#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 3
முடியரசன் இறந்த நாள் டிசம்பர் 3
கவிஞர், எழுத்தாளர்
வீறுகவியரசர் முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர்.பாரதிதாசனாரால் 'என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..' என்று பாராட்டப்பெற்றவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெருமதிப்பைப் பெற்ற திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர். தம் கவிதையின்படியே வாழ்ந்துகாட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர்.. தான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதோடு தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர்.எனவேதான் தவத்திரு.குன்றக்குடி அடிகளார் 'சாதி ஒழியவேண்டும் எனக் கவிதையிலும் மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை' என்று போற்றினார். சாதி-சமய,சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும் காரைக்குடி மீ. சு. உயர்நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
இலக்கியப் பங்களிப்புகள்
வ.எண் நூல் வகைமை ஆண்டு பதிப்பகம் குறிப்பு
01 முடியரசன் கவிதைகள் கவிதை 1954 ?
02 காவியப் பாவை கவிதை 1955 முத்துநிலையம், காரைக்குடி[1]
03 கவியரங்கில் முடியரசன் கவிதை 1960 ?
04 பூங்கொடி காப்பியம் 1964 ?
05 தமிழ் இலக்கணம் இலக்கணம் 1967 ?
06 வீரகாவியம் காப்பியம் 1970 ?
07 பாடுங் குயில்கள் கட்டுரைகள் 1975 ?
08 பாடுங்குயில் இசைப் பாடல் 1983 ?
09 ஊன்றுகோல் காப்பியம் 1983 ?
10 நெஞ்சு பொறுக்கவில்லையே கவிதை 1985 ?
11 மனிதனைத் தேடுகின்றேன் கவிதை 1986 ?
12 சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் வாழ்க்கை வரலாறு 1990 ?
13 தமிழ் முழக்கம் கவிதை 1999 ?
14 நெஞ்சிற் பூத்தவை கவிதை 1999 ?
15 ஞாயிறும் திங்களும் கவிதை 1999 ?
16 வள்ளுவர் கோட்டம் கவிதை 1999 ?
17 புதியதொரு விதி செய்வோம் கவிதை 1999 ?
18 எக்கோவின் காதல் சிறுகதை 1999 ?
19 அன்புள்ள பாண்டியனுக்கு கடிதம் 1999 ?
20 அன்புள்ள இளவரசனுக்கு கடிதம் 1999 ?
21 தாய்மொழி காப்போம் கவிதை 2000 ?
22 எப்படி வளரும் தமிழ்? கட்டுரை 2001 ?
23 மனிதரைக் கண்டு கொண்டேன் கவிதை 2005 ?
24 இளம்பெருவழுதி நாடகக் காப்பியம் 2008 ?
25 பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் தன்வரலாறு 2008 ?
சிறப்புகள் தொகு
இவரது கவிதைகளைச் சாகித்திய அகாதமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
அழகின் சிரிப்பு கவிதை முதல் பரிசு- பாவேந்தர் பாரதிதாசன்,முத்தமிழ் மாநாடு,கோவை-1950
'திராவிட நாட்டின் வானம்பாடி'பட்டம் - பேரறிஞர் அண்ணா-1957
பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டம்,பொற்பதக்கம் -1966
முடியரசன் கவிதைகள் நூலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு-1966
வீரகாவியம் நூலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு-1973
மாநில நல்லாசிரியர் விருது- 1974
சங்கப்புலவர் பட்டம்-குன்றக்குடி அடிகளார் (1974)
பாவரசர் பட்டம்,பொற்பேழை- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், உலகத்தமிழ்க்கழகம், பெங்களூரு- 1979
பொற்கிழி-பாவாணர் தமிழ்க்குடும்பம்,நெய்வேலி-1979
பொற்குவை உரூ.10,000-மணிவிழா எடுப்பு- கவிஞரின் மாணவர்கள், காரைக்குடி-1979
பொற்கிழி- பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, கவிஞர் மீரா,சிவகங்கை-1979
கவிப்பேரரசர் பட்டம், பொற்கிழி- கலைஞர், தி.மு.க மாநில இலக்கிய அணி-1980
தமிழ்ச்சான்றோர் விருது,பதக்கம்- தமிழகப்புலவர்குழு, சேலம்-1983
கலைஞர் விருது- என்.டி.இராமராவ்,ஆந்திர முதல்வர்,தி.மு.க முப்பெரும் விழா-1988
பாவேந்தர் விருது(1987க்கு உரியது) (தமிழ்நாடு அரசு) -1989
பூங்கொடி என்ற வீறுகவியரசர் இயற்றிய மொழிப்போர்க்காப்பியம் 1993-இல் இந்திராணி இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளது. இந்நூலைப்பற்றி பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை "உலக மொழிக்காப்பியங்கள. மூன்றனுள் ஒன்றாக கருதப்பெறும் சிறப்புடையது 'பூங்கொடி' என்று வாழ்த்தினார்.
