
mariappan kumaravel
@mariappan0462
நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்பதே என் மூலதனம்.
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 11, 1908 - செப்டம்பர் 19, 1980)[1] தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.
அன்னாரின் பிறந்தநாள் இன்று-!
வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். "பசிக்குதே! வயிறு பசிக்குதே" என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.
1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார்.
வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.
1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் புரிந்து கொண்டனர்.
பல்வேறு இசைத் தட்டுகளில் கேபிஎஸ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின.
1933−ல் டிசம்பர் 2இல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார்.
நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.
பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் சுந்தராம்பாள் பாடியவை 19 பாடல்கள். 1935இல் இப்படம் வெளிவந்தது.
அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.
தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.
தொடர்ந்து ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் சுந்தராம்பாள் பாடியவை 30.
ஜெமினி வாசனின் பிரமாண்ட தயாரிப்பான இந்தப் படத்துக்கு அவருக்கு
1 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டது.
1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை சுந்தராம்பாள் ஏற்று நடித்திருந்தார்.
மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973), மணிமேகலை (பாலசன்யாசி) உள்ளிட்ட 12 படங்களில் சுந்தராம்பாள் பாடி நடித்தார்.
காங்கிரஸ் பிரச்சாரங்களில் சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். காமராசர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இசைப்பேரறிஞர் விருது, 1966. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.
பத்மஸ்ரீ, 1970. வழங்கியது: இந்திய அரசு
சிறந்த தேசிய பெண் பின்னணிப் பாடகர் - துணைவன்.
ஆண் நடிகர்களில் மிகவும் செல்வாக்கு பெற்று இருந்தவர் தியாகராஜ பாகதவர் என்றால்
பெண் நடிகைகளில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தவர் இவர் ஒருவரே ... இவரின் கணீர் குரலை ரசிக்காத மனிதர்களே இல்லை ...
மாமனிதர் மக்கள்திலகம் அவர்கள் இவரின் இல்லத்திற்கே சென்று பார்த்து ஆசிப்பெற்ற பெருமைக்கு சொந்தக்காரர் ...
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஏழுமலை வாசா.எமை
ஆளும்
ஸ்ரீ நிவாசா
புரட்டாசி
நான்காம் சனிக்கிழமை
இனிய காலை வணக்கம் 💐🙏
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🚹உளவியல் சிந்தனை
#💐ஆச்சி மனோரமா💐
மனோரமா (26 மே 1937 - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.
அன்னாரின் நினைவுநாள் இன்று...!
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகிய இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் MGR இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. இவர் காசியப்பன் 'கிளாக்குடையார்' மற்றும் ராமாமிர்தம் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசியப்பன் கிளாக்குடையார் மனோரமாவின் தாயாா் ராமாமிா்தம் அவா்களின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்ததால். இதனை அடுத்து கணவருடன் ஏற்பட்ட மனகசப்பால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் அம்மாள் மனோரமாவை அழைத்து கொண்டு காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். மனோரமாவை ஆறாம் வகுப்பு வரை படிக்கவைத்தார். குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாத மனோரமா அங்குள்ள செட்டியார் வீடுகளில் வேலையாளியாக பணி செய்தும் அவர்கள் தாயாருடன் பலகார வியாபாரம் செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள். தனது பனிரெண்டாவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். "பள்ளத்தூர் பாப்பா" என சிறு வயதில் மனோரமா செல்லமாக அழைக்கப்பட்டார்.நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.
ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் மணிமகுடம், தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார். மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்பு எம். ஆர். ராதா அவர்கள் தனது நாடக சபாவில் நடத்திவந்த ஒரு நாடகத்தை அவரது தம்பி எம்.ஆர்.பாப்பாவுடன் சேர்ந்து படமாக தயாரித்தபோது அதில் ஒரு முக்கிய வேடத்தில் மனோரமா நடித்தும் அந்த திரைப்படமும் பாதியில் நின்றதால் கடைசியாக கவிஞர் கண்ணதாசன் இயக்கிய சொந்த திரைப்படமான "மாலையிட்ட மங்கை" திரைப்படமே மனோரமாவின் முதல் திரைப்படமாக அமைந்தது.
அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் 1963 "கொஞ்சும் குமரி." பின்னர், அவர் 1960 முதல் நகைச்சுவை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினார்
நாகேசுடனான அவரது திரை ஜோடி 1960-69ல் மிகவும் பிரபலமானது, பின்னர் 1970 கள் மற்றும் 80 களில் சோ, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி , சுருளி ராஜன் போன்ற நடிகர்களோடு நடித்தார்.
ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும், ஜெயலலிதா ஒருபோதும் ஊழல் செய்ய மாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையுடனும் இருந்த மனோரமா, 1996 தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
அவரது கடைசி நேர்காணலில், 2015 இல், அவரது வாழ்க்கையைப் பற்றி ஏதேனும் வருத்தம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. இதற்கு இவர் பதிலளித்தார் "எனக்கு எந்த வருத்தமும் இல்லை, நான் இந்த வாழ்க்கையில் ஆசீர்வதிக்கப்பட்டவர். எனது அடுத்த பிறவியில் கூட, நான் மீண்டும் மனோரமாவாக பிறக்க விரும்புகிறேன். இதே வாழ்க்கையையும், என்னைச் சுற்றியுள்ள இதே மக்களையும் நான் விரும்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் அம்மாவை மீண்டும் என்னுடன் விரும்புகிறேன். " நான் முன்பு ஒரு கதாநாயகியாக மட்டுமே செயல்பட தீர்மானித்திருந்தால் நீண்ட காட்சியில் இருந்து மறைந்து போயிருக்கலாம் என்றார்.
2015 இல் பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில், "நான் எனது துறையில் நகைச்சுவையாளினியாக முடிவு எடுத்து, கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்கள் ". ஆகின்றன.
மனோரமா எல்.ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து "தாத்தா தாத்தா பிடி குடு" என்ற பாடலைப் பாடினார். அவர் திரைவாழ்க்கையில் பாடியதில் மிகப் பெரிய வெற்றிப் பாடல் சோவுடன் தான் நடித்து வெளியான "பொம்மலாட்டம்," திரைப்படத்தில் இசையமைப்பாளரான V. குமார் இசையில் "வா வாத்தியாரே ஊட்டான்டே" பாடலாகும். மேலும் அவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் பாடியுள்ளார்.
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பெனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்னும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
மனோரமா தனது 78 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
மனோரமாவின் மரணத்திற்கு தமிழகம் பதிலளித்தது வருத்தத்துடன்; இறந்த நடிகையருக்கு மாநிலம் முழுவதும் மற்றும் சமூக ஊடகங்களில் ஏராளமான அஞ்சலி செலுத்தப்பட்டது. தி.நகரில் உள்ள நடிகையரின் வீட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா உடலில் மாலை அணிவித்தார், திருமதி ஜெயலலிதா, "தமிழ் திரைப்பட உலகில் மனோரமாவைப் போன்ற சாதனை புரிந்தவர்கள் யாரும் இல்லை, எதிர்காலத்திலும் யாரும் இருக்க மாட்டார்கள்" என்று கூறினார். ஜெயலலிதா மேற்கோள் காட்டி, "அவரது மரணம் குறித்து நான் அதிர்ச்சியடைந்தேன், அவர் எனக்கு ஒரு மூத்த சகோதரி. அவர் என்னை அம்மு என்று அழைக்கும் போது நான் அவரை மனோரமா என்று அழைத்தேன். " முதலமைச்சர், "சிவாஜி கணேசன் நடிகர் திலகமாக இருந்தால், மனோரமா நடிகையர் திலகம்" என்று குறிப்பிட்டார்
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.
பத்ம ஸ்ரீ – 2002
தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது-1971
வாழ்நாள் சாதனையாளர் விருது - 2015 (புதிய தலைமுறை)
என அவரது சாதனைப்பட்டியல் நீளமானது.
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
கார்த்திகை முருகா
இனிய மாலை வணக்கம்💐💐💐💐💐🙏🙏🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
சங்கட ஹர சதுர்த்தி வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏
இனிய காலை வணக்கம்💐🌷🌹🍀🌺🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
அருள் வழங்கும்
அன்னையே...
எல்லா வளமும் அருள்வாய் நீயே..
💐🍀🌺🙏🙏
வெள்ளிக்கிழமை
இனிய மாலை வணக்கம்💐🌷🌹🍀🌺🌸🙏🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
எளியோரை நேசித்து
ஏழ்மையுடன்வாழ்ந்த
ஷீரடி சாயியே போற்றி போற்றி
நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
எம்.ஜி.ஆர் சம்பளமே வாங்காமல் நடித்த 'நேற்று இன்று நாளை'..!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி மரியாதை உண்டு.
1972-ம் ஆண்டு 'இதயவீணை' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அடுத்த சில தினங்களில் நிரந்தரமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர், ஒப்புக்கொண்ட படங்களையும் முடிக்க வேண்டும், அரசியலிலும் தனிகட்சி தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரு வேலைகளிலும் தீவிரம் காட்டத்தொடங்கினார். இதற்கிடையில் நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படமும் தாமதமானது.
படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அசோகனின் நிலைமையை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் எனக் கேட்க, அசோகன் சொன்ன தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். #மக்கள் தலைவர்கள்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஏழுமலை வாசா.எமை
ஆளும்
ஸ்ரீ நிவாசா
புரட்டாசி
புதன்கிழமை
இனிய காலை வணக்கம் 💐🙏