே திருச்சியில் சமயபுரத்திற்கு அருகே சிறுகனூர் என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள திருப்பட்டூர் என்னும் ஊரில் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் ஜீவ சமாதி உள்ளது.
தென்னாட்டைச் சேர்ந்த இவ்விரு சித்தர்களும் சேர்ந்து இறைவனுக்கு எழுப்பிய கோயில் தான் இந்தச் சிதம்பரம் கோயில். நம் உடலின் அமைப்புத் தான் பொதுவாகக் கோயில் அமைப்பும். இதில் சிதம்பரம் கோயில் ஞான ஆகாசம் எனப்படும். "சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசத்தையும்" குறிக்கும்.
சித்தர்கள் மூச்சுக்கலையை விஞ்ஞானத்தின் உதவியின்றியே பயின்றவர்கள். மூச்சைக் கட்டுப் படுத்தத் தெரிந்தவர்கள். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தரம் மூச்சு விடுகிறான் என்பதைக் கண்டறிந்து அதைக் கட்டுப் படுத்தி ஞானம் அடைந்து சகல சித்தியும் கைவரப் பெற்றவர்கள்.
ஒரு சாதாரண மனிதன் 4 வினாடிகளுக்கு ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுகிறான். ஒரு நிமிஷத்திற்குப் பதினைந்து முறையும், ஒரு மணி நேரத்திற்கு, 900 முறையும், ஒரு நாளுக்கு 21,600 முறையும் மூச்சு விட்டு இழுக்கிறான். இதைக் குறைக்கத் தான் யோகக் கலை பயன்படுகிறது. அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி 21/2(இரண்டரை) மணி நேரத்துக்கு ஒரு முறை மூச்சை இழுத்து வெளியிட்டால், பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த #திருமூலரைப் போலவும், மார்க்கண்டேயரைப் போலவும் இருக்க முடியும், வாழ முடியும். உண்மை, பொய்யில்லை.
ஒரு பிறந்த குழந்தையைப் பாருங்கள். அது மூச்சு விடுவதை! முதலில் பிறந்து கொஞ்ச நாட்களுக்கு மிகச் சரியாக மூச்சை விட்டு இழுக்கும். குழந்தையின் மூக்கு நுனியில் இருந்து அதன் உச்சிக் குழி இருக்கும் உச்சந்தலைக்கு உத்தேசமாக 12 அங்குலம் நீளம் இருக்கும்.
குழந்தையின் உச்சந்தலை "படபட"வென அடித்துக் கொண்டே இருப்பதைக் கண்டிருக்கலாம். குழந்தையின் உள்நாக்குக்கும், இந்த உச்சந்தலைக்கும் ரகசிய வழி இருப்பதாயும், அதுதான் இறைவன் இருப்பிடம் எனவும் சொல்லப் படுகிறது. அதனால் தான் குழந்தை பிறந்ததும் தானே சிரிப்பதற்கும், அழுவதற்கும் இறைவன் விளையாட்டுக் காட்டுகிறார் என்று சொல்கிறோம்.
6 மாதத்துக்கு மேல் ஆகிக் குழந்தையின் உச்சிக் குழி மூடியதும் இதில் 4 அங்குலம் குறைகிறது. குழந்தையும் நம்மைப் போல் மூச்சு விட ஆரம்பிக்கிறது. 21,600 ஒரு நாளைக்கு என்ற கணக்குப்படி நம் வாழ்நாள் பூராவுக்கும் வேண்டிய மூச்சை நாம் அதிகமாய்ச் செல்வழிக்கிறோம்.
நடக்கும்போதும், நிற்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும், தூங்கும்போதும் என்று செலவு செய்வதால் குறைந்து வருகிறது. இந்த ரகசிய வழியானது முறையான யோகப் பயிற்சியில் மீண்டும் திறந்து கொள்ளும். இதுவே மூன்றாவது கண் எனப்படும் ஞானக் கண்ணாகும். நம் உள்மனதில் உள்ள மூன்றாவது கண் எனச் சொல்லப் படும் ஞானக் கண் திறந்து கொள்ளும். உள்ளொளி பிறக்கும். ஞானம் சித்தியடையும்.