பொற்கிழி- அனைத்துந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்-1993
சிறந்த தமிழ்த்தொண்டிற்கான 'அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில்',வெள்ளிப்பேழை, பொற்குவை உரூ.50,000-அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை-1993
கல்வி உலகக் கவியரசு விருது- அகில இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக்கழகம்-1996
பொற்கிழி- பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி-1997
கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு)-1998
வீறுகவியரசரின் படைப்புகள் தமிழ்நாட்டரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. - 2000
முடியரசனார் பற்றிய புகழ்மொழிகள்
'கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா.. பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்'
- தந்தை பெரியார்
'திராவிட நாட்டின் வானம்பாடிக் கவிஞர் முடியரசன்'
- பேரறிஞர் அண்ணா
'தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கின்ற
மான் துள்ளும் வேகத்தைக் கவிதையினால்
வான்பெய்யும் கோடைமழைபோலப் பொழிகின்ற முடியரசர்
முன்னாள் தொட்டு இந்நாள்வரை இருக்கின்ற நம்கவியரசர்
தன்மானக் குன்றம் – கொள்கை மாறாச் சிங்கம்'
'திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் – திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் – 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். அதிலும் குறிப்பாக, முரசொலியிலும், முத்தாரத்திலும் அவர் கவிதை இடம் பெறாத நாளே இருக்க முடியாது. இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால் அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்.
- கலைஞர் மு. கருணாநிதி
'கவிஞர் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.'
- மக்கள் திலகம் எம்.ஜி. இராமச்சந்திரன்
பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி.
புரட்சிக் கவிஞர் பரம்பரையில் புத்துலக உணர்வு படைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வடிப்பதில் தேர்ந்தவர் கவிஞர் முடியரசனார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, வழியில் தன்மானச் சுடராகத் திகழ்ந்தவர். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். கவிஞர்களிடையே ஓர் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் கவியரசர் முடியரசனார்.
- பேராசிரியர் க. அன்பழகன்
'என் மூத்த வழிதோன்றல் முடியரசனே.. எனக்குப் பிறகு கவிஞன் முடியரசன்'
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
'இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியசனார்'
- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
'சாதி ஒழிய வேண்டும் எனக் கவிதையிலும் மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவிஞர் முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை..'
- தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்குந்
தீத்திறக் காலை தெளி மருந்தே – மூத்த
முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்
முடியரசன் செய்யுண் முறை
- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன்
மூடப் பழக்கஞ் சாடிய பாவலன்
இலக்கியம் நிலமா இலக்கணம் அரணாக்
கவிதை கோலாக் கற்பனை கொடியா
வெல்க தமிழெனும் விறற்கொடி பொறியா
யாப்புப் படையா நல்லணி துணையாப்
புரட்சி முரசாப் புதுமை துடியாத்
தமிழை இகழ்வார் தன்னுயிர் பகையா
அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத்
தொடுமொழிப் போரில் தும்பை சூடியோன்
மொழியர சோச்சும் முதல்முடி யரசன்
குடியரசு போற்றுங் கொள்கை யோனே.
- முனைவர் வ.சுப. மாணிக்கனார்
முடியரசர் இவரென்றால் மக்க ளெங்கே?
முன்னோடும பரி எங்கே ? படைக ளெங்கே?
முடிஎங்கே? அரசெங்கே? முரச மெங்கே?
