#இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba! கமல் ஆல்வேஸ் ஜீனியஸ் கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் படத்தை பற்றி
எழுத்தாளர் சுஜாதாவின் பார்வை ...
ஹேராம் இந்திப்படமோ தமிழ் படமோ மட்டும் அல்ல;
ஒர் இந்தியப்படம்.
அது உண்மைச்சம்பவத்தின் நிழலில் அமைக்கப்பட்ட ஒரு கற்பனைக்கதை.
‘டாமினிக் லாபியர்’ எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்கிற புத்தகத்தில் மகாத்மா காந்தியை கொல்ல சதி செய்தவர்களில் மற்றொரு குழுவும் இருந்தது என்று போகிற போக்கில் குறிப்பிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் கமல் ஒரு சுவாரஸ்யமான கதை பின்னியிருக்கிறார்.
மொகஞ்சோதரா,கராச்சி,கல்கத்தா,சென்னை-தமிழ்நாடு,கோலாப்பூர்,டில்லி என்று நாடெங்கும் உலவும் கதை.
சாகேதராமன் என்கிற தென்னிந்திய பிராமண கதாநாயகன் கல்கத்தாவில் தன் பெங்காலி புதுமனைவியுடன் வாழத்துவரும் சமயத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் வந்து மனைவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுவதை கண் முன்னே பார்க்கிறான்.
ஒரு கணத்தில் வாழ்வில் அத்தனை எதிர்பார்ப்புகளையும் சந்தோஷங்களையும் இழந்தவனுக்கு மெல்ல மெல்ல அவன் மனைவி இறந்ததற்கு காரணம் மகாத்மா காந்திதான் என்பது மனதில் பதிவாகிறது அல்லது பதிய வைக்கப்படுகிறது.
உண்மை சம்பவத்தின் சாயலில் ஒரு கற்பனைக்கதையை பின்னுவதில் சங்கடங்களும் சந்தோஷங்களும் உள்ளன.
ஜே.எப்.கே,டே ஆப் த ஜேக்கல் [ J.F.K , Day Of The Jackal ]போன்ற படங்களுடன் இதை ஒப்பிட முடிகிறது.
சங்கடங்கள்,இவை-
உண்மை சம்பவங்களை அதிகம் திரிக்க முடியாது.
முக்கியமான சம்பவ மைல் கற்கள் அசைக்க முடியாதவை என்பது உலகமே அறியும்.
சாகேத்ராமன் கொன்றான் என்று சொல்ல முடியாது.
ஆனால் காந்தியை கொல்ல முயற்சித்தவன் சாகேத்ராமன் என்கிற அளவுக்கு உண்மையுடன் விளையாடலாம்.
உண்மைச்சம்பவத்தை படம் பண்ணுவதில் சந்தோஷங்களும் உண்டு.
படமா... நிஜமா... என்கிற பிரமிப்பை ஏற்படுத்தலாம்.
இந்தப்படத்தில் பல கட்டங்களில் இந்தப்பிரமிப்பு ஏற்படுகிறது.
உண்மையான இந்தியப்படம் இது.
கமல் மசாலா படங்களிலோ, ‘கால் கிராம்’ கதையம்சம் கொண்ட படங்களிலோ நடிப்பதை இனி நிறுத்தி விடுவார் என்று சொல்ல முடியாது.
அந்தப்படங்களில் அவ்வப்போது நடித்தால்தான் இந்த படங்களையும் எடுக்க முடியும்.
என்னை கேட்டபோது,
‘இரண்டு வகை படங்கள்’ பண்ணுவதில் தயக்கம் இருக்க கூடாது.
அவருடைய அபார திறமை இரண்டு ஜாதிக்கும் பயன்படும் என்று சொன்னேன்.
‘ஹேராம்’ கமல் என்கிற மிகச்சிறந்த கலைஞனின் நடிப்புப்பயணத்தில் அடுத்த கட்டம்.
இந்திய சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும்,
இந்த தேசத்தின் பலதரப்பட்ட கலாச்சாரங்களை உள் வாங்கியதாகவும்... எடுக்கப்பட்டு,
சில படங்கள்தான்... வந்திருக்கின்றன ”.
நன்றி..
நூல் : ‘என்றும் சுஜாதா’
தேர்வும் தொகுப்பும் : எஸ்.ராமகிருஷ்ணன்.
உயிர்மை பதிப்பக வெளியிடு. Source : face book புன்னகை மன்னன் தரவுகளில் இருந்து
.