
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர்..!
By
Touring Talkies -
பஞ்சு அருணாச்சலம் ஒரு நாள் ஆர்.செல்வராஜிடம் பேசிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைக்கக் கூடிய ஒரு திறமையான இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனது ஆசையை அவரிடம் வெளிப்படுத்தினார்.
அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தானே செல்வராஜ் காத்திருந்தார். ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். ராஜான்னு பேரு. சின்ன வயசுல இருந்தே ஹார்மோனியம் வாசிச்சுப் பழக்கப்பட்டவன். அவங்க அண்ணன் பாவலர் வரதராஜனோடு சேர்ந்து நிறைய ஊர்கள்ல கச்சேரிகள் பண்ணியிருக்கான்.
இப்போ இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அசிஸ்டென்ட்டா இருக்கான். அவன் போட்ட பல டியூன்களை நான் கேட்டிருக்கேன். அற்புதமாக டியூன் போடுவான். அவனுக்குப் எப்படியாவது இசையமைப்பாளர் ஆகணும்கிறதுதான் லட்சியம். உங்களுக்கு ஓ.கே-ன்னா சொல்லுங்க நாளைக்கே நான் அவனைக் கூட்டிக்கிட்டு வர்றேன்…” என்றார் செல்வராஜ்.
பல ஊர்ல கச்சேரி பண்ணியிருக்கான். நாடகங்களுக்கு மியூஸிக் போட்டது மட்டுமில்லாமல், இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட உதவியாளராகவும் இருக்கான்னா நிச்சயமா ரசிகர்களின் பல்ஸ் தெரிஞ்சவனாகத்தான் இருப்பான் என்று மனதுக்குள்ளேயே ஒரு கணக்குப் போட்ட பஞ்சு அருணாச்சலம், “சரி நாளைக்கு அவனை கூட்டிகிட்டு வா…” என்றார்.
அன்று இரவு முழுவதும் செல்வராஜ் சொன்ன அந்த இசையமைப்பாளரைப் பற்றிய நினைவு பஞ்சு அருணாச்சலத்தை சுற்றிச் சுற்றி வந்தது. ஏற்கனவே தமிழிற்கு அவர் அழைத்து வந்திருந்த விஜய பாஸ்கர் என்ற கன்னட இசையமைப்பாளர் வெற்றி பெற்றிருந்ததால் தான் அடுத்து அறிமுகப்படுத்தப்போகும் இசையமைப்பாளரும் மிகப் பெரிய அளவிலே ஜெயிப்பார் என்ற நம்பிக்கையுடன் அன்று இரவு தூங்கினார் பஞ்சு.
மறுநாள் மாலையில் பஞ்சு அருணாச்சலம் தங்கியிருந்த கிளப் ஹவுசுக்கு ராஜாவை அழைத்து வந்த செல்வராஜ் “அண்ணே… இவர்தான் நான் சொன்ன ராஜா” என்று அறிமுகப்படுத்திவைத்தார். ஷர்ட்டை இன் பண்ணிக் கொண்டு ஒல்லியான தேகத்துடன் நின்ற ராஜாவைப் பார்த்ததும் பஞ்சு முதல் நாள் இரவு கண்ட கனவுக் கோட்டை முற்றிலுமாக தகர்ந்தது.
தழையத் தழையக் கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்துப் பழகிய அவரது கண்களால் கவர்மென்ட் ஆபீஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என்று கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஹார்மோனியம், கிடார் என கையில் ஏதாவது ஒரு இசைக் கருவியை ராஜா எடுத்து வந்திருந்தால்கூட அவர் மீது பஞ்சு அருணாச்சலத்திற்கு லேசான நம்பிக்கை பிறந்திருக்கும். ஆனால், ராஜா அதையும் செய்யவில்லை..
செல்வராஜ் நம்மை இப்படி கவுத்து விட்டாரே என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தாலும் தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ராஜாவை உடகாரச் சொன்னார் பஞ்சு அருணாச்சலம்.
லேசான ஒரு சிரிப்புடன் ராஜா அமைதியாக உட்கார “செல்வராஜ் அடிக்கடி உன்னைப் பற்றி சொல்லிக்கிட்டே இருப்பாரு. தமிழ்ல ஒரு நல்ல இசையமைப்பாளரைக் கொண்டு வரணும்னு எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை” என்று பஞ்சு அருணாச்சலம் சொன்னவுடன் அதுவரை பேசாமல் இருந்த ராஜா “சினிமாவுக்கு இசையமைக்கணும் என்கிற ஆசையுடன்தான் நான் சென்னைக்கே வந்தேன். பல மாதங்களாக அதுக்காக முயற்சிபண்ணிட்டிருக்கேன். பாவலர்கூட பல வருஷம் இருந்ததாலே ஓரளவுக்கு இசையைப் பற்றி தெரியும். நிறையப் பாட்டுக்கு டியூன் எல்லாம்கூட போட்டு வெச்சிருக்கேன்…” என்றார்.
“அப்படீன்னா சரி… அந்த ட்யூனை எல்லாம் நான் கேட்டுடறேன். அப்புறம் என்ன செய்யலாம்னு ஒரு முடிவு எடுப்போம். இரண்டு நாள் கழித்து வாங்க. வரும்போது மற்ற வாத்தியக் கருவிகளை வாசிக்கறவங்களையும் கூட்டிக்கிட்டு வந்திடுங்க…” என்றார் பஞ்சு அருணாச்சலம்.
“இவனே ரொம்ப நல்லா பாடுவான். பாடிக் காட்ட சொல்லவா…?” என்று பஞ்சு அருணாச்சலத்திடம் கேட்டார் ஆர்.செல்வராஜ். ‘சரி’ என்பதற்கு அடையாளமாக பஞ்சு அருணாச்சலம் தலையை ஆட்ட தான் அமர்ந்திருந்த டேபிள் மீது தாளம் போட்டபடி பாட ஆரம்பித்தார் ராஜா.
தமிழ்த் திரையுலகில் தனது அரங்கேற்றம் நடைபெறுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தமிழ் சினிமா உலகை தனது இசைத் திறனால் இன்றுவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்ற அந்த இசை வேந்தனுக்கு அன்று தெரியாது. #📷நினைவுகள் #🎬 சினிமா #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ்
"போட்டானே ஒரு போடு... அவன் கேட்டானே ஒரு கேள்வி"- T.M.S #📷நினைவுகள் #🎬 சினிமா #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ்
பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்..
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ்
கிளி போலப்
பேசு இளங்குயில்
போலப் பாடு மலர்
போலச் சிரித்து நீ
குறள் போல வாழு
மனதோடு
கோபம் நீ வளர்த்தாலும்
பாவம் மெய்யான அன்பே
தெய்வீகமாகும் மெய்யான
அன்பே தெய்வீகமாகும் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்படம்
அதிகம் கேட்காத பாடல் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள்
அன்புக் கரங்கள் திரைப்படம் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள்
மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்
கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாய்
வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள்