முத்தமிழில் ஒரு தமிழ்தான் முடியோ மற்ற
இடைத்தமிழ்தான் அரசோ மூன் றாவதான
எழிற்றமிழ்தான முரசோ ஓ.. சரிதான் இந்த
முடியரசர் பாவரசர் பாடுகின்றார் நாம்
முழங்காலை நிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்போம்
மும்முடியை ஓர்தலையில் முடித்த முடியரசர்
எம்முடியும் தலைவணங்கும் இயற்கையிலே கவிஞர்
தம்மரிய கவிதையினால் கவியரசர் ஆனார்
தாய்த்தமிழே அவர்முடியை உனக்குத்தான் சாய்ப்பார்
- கவிஞர் கண்ணதாசன்
வளையாத முடியசரன் வைரத் தூண்தான்
வளமார்ந்த பெரியாரின் கொள்கை வாள்தான்
தலையறுத்துத் தமிழ்ப்பகையின் தலை யறுக்கும்
தளைதட்டா வெண்பாக்கள் இவரின் தோட்டா
குலைஇளநீர் கொட்டியதாய் இனிமைப் பேச்சு
குடியறியாச் சிந்தனைகள் தமிழே மூச்சு
அலைகடலாய் கருத்துமனம் பெரியார் அண்ணா
ஆழ்மனத்தில் வைத்திருந்த புதையல் காடு
எவரெவரோ எழுதுகின்றார் இவரைப் போன்றே
எழுந்தவர்யார் எழுத்தாலோ? பாவேந்தர்தம்
தவப்புதல்வர் தமிழ்ப்புலவர் இவரின் பாட்டு
தன்மான இயக்கத்தின் தளர்தா லாட்டு
யுகப்புரட்சி எழுத்தாளர் தமிழர் கைக்குஉயிர்நூற்கள் படைப்பாளர் உன்றன் தொண்டை
அகங்குளிர நினைக்கின்றேன் உருவம் கூட
அகலவில்லை அடடாநீ எங்கே போனாய்?
- உவமைக்கவிஞர் சுரதா
'கொட்டிக் கொடுத்தாலும் கோமான்கள் அழைத்தாலும்
எட்டியே பார்க்காத இளம்போத்துச் சிங்கமாய்
அட்டியின்றி பணத்தாசை அணுவளவும் இல்லாமல்
சுட்டி உரைக்கும் சுடர்க்கவியாய் கவியுலகில்
பாடிப்பறந்த பறவையாம் கவியசரர் முடியரசர்'
- *╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 3
டிசம்பர் - 03. தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர் அநுத்தமா நினைவு நாள்.
அநுத்தமாவின் இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மநாபன்.ராஜேஸ்வரி பத்மநாபன், ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1922 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 ஆம் தேதி பிறந்தார்.மெட்ரிகுலேஷன் வரை படித்த இவர், தனது சொந்த முயற்சியால் தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.12-ஆம் வயதிலேயே பத்மநாபன் என்பவரை மணந்தார்.தனது 22-வது வயதில் எழுதத்தொடங்கினார்.தான் எழுதிய முதல் சிறுகதையான "ஒரே ஒரு வார்த்தை'யை தன் மாமனாரிடம் படிக்கக் கொடுத்தார். அதைப் படித்துவிட்டு ""பலே'' என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி பாராட்டியவர், லலிதா சகஸ்ரநாமத்திலிருந்து, "அநுத்தமா' என்ற பெயரை தேர்வு செய்து, மருமகளுக்குப் புனைபெயராகச் சூட்டி மகிழ்ந்தார்.
மாமனார் புனைபெயர் சூட்டிய பிறகுதான் அநுத்தமா என்ற பெயரில் எழுதிக் குவிக்கத் தொடங்கினார் ராஜேஸ்வரி பத்மநாபன்.1950-60-களில் நடுத்தர குடும்பத்துப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் விதமாக பல படைப்புகளை எழுதினார்.இவர், "தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டென்' என்றே புகழப்பட்டார்.இவர் எழுதிய மணல் வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம், மாற்றாந்தாய் போன்ற படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.சமுதாயத்தில் நிலவும் அன்றாடப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றைப் போக்கும் நோக்கத்தோடு எழுதப்படுபவைதான் சமூகப் புதினங்கள்.இவ்வகைப் புதினங்கள் சமுதாயச் சிக்கல்கள், சீர்திருத்தங்கள், பிரசாரங்கள் என்னும் போக்குகளை அடிப்படையாகக் கொண்டவை.
இவரது முதல் படைப்பான "அங்கயற்கண்ணி', கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது "மணல்வீடு' புதினம் முதல் பரிசு பெற்றது.இதன்பிறகு பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. அநுத்தமா எழுதிய கதைகள் அனைத்தும் குடும்பக் கதைகள். ஒவ்வொரு இல்லத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளைத்தான் அவை பிரதிபலித்தன.ஆங்கிலத்திலும் சிறந்த புலமை வாய்க்கப் பெற்றிருந்தார் அநுத்தமா. மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர்.தன் எழுத்துகளுக்குச் சிறப்பு சேர்த்த, வளர்த்த கி.வா.ஜகந்நாதன் மீது அநுத்தமாவுக்கு அளவுகடந்த பக்தியும் மரியாதையும் இருந்தது. கி.வா.ஜ., எல்லோரிடம் அநுத்தமாவை அறிமுகப்படுத்தும்போது "எனது தங்கை' என்று சகோதரப் பாசத்துடனேயே அறிமுகப்படுத்துவாராம்.
1956-இல் இவர் படைத்த "பிரேமகீதம்' என்ற புதினம், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் விருதைப் பெற்றது.ஒரே ஒரு வார்த்தை, வேப்பமரத்து பங்களா ஆகிய புதினங்கள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.புனைவுக் கதைகளைத் தவிர, பறவை இனங்களைப் பற்றி ஆராய்ந்து, நான்கு புதினங்களைக் குழந்தை இலக்கியத்துக்கு நல்கியுள்ளார்.மோனிகா ஃபெல்டன் எழுதிய "ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு' என்ற ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15-க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதிக் குவித்திருக்கிறார் அநுத்தமா.கேட்ட வரம்' என்ற நாவல், பாளையம் என்ற ஊரில் நடைபெறும் பஜனை சம்பிரதாய நெறி பற்றிக் கூறும் நாவல். இந்நாவலை காஞ்சி மகா பெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளே பாராட்டியுள்ளார்.
அநுத்தமாவின் "ஒரே ஒரு வார்த்தை' எனும் நாவல் மனோதத்துவ ரீதியில் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற பெருமைக்கும் புகழுக்கும் உரியதாயிற்று.சமையலுக்கும் நாவலுக்கும் அடுக்களையில் இருந்தே பாத்திரங்களை எடுக்கிறீர்களே'' என்று பாராட்டுவாராம் அகிலன்.ஆல மண்டபம், நைந்த உள்ளம், ஒன்றுபட்டால், ஜயந்திபுரத் திருவிழா, துரத்தும் நிழல்கள், சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு), மாற்றாந்தாய், முத்துச் சிற்பி, சுருதிபேதம், கௌரி, லட்சுமி, தவம், பூமா, ஒரே ஒரு வார்த்தை, ருசியான கதைகள், அற்புதமான கதைகள், பிரமாதமான கதைகள், படுபேஷான கதைகள், அழகான கதைகள் ஆகியவை இவருடைய பிற படைப்புகள். குடும்பத்துக்கும் எழுத்துக்கும் செழுமை சேர்த்த அநுத்தமா, 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று மரணமடைந்தார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🤔தெரிந்து கொள்வோம் #🤔 Unknown Facts
தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் உள்ள யூயாங் துஜியா மற்றும் மியாவ் தன்னாட்சி கவுண்டியில் உள்ள சோங்கிங்-ஹுனான் விரைவுச்சாலையில் உள்ள ஒரு பரிமாற்ற மையத்தின் இந்த அற்புதமான வான்வழி காட்சிகளைப் பாருங்கள். இந்த விரைவுச்சாலை சோங்கிங்கின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முக்கியமான போக்குவரத்து மையமாக செயல்படுகிறது, இது பிராந்திய தகவல்தொடர்புக்கு உதவுகிறது மற்றும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை வளர்க்கிறது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 3
1992 - 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற, உலகின் முதல் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ்), இங்கிலாந்தில் ஒரு கணினியிலிருந்து, வோடஃபோன் கைப்பேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்ட நாள் டிசம்பர் 3.
தந்திதான் முதல் எழுத்துமூலமான (டெக்ஸ்ட்) செய்தி முறையாகும். தொலைபேசி வந்தபின், எழுத்துமூலமான செய்திகளை அனுப்ப, 1933இல் தொலைஅச்சு (டெலக்ஸ் - டெலிபிரிண்ட்டர்) சேவை உருவானது. இரண்டாம் உலகப்போரின்போது பரவலாகி, 1980களில் தொலைநகல் (ஃபேக்ஸ்) புழக்கத்துக்கு வரும்வரை டெலக்ஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டது. கையெழுத்துகள், படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அனுப்ப உதவிய தொலைநகல், டெலக்சை மறையச்செய்தது. எழுத்துச் செய்திகளைப்பெற பேஜர் 1949இல் உருவாக்கப்பட்டு, பின்னர் செய்திகளைப் பெறவும் அனுப்பவும் வசதியுள்ள பேஜர்கள் உருவாயின. 1980களில் இவை பரவலாகப் புழக்கத்திலிருந்தன. 1973இல் கையில் எடுத்துச்செல்லத்தக்க தொலைபேசி அறிமுகமாகிவிட்டதைத் தொடர்ந்து, அதில் எழுத்துச் செய்திகளையும் தரும் முயற்சி 1980களில் தொடங்கியது. 1983இல் அஞ்சல், தொலைத்தொடர்பு நிர்வாகங்களின் ஐரோப்பிய மாநாடு, ஐரோப்பாவுக்கான கம்பியில்லாத் தொலைபேசித் தரநிலைகளை நிர்ணயிக்க ஜிஎஸ்எம் குழுவை அமைத்தது. இதில் குரல் அல்லாத சேவைகளுக்கான குழுவின் தலைவராக இருந்த ஃப்ரீட்ஹெல்ம் ஹில்ப்ராண்ட், ஏராளமான சிறிய செய்திகளை தட்டச்சு எந்திரத்தில் அச்சிட்டுப்பார்த்து, ஒரு சிறிய, முழுமையான தகவலை அனுப்ப 160 எழுத்துகள் தேவைப்படும் என்று வரையறுத்தார். முதல் வணிகரீதியான குறுஞ்செய்திச் சேவையை ஃபின்லாந்தின் ரேடியோலிஞ்சா நிறுவனம் 1993இல் தொடங்கியது. குறுஞ்செய்தி பிரபலமடைந்ததைத் தொடர்ந்து, பலருக்கும் ஒரே நேரத்தில் அனுப்பும் சேவையை, 2006இல் ட்விட்டர் அறிமுகப்படுத்தியது. 160 எழுத்துகளில், 20 எழுத்துகளை பயனர் பெயர் முதலான தகவல்களுக்கு ஒதுக்கியதால், 140 எழுத்துகள்கொண்ட செய்திகளை இதில் அனுப்ப முடிந்தது. குழுச் செய்திகளின் வெற்றியைத் தொடர்ந்து, 3ஜி இணையச் சேவையின் வளர்ச்சியைப் பயன்படுத்தி 2009இல் வாட்ஸ்அப் உருவானது. எழுத்துச் செய்திகளை அனுப்புவதற்காகத் தொடங்கிய முயற்சியே, எல்லாவிதமான கோப்புகளையும் செய்திச் செயலிகள்மூலம் கைப்பேசிகளுக்குள் பரிமாறிக்கொள்ளும் வளர்ச்சியைத் தொடங்கிவைத்தது!
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 3
1994 - முதல் ப்ளேஸ்டேஷன் கருவியை ஜப்பானிய நிறுவனமான சோனி அறிமுகப்படுத்திய நாள் டிசம்பர் 3.
. உண்மையில், நிண்ட்டெண்டோ நிறுவனம், தனது நிகழ்பட விளையாட்டுக் கருவியில்(வீடியோ கேம் கன்சோல்), குறுவட்டை(சிடி) பயன்படுத்துவதற்கான ஒரு துணைக் கருவியைத் தயாரித்துத் தருமாறு சோனியுடன் 1988இல் செய்திருந்த ஒப்பந்தத்திற்காக, சோனி உருவாக்கியிருந்த கருவிதான் இதற்கு அடிப்படையாக இருந்தது. 1977இல் 'கலர் டிவி-கேம்' என்ற நிகழ்பட விளையாட்டின்மூலம் அத்துறையில் நுழைந்திருந்த ஜப்பானிய நிறுவனமான நிண்ட்டெண்டோ, 1985இல் அத்துறையின் முன்னணி நிறுவனமாகியிருந்தது. அக்காலத்தில், நிகழ்பட விளையாட்டுகளுக்கான ஊடகமாகப் பயன்படுத்தப்பட்ட கேர்ட்ரிட்ஜ் வெறும் 12-15 எம்பி இடவசதியை மட்டுமே கொண்டிருந்ததால், 650 எம்பி இடமுள்ள சிடி, அத்துறைக்கு மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்பட்டது. ஏற்கெனவே இத்துறையின்மீது ஆர்வம் கொண்டிருந்த சோனி, தான் உருவாக்கும் கருவியின்மூலம் விளையாடப்படும் குறுவட்டுகளின் காப்புரிமை தன்னிடமே இருக்கும்படி அந்த ஒப்பந்தத்தைச் செய்திருந்தது. இதன்மூலம் தனது விளையாட்டுகளின்மீதான கட்டுப்பாடு சோனியிடம் சென்றுவிடும் என்பதைத் தாமதமாகப் புரிந்துகொண்ட நிண்ட்டெண்டோ, டச்சு நிறுவனமான ஃபிலிப்சுடன் ரகசியமாக ஒப்பந்தம் செய்துகொண்டது. அமெரிக்காவின் லாஸ்வேகசில், 1991இல் நடைபெற்ற கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில், சோனியுடனான ஒப்பந்தத்தை அறிவிக்கவேண்டிய நேரத்தில், ஃபிலிப்சுடனான ஒப்பந்தத்தை அறிவித்தபோதுதான் சோனிக்கு இது தெரிந்தது. அதிர்ச்சி அடைவதற்கு பதிலாக, வாய்ப்பாக எடுத்துக்கொண்ட சோனி, நிண்ட்ணெ;டோவின் வீடியோகேம் கன்சோலுக்காக உருவாக்கியிருந்த சிடி ப்ளேயருக்கு, தானே புதிதாக உருவாக்கிய வீடியோகேம் கன்சோல்தான், ப்ளேஸ்டேஷன் (ஒப்பந்தத்தில் ப்ளே ஸ்டேஷன் என்றிருந்தது!) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. வீடியோகேம் கருவியாக மட்டுமின்றி வழக்கமான சிடி ப்ளேயராக பாடல்கள் முதலானவற்றையும் இயக்கிய இந்தக் கருவி, வரலாற்றிலேயே 10 கோடி விற்பனையான முதல் கேம் கன்சோலாக வெற்றியடைந்து, நிண்ட்டெண்டோவுக்கு சோனியை சிம்மசொப்பனமாக்கியது. பத்தாண்டுகளாக இந்தக் கருவி கோலோச்சியபின், 2004இல் அறிமுகப்படுத்திய ப்ளே ஸ்டேஷன் 2 என்ற இரண்டாவது கருவி பதினைந்து கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி, அதிகம் விற்பனையான வீட்டு விளையாட்டுக் கருவியாக இன்றுவரை திகழ்கிறது. கையில் எடுத்துச் செல்லும் ரகத்தில் ப்ளே ஸ்டேஷன் போர்ட்டபிள் என்ற கருவியையும் சோனி உருவாக்கினாலும், அத்துறையில் நிண்ட்டெண்டோதான் முதலிடத்திலிருக்கிறது. சோனியின் ஊழியராக இருந்துகொண்டே நிண்ட்டெண்டோவின் விளையாட்டுக் கருவிகளுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்த கென் குட்டரகியை பணிநீக்கம் செய்யுமளவுக்குச் சோனி சென்றிருந்தாலும், ஒப்பந்தம் முறிந்தபின் சோனியின் ப்ளேஸ்டேஷன் உருவாக வழிகாட்டியாக இருந்த அவர்தான் ப்ளேஸ்டேஷனின் தந்தை என்று புகழப்படுகிறார்!
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 3
எக்ஸ் கதிர்த் நிறமாலை ஆய்வுகளுக்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்ற கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 3, 1886).
கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான் (Karl Manne Georg Siegbahn) டிசம்பர் 3, 1886ல் ஸ்வீடனின் ஓரிப்ரோவில் ஜார்ஜ் சீக்பான் மற்றும் எம்மா ஜெட்டர்பெர்க்கின் மகனாகப் பிறந்தார். 1906ல் ஸ்டாக்ஹோமில் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் லண்ட் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடங்கினார். அவரது கல்வியின் போது அவர் ஜோகன்னஸ் ரைட்பெர்க்கின் செயலாளர் உதவியாளராக இருந்தார். 1908ல் அவர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1911 ஆம் ஆண்டில் லண்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வறிக்கை காந்தவியல் ஃபெல்ட்மெசுங்கன் (காந்தப்புல அளவீடுகள்) என்று பெயரிடப்பட்டது. ரைட்பெர்க்கின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் செயல் பேராசிரியரானார். மேலும் அவருக்குப் பின் 1920ல் முழு பேராசிரியராக இருந்தார். இருப்பினும், 1922 ஆம் ஆண்டில் அவர் உப்சாலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவிக்கு லண்டை விட்டு வெளியேறினார்.
1937 ஆம் ஆண்டில், ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸின் நோபல் நிறுவனத்தின் இயற்பியல் துறையின் இயக்குநராக சீக்பான் நியமிக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டில் இது மன்னே சீக்பான் நிறுவனம் (எம்எஸ்ஐ) என மறுபெயரிடப்பட்டது. இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டன. ஆனால் இந்த பெயர் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட மன்னே சீக்பான் ஆய்வகத்தில் வாழ்கிறது. மன்னே சீக்பான் 1914ல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோபி குறித்த தனது ஆய்வைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஹென்றி மோஸ்லி சில கூறுகளின் அலைநீளத்திற்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றின் இடத்திற்கும் இடையிலான உறவைக் கண்டுபிடிப்பதற்காக அதே வகை ஸ்பெக்ட்ரோமீட்டரைப் பயன்படுத்தினார். அதன்பிறகு அவர் மேம்பட்ட சோதனை எந்திரத்தை உருவாக்கினார். இது வெவ்வேறு கூறுகளின் அணுக்களால் உற்பத்தி செய்யப்படும் எக்ஸ்ரே அலைநீளங்களை மிகத் துல்லியமாக அளவிட அனுமதித்தது.
மேலும், மோஸ்லி கண்டுபிடித்த பல நிறமாலை கோடுகள் அதிக கூறுகளைக் கொண்டிருப்பதை அவர் கண்டறிந்தார். இந்த கூறுகளைப் படிப்பதன் மூலமும், ஸ்பெக்ட்ரோமீட்டரை மேம்படுத்துவதன் மூலமும், சீக்பானுக்கு எலக்ட்ரான் ஷெல் பற்றிய முழுமையான புரிதல் கிடைத்தது. எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோபி, சீக்பான் குறியீட்டில் உள்ள உறுப்புகளுக்கு சிறப்பியல்புடைய வெவ்வேறு நிறமாலை கோடுகளுக்கு பெயரிடுவதற்கான ஒரு மாநாட்டை அவர் உருவாக்கினார். சீக்பானின் துல்லியமான அளவீடுகள் குவாண்டம் கோட்பாடு மற்றும் அணு இயற்பியலில் பல முன்னேற்றங்களைத் தூண்டின.
சீக்பானுக்கு, எக்ஸ் கதிர்த் நிறமாலைத் துறையில் கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக 1924ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் ஹியூஸ் பதக்கம் 1934 மற்றும் ரம்ஃபோர்ட் பதக்கம் 1940 ஆகியவற்றை வென்றார். 1944ல், அவர் சீக்பான் பம்பிற்கு காப்புரிமை பெற்றார். சீக்பான் 1954 இல் ராயல் சொசைட்டியின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எக்ஸ் கதிர் நிறமாலை மூலம் எலக்ட்ரான்களுக்கு மூன்றாவது உறை(எம். தொடர்) உள்ளது என்பதைக் கண்டறிந்தவர். எக்ஸ் கதிர்த் நிறமாலைத் ஆய்வுகளுக்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்ற கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான் செப்டம்பர் 26, 1978ல் தனது 91வது அகவையில் ஸ்டாக்ஹோம், ஸ்வீடனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 3
எழுத்தாளர் ஜோசப் கொன்ராட் பிறந்த தினம் இன்று.
ஜோசஃப் கான்ராட் (Joseph Conrad, டிசம்பர் 3, 1857 – ஆகஸ்ட் 3, 1924) ஆங்கில எழுத்தாளர். தற்கால உக்ரைனில்ஒரு போலந்தியக் குடும்பத்தில் பிறந்த கொன்ராட் பின்னர் பிரிட்டானியக் குடியுரிமை பெற்றார்.
தனது இருபது வயதுக்குப் பின்னரே ஆங்கில மொழியைக் கற்ற கொன்ராட், ஆங்கிலத்தில் பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
அவருடையப் படைப்புகள் கடல், கப்பல் வாழ்க்கை ஆகியவற்றையே பெரும்பாலும் களமாகக் கொண்டுள்ளன. கடமையுணர்வும், விசுவாசமும் மனிதர்களின் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் இவருடைய புதினங்களிலும், சிறுகதைகளிலும் கருபொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டானியப் பேரரசு புகழின் உச்சியில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கொன்ராடின் படைப்புகள், அதன் தொலைதூரப் பிரதேசங்களை ஆளும் அதிகாரிகளின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டுகின்றன. கொன்ராடின் உரைநடைத் திறன் புகழ்பெற்றது. ஆங்கில இலக்கிய உலகு அதுவரை கண்டிராத சோக யதார்த்தவாதச் சூழலை ஆங்கிலப் புதினப் படைப்புச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியவர் கொன்ராட். அவருடைய கதை சொல்லும் பாணியும், எதிர் நாயக கதை மாந்தரும் பல பிற்கால எழுத்தாளர்களுக்கு தாக்கங்களாக அமைந்துள்ளன.