டிஸ்கி: அடுத்து இந்த ஞானக் கண் திறக்கும் முறையான "குண்டலினி யோகம்" பற்றி விவரம் கொடுக்கப் போகிறேன். யாரும் தவறிக் கூட முயற்சி செய்து பார்க்கவேண்டாம். விளைவுகள் மோசமாக இருக்கும். முறையான குருவிடம் முறையான பயிற்சி இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகளில் மரணம் கூட சம்பவிக்கலாம். ஆகவே படிக்கிறதோடு நிறுத்திக் கொள்வோம்.
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
*நமது முன்னோர்கள் எந்த சடங்குகள் செய்தாலும் அதற்கு ஒரு விஞ்ஞானப்பூர்வமான காரணங்களை உள்ளடக்கியே செய்து உள்ளார்கள்.*🍁
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னாலும் மறைந்திருக்கும் காரணங்களை தெரிந்து கொள்ள ஆவலா…
நமஸ்காரம்:
நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.
மெட்டி:
திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை. பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள்.
இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.
பொட்டு:
ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் குங்குமம் அணிவது வாடிக்கையான ஒன்றே. நெற்றியில் தான் ஆக்ஞன்யா சக்கரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தானாக செயல்பட தொடங்கி விடும்.
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
இது உடலில் உள்ளல ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் புத்தி ஒருமுனைப்படுதலை மேம்படுத்தும்.
கோவில் மணிகள்:
கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவைதான் மணிகள்.
கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும்.
இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் வரை நீடிக்கும்.
மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும்.
அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.
துளசியை வழிபடுதல்:
இந்தியாவில் உள்ள முக்கால்வாசி இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்ப தற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர்.
அரசமரம்:
பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை. இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர்.
ஆனால், இரவு நேரத்தில் ஆக்சிஜென் உண்டாக்கும் சில மரங்களில் அரசமரமும் ஒன்று. என்ன சுவாரசிய மாக உள்ளதா? அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாக கருதுகின்றனர்.
உணவருந்திய பின் இனிப்பு உண்ணுவது:
இந்தியாவில் காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடை யும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள்.
அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.
கைகளில் மருதாணி வைப்பது:
அலங்கார காரணத்தை தவிர, மருதாணி என்பது சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். திருமணங்கள் என்பது அழுத்தத்தை உண்டாக்கும், குறிப்பாக மணப்பெண்ணுக்கு. மருதாணி தடவிக் கொண்டால், நரம்புகளை குளிரச் செய்யும். அதற்கு காரணம் குளிரச் செய்யும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி.
அதனால் தான் மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவப்படுகிறது.
தரையில் அமர்ந்து உண்ணுவது:
நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமான மடையும்
காலையில் சூரியனை வழிபடுதல்
விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.
கோவிலை வலம் வாருங்கள்:
உடல் ஆரோக்கியத்திற்கு காலை வேளையில் சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும். அதுவும் வெறும் பாதத்தில் மேடும் பள்ளமாக பதித்து இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் போது உங்கள் பாதம் உண்மையான ஒரு உணர்வை ஏற்படுத்தும்
வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும் வெறும் பாதத்தில் நீங்கள் கோவிலை வலம் வரும் பொது அக்குபஞ்சர் முறை உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும்.
இது புண்ணியமுடன் கூடிய ஆரோக்கியம் நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களின் இணைந்துள்ளன, பீச் மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து, வெறும் பாதங்களில் கோவிலை வலம் வாருங்கள், புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும்......
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏ஆன்மீகம் #🙏கோவில்
#👉வாழ்க்கை பாடங்கள் #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🥺சோக வாழ்க்கை
#ஓம்_சிவாய_நமஹ
#சிவ_சிவாய_நமஹ ...
சிவனேனு இருந்த என்னை
சிவனே கதி என்று ஆக்கிவிட்டாய்
நான் சவமாகும் வரை
சிவமே சுவாசம்,
சிவமே என் மனதாக இருக்கும்போது
சிவனே என் ஜீவன்.....
அலைபாயும் என் மனதை ஆட்கொள்ள
வா என் அப்பனே....
அன்பே சிவமாக இருப்பவரே
நீரே அல்லல் நீக்கி காத்தருள்வாய் ...
