#🌺டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு நாள்🙏 #அம்பேத்கர் #டிசம்பர் - 6
மக்கள் அந்த மைதானத்திற்குள் சாரை சாரையாக வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். அவரது உடலை கடைசியாக காணவேண்டி மிக நீண்ட வரிசை ஒன்று உருவானது...
வரிசையில் நின்ற எனக்கு இரண்டு மணி நேரம் கழித்து அவரை பார்ப்பதற்கான முறை வந்தது. அவர் உறங்குவது போல இருந்தார். அமைதி கொண்டிருந்தார். அவரது மூக்குத் துவாரங்கள் பஞ்சினால் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் மாலைகளையும், மலர்களையும் அவரது காலடியில் வைத்தனர்...
அன்று மதியம் இறுதி ஊர்வலம் துவங்கியது. நத்தை வேகத்தில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். எங்கள் மீது சூரியன் அனலைக் கக்கியது. அப்போது நான் மொத்தக் கூட்டத்தின் எண்ணிக்கையை கணிப்பதற்காக ஒரு பாலத்தின் மீது ஏறினேன்...
ஒரு எறும்பு புற்றை உடைத்ததைப் போல அந்த ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. மொத்த பேரையும் ஒரு பார்வையில் பார்க்க முடியாத அளவுக்கு ஊர்வலம் விசாலமாக இருந்தது...
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் கட்டுக்கடங்காத துயரமும் அதை அவர்கள் வெளிப்படுத்திய விதமும் எப்போதும் என்னால் மறக்க முடியாது...
ஏராளமான ஆண்களும் பெண்களும் தமது நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தனர். மற்றவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் கதறிக் கொண்டிருந்தனர்...
தயா பவார்.
தமிழில் பிரேமா ரேவதி.
(பாபாசாகேப் அருகிருந்து - என்ற நூலிலிருந்து)