கொன்ராடின் படைப்புகள் உலகெங்கும் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன; அவை பல திரைப்படங்களின் திரைக்கதைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 3
ரிச்சர்ட் ஜோஹான் குன் (3 டிசம்பர் 1900 - 1 ஆகஸ்ட் 1967) பிறந்த தினம்.
ஆஸ்திரிய-ஜெர்மன் உயிர் வேதியியலாளர் ஆவார், இவர் 1938 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார் "கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின்கள் குறித்த அவரது பணிக்காக".
ஜெர்மன் கரிம வேதியியலாளர். வியன்னாவில் பிறந்தவர். மியூனிக் பல்கலைக்கழகத்தில் ஆர். வில்ஸ்டெட்டரின் கீழ் படித்தார், 1926 ஈ.டி.எச் சூரிச்சில் பேராசிரியர், ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் 29 ஆண்டுகள் பேராசிரியர், கைசர் வில்ஹெல்ம் மருத்துவ நிறுவனத்தின் 37 ஆண்டுகள் இயக்குநர். இயற்கை தயாரிப்பு சேர்மங்கள், குறிப்பாக நிறமி கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின்கள் விலங்கு மற்றும் தாவர இராச்சியங்களில் பரவலாக காணப்படும் ஆராய்ச்சிகளில் அவர் செய்த சாதனைகளுக்காக 1938 ஆம் ஆண்டில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் அப்போது நாஜிக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த விருதை வென்றார். கரோட்டினாய்டுகள் இணைந்த இரட்டை பிணைப்புகளின் நீண்ட சங்கிலிகளைக் கொண்டுள்ளன என்பதில் கவனம் செலுத்தி, டிஃபெனைல் பாலியின்கள் போன்ற பல்வேறு பாலியன்களை ஒருங்கிணைத்து அவற்றின் வண்ணங்களை ஒப்பிட்டுப் பார்த்தோம். மேலும், கரோட்டினாய்டுகளின் ஆய்வுக்கு ரஷ்ய தாவரவியலாளர் எம்.எஸ்.டிஸ்வெட் (1872-1919) உருவாக்கிய அட்ஸார்ப்ஷன் க்ரோமடோகிராஃபி பயன்படுத்துவதன் மூலம் நிறமிகளைப் பிரிப்பதில் வெற்றி பெற்றோம். கூடுதலாக, வைட்டமின் பி 2 தொகுப்பு (1935) மற்றும் வைட்டமின் ஏ தொகுப்பு (1937) போன்ற படைப்புகளுக்கு அவர் பிரபலமானவர், அவர் ஈ.டி.எச் சூரிச்சின் பி. கலருடன் வன்முறையில் மோதுகையில் தொடர்ந்தார். கூடுதலாக , வைட்டமின் பி 6 இன் கட்டமைப்பை நிர்ணயிப்பதிலும், பாந்தோத்தேனிக் அமிலம் (வைட்டமின் பி வளாகங்களில் ஒன்று) மற்றும் அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் சி) ஆகியவற்றை ஒருங்கிணைப்பதிலும் அவர் சாதனைகளைச் செய்துள்ளார். மேலும், கிளமிடோமோனாஸின் இனப்பெருக்கம் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்ட அவர், உயிரியல் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்தார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 3
நெசவுத் துறையின் முன்னோடி சாமுவேல் கிராம்ப்டன் பிறந்ததினம்.
சாமுவேல் கிராம்ப்டன் (Samuel Crompton) ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளரும், நெசவுத் துறையின் முன்னோடியும் ஆவார்.
யேம்சு ஆர்கிரீவ்சு, ரிச்சார்ட் ஆர்க்ரைட் ஆகியோரின் ஆக்கங்களை ஆராய்ந்ததில் இவர் மியுனூற்றற்பொறியை 1779 இல் கண்டுபிடித்தார். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியில் இது முக்கிய பங்களிப்பாகப் பார்க்கப்படுகிறது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*









![🌎பொது அறிவு - Manne Siegbahn 1978 ]880 Manne Siegbahn 1978 ]880 - ShareChat 🌎பொது அறிவு - Manne Siegbahn 1978 ]880 Manne Siegbahn 1978 ]880 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_690707_23eef2c2_1764740688797_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=797_sc.jpg)