தீப சுடராய் ஒளி
தந்து வாழ்விக்கும்..
அண்ணாமலையானே
அருணாச்சலேஷ்வரா...
#சிவனிருக்க_பயமேன்…
#சரணம்_சரணம்
#மகேஷ்வரா ...
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🪔கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்💫 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய
#🪔கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்💫 #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
சிவ சிவ
இறை சிந்தனை துளிகள்
************************************
1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை.
2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள்.
3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர்.
4. அதிகாலையில் எழுந்து பிரார்த்தனை செய்வது அன்றாட கடமையாகட்டும்.
5. கடவுள் ஒரு செயலையும் செய்வதில்லை. ஆனால், அவனின்றி உலகில் ஓர் அணுவும் அசைவதில்லை.
6. எப்போதும் கடவுள் சிந்தனையில் மனம் லயித்துவிட்டால், சுயநல எண்ணம் சிறிதும் உண்டாகாது.
7. வெறுமனே கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது ஆன்மிகம் ஆகாது. அது கடவுளோடு இரண்டறக் கலப்பதாகும்.
8. எப்போதும் கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருங்கள். அன்புடன் சமூகசேவை செய்யுங்கள். அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். தெய்வீகவாழ்வுக்கு இவையே தேவை.
9. தினமும் தெய்வீக நூல்களை சிறிது நேரமாவது படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
10. ஆன்மிகத்துறையில் விரைவாக முன்னேற அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள்.
11. ஆசைகளும், கஷ்டங்களும் இருந்தாலும், பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையைக் கட்ட முடியும்.
12. மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். ஆனால் அவர் வாழும் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
13. மனித முயற்சியைத் தெய்வீகத் திருவருள் தாங்கி நிற்க வேண்டும். அப்பொழுது தான் இறையருளை பெறுவது சாத்தியப்படும்.
14. சமயம் மற்றும் தத்துவத்தைக் கடைப்பிடித்து ஆன்ம ஞானத்தை அடையுங்கள்.
15. மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர், தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். உலகில் நம் கவனத்தை எவரும் வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஒரு ஆண்டவன் இருக்கிறார். உண்மையில் உங்களை கவனிப்பது அவர் தான் என்பதை மறக்கக்கூடாது.
16. பழி வாங்கும் எண்ணத்தை கைவிடுங்கள். தீயவர்களும் மனம் திருந்தும்படி பிரார்த்தனை செய்யுங்கள்.
17. பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சத்தியத்தைக் கடைபிடிப்பவன் சித்தி பெற்று விடுவான். அவனுடைய வார்த்தைகள் அனைத்தும் தெய்வீக சக்தி பெற்றுவிடும்.
18. கடவுளின் திருப்பெயரைத் திரும்பத் திரும்ப சொல்வதே ஜபம். கலியுகத்தில் கடவுளை அடைய இதுவே எளிய வழி. பக்தியால் மலைகளை கூட பெயர்த்துவிடமுடியும்.
19. மக்கள் சேவை ஆற்றுபவர்கள் கைமாறாக நன்றியோ, பாராட்டோ எதிர்பார்க்கக்கூடாது. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் போதனையை மறக்கக்கூடாது.
20. ஆண்டவன் எங்கோ இருப்பதாக எண்ணாதீர்கள். உங்கள் இதயக்குகையில் அவனை நிலைநிறுத்துங்கள். வாழ்நாள் முழுவதும் அவனுக்கு வழிபாடு செய்யுங்கள். அவனை நாடி வேறு இடம் செல்ல வேண்டாம்.
21. உடல் ஓரிடத்திலும், மனம் மற்றொரு இடத்திலும் இருந்தால் வாழ்வில் ஒருவன் எவ்வித முன்னேற்றமும் பெற முடியாது.
22. பிறர் உன்னை இம்சிக்கும் போது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று எண்ணுவது கூடாது.
23. ஆசை எப்போது அற்றுப் போகிறதோ அப்போதே கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகி விட்டதை உணர முடியும்.
24. ஆன்மிகத்திற்கு அவசியம் அடக்கம். தன்னடக்கம் கொண்டவன் இருக்கும் இடத்தில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏🏼ஓம் நமசிவாய #🪔கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்💫 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶



