#📝என் இதய உணர்வுகள் #✍️தமிழ் மன்றம் #✍️கவிதை📜 #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம்
தமிழா தமிழா
தமிழை விதைத்திடு
தமிழா தமிழா
தமிழை கொடுத்திடு
கொடுக்க கொடுக்க
தமிழும் வளரும்
கொடுக்க கொடுக்க
தமிழினம் வாழும்
தமிழ்மொழி வைரமடா
பட்டைத்தீட்ட மிளிருமடா
தமிழை தடுக்க
தடுக்க தழைக்குமடா
தமிழை எடுத்துச்
சுவைக்க அமுதமடா
தமிழனை அடக்க
அடக்க வெடிப்போமடா
தமிழர் உயிரும்
உடலும் தமிழ்மொழியடா
தமிழர் பண்பாடு
ஆதியில் தோன்றியதடா
உணர்ச்சியின் உச்சம்
மெய்யும் தழுவுமடா
உடல் மொழியில்
உயிரும் கலந்ததடா
சிவனும் ஆதிசக்தியும்
நாவினில் அமர்ந்தார்களடா
சிவசக்தி தாண்டவமாடி
உருவகமாய் மொழியானாளடா
அகமும் புறமும்
செழித்து இருக்கிறாள்
அகிலத்தில் தமிழன்னை
முதலில் தோன்றினாளடா
சீரிளமை சிதையாமல்
செம்மொழியாய் உலாவுகிறாளடா சீரமைப்பு தனித்துவம்
தன்னகத்தே கொண்டவளடா
இலக்கணத்தில் புறப்பட்டு
இலக்கியத்தில் வாழ்கிறாளடா
இதிகாசம் புராணம்
தமிழின் தொன்மையடா
தமிழர் வாழ்வியல்
மொழியே தமிழடா
தந்தை மொழியாம்
தமிழ்த்தாய் கொடுத்தாளடா
இயலும் இசையும்
நாடகமும் நிறைந்தவளடா
இனியென்றும் தமிழோடு
தரணியிலே பயணிப்போமடா
✍️தமிழ் தாசன்
#❤️எங்கேயும் காதல் #💑என் முதல் காதல்😊 #💌 என் காதல் கடிதம் #📝என் இதய உணர்வுகள் #💖நீயே என் சந்தோசம்🥰
மாது - பேரின்ப ஊற்று
***************************
வானமும் மேகமும்
இருப்பு பாதையடி
வாழ்வில் பறவையாய்
பறந்து மகிழ்வோம்
நீலக்கடலில் நீந்தியோடி
தாகமும் தணிப்போம்
நீயும் நானும்
ஆழ்கடலில் மூழ்கிடுவோம்
இளமையின் சூடும்
சிலிர்க்க வைக்கும்
இனிமை பொங்க
உரசல் அரங்கேறும்
தேகமும் மின்னலில்
தீப்பொறிப் பறக்கும்
தேவதையின் அன்பில்
நித்தமும் குளிப்போனே
உள்ளம் குளிர்ந்து
கூடல் தித்திக்கும்
உயிருக்குள் பெருமூச்சு
ஓங்கியே ஒலிக்கும்
மல்லிகை வாசம்
நாசியை துளைக்கும்
மங்கையின் முகமும்
நிலவாய் மிளிரும்
பரிதவிக்கும் வேளையிலே
ஆற்றித் தேற்றுவாள்
பனித்துளியில் வாழ்வின்
தத்துவம் விளங்கும்
இருமனம் இணைந்து
கீதங்கள் ஒலிக்கும்
இரட்டிப்பு இன்பம்
உள்ளத்தில் வேரூன்றிடும்
✍️தமிழ் தாசன்
#💖நீயே என் சந்தோசம்🥰 #📝என் இதய உணர்வுகள் #💌 என் காதல் கடிதம் #💑என் முதல் காதல்😊 #❤️எங்கேயும் காதல்
மாது - அதிசயமான புதையல்
**********************************
காதலும் கரைபுரண்டு
பரவசம் பொங்கிடும்
காலங்களில் வாழ்வும்
தேனாய் தித்திக்கும்
என்னிதயம் வென்று
புன்னகைக்கும் வஞ்சிக்கொடி
எழில்மிகு வண்ணம்
வானவில் காதலி
மழலைக் குரலில்
கொஞ்சிடும் தேவதை
மங்கையின் பேரழகோ
மஞ்சள் நிலா
தாமரை இதழ்களில்
தேன்முத்தம் கொடுத்திடுவாள