#🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 ##shorts
https://youtube.com/@muthucreatorcom
#🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏இன்று பரணி தீபம்
பதிவு காப்பி நன்றி 🙏
மனிதநேயம் சாகவில்லை.. மாறாக ஆலமரம் போல் வளர்கிறது..
நேற்று மதுரையில் இருந்து ராமேஸ்வரம் பேருந்தில் (TN63 N1875) நமது அத்தனூர்டெக்ஸ் குடும்பஉறவு ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது நேரம் இரவு 10:30 மணி, ராமேஸ்வரம், பாம்பன் பாலத்தை அடுத்து அப்துல்கலாம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றது..
அப்போது முன்னாடி அமர்ந்திருந்த வழக்கறிஞர் படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் இறங்கத் தயாரானார்..
அந்த நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் யாரும் இல்லாமல் அமைதியாக இருந்தது..
நிசப்தமாகவும் இருந்தது..
ஏதோ ஒருசில ஆண்கள் மட்டும் அங்கும் இங்கும் மதுபோதையில் நடந்தபடி இருந்தார்கள்..
இதை கவனித்த நடத்துனர் அந்த மாணவியிடம் "உன் பெற்றோர்கள் யாராவது அழைத்து செல்லவந்துள்ளார்களா?, என்று கேட்டார்.
அதற்கு அந்த மாணவி வந்துவிடுவார்கள்.. நான் நின்று சென்றுவிடுவேன் என்று கூறினார்..
அதற்கு அந்த நடத்துனரோ, அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரைவில் வரசொல்லுங்கள்
என்று கூறினார்.
மாணவியும் அவ்வாறே செய்தார்..
இதை கவனித்த டிரைவர் அண்ணன் அவர்கள் பஸ்ஸை ஓரமாக நிறுத்தினார்..
வீட்டிலிருந்து ஒருவர் வரும்வரை பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டாம், என்று டிரைவர் அன்பாகவும், உறுதியாகவும் சொல்லிவிட்டார்..
பின் பயணிகளிடம் யாருக்கேனும் அவசரம் என்றால் இந்த மகளை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடலாம்..
குடும்பத்தினர் அங்கு வந்து அழைத்து செல்லட்டும்.. உங்கள் யாருக்கேனும் அவசரமா? என்று கேட்டார்..
பேருந்தில் இருந்த அனைவரும் ஒருமொத்த குரலாக "இல்லை" இந்த பெண்ணின் குடும்பத்தினர் வந்தவுடனே செல்லலாம், என்று சொன்னார்கள்..
(மனிதநேயம் ஆலமரம் போல் வளர்ந்து கொண்டு இருக்கிறது.. என்பதை அப்போது நம் நண்பர் உணர்ந்தார்..
இதைக் கேட்ட நானும் உணர்ந்தேன்)
ஒரு 10 நிமிடம் காத்திருப்புக்குப் பிறகு அந்த குடும்பத்தில், அந்தப்பெண்ணின் சித்தப்பா வந்தார்..
அந்த பெண்ணின் சித்தப்பாவிடம் நடத்துனர் அண்ணா முத்துராமலிங்கம் அவர்கள் கோபமின்றி
சிரித்த முகத்துடன் சொன்னது..
"காலம் ரொம்ப கெட்டு கிடக்குதுங்க.. மத்தவங்கள குறை சொல்றத விட்டுட்டு நாம சரியா, நடந்துக்கணும்.. பொண்ணு வருதுன்னு தெரிஞ்சும் பத்துநிமிஷம் முன்னாடியே வந்து நிக்க வேண்டாங்களா?..
உங்க ஒருத்தர் லேட்டுனால இங்க எத்தனைபேர் காத்திருக்க வேண்டியதா, போயிருச்சு பாருங்க..
இங்கே இருக்கிற யாராவது ஒருத்தர் எனக்கு நேரமாச்சு அவசரமா போயாகன்னுமுனு சொல்லி இருந்தா கூட .. பொண்ணு தனியா இறக்கி விட்டுட்டு நாங்க வண்டி எடுத்துக்கிட்டு போயிதாங்க இருக்கணும்..
தப்பு நடந்துச்சின்னு சொல்றதவிட தப்பு நடக்கிறதுக்கு நாமளே வழி பண்ணி கொடுக்க கூடாதுங்க".. என்று கூறிவிட்டு அந்தப் பெண்ணிடமும்..
" ஒரு பத்து கிலோ மீட்டருக்கு முன்னாடியே வீட்டுக்கு தகவல் சொல்ல வேண்டாமா.. நான் வர்றதுக்கு முன்னாடி வந்து நில்லுங்க அப்படின்னு..
இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் உங்களுடைய, தைரியம் மனஉறுதி எல்லாம் எதுக்கு உதவாதுமா.. என்று சொல்லிவிட்டு..
அந்தப்பெண் சென்றவுடன் பேருந்தில் ஏறி, பயணிகள் அனைவருக்கும் நன்றி சொன்னார்..
பேருந்து கிளம்பியது..
அந்த நடத்துனர் அவர்கள் கேமரா வைத்துக் கொண்டோ, அல்லது பிரதி பலனை எதிர்பார்த்தோ, இந்த மனிதநேயத்தை செய்யவில்லை..
அவரின் கடமையை சரிவர செய்தார் என்பதே இங்கு நிதர்சனமான உண்மை..
கடமையை செய்.. பலனை எதிர்பார்க்காதே,... என்பது கீதையின் பொன்மொழி..
நல்ல மனிதர்களை காலம் ஒருபோதும் அடையாளம் காட்ட தவறாது.. என்பதே இந்தப்பதிவின் சான்று..
இந்த நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும், கொடுக்க வேண்டும் அல்லவா! அரசின் உயரிய விருதுகள்..
இவர்களைப் போன்றவருக்கு கொடுக்க வேண்டும் அல்லவா! உயர் பதவிகள்..
நாம் எல்லோருமே இவர்களைப்போல் இருந்துவிட்டால் நடுஇரவில்கூட பெண்கள் தனியாக சுதந்திரமாக நடந்துவரலாம்..
இவரின் குணங்களையும், முகங்களையும், அனைவரும் அறியட்டும் பகிருங்கள்..
யாரேனும் மறுபடியும் இவர்களைப் பார்த்தால் பாராட்டுங்கள்.. இவர்களின் செயல்களுக்கு ஊக்கம் அளியுங்கள்..
"
ஓட்டுனரின் பெயர் : அந்தோணி ராஜ்
நடத்துனரின் பெயர்: முத்துராமலிங்கம்..
நம்மிடம் பகிர்ந்தவர் அத்தனூர்டெக்ஸ் குடும்பஉறுப்பினர், ராமேஸ்வரம். அந்தப்பேருந்தில் பயணித்தவர்.. பெயர் வெளியிட விரும்பாதவர்..)
.... மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்..
நன்றியுடன்..
சத்தியவர்மன்.VN.
(Aththanoortex)
#மனித நேயம் #மனித நேயம்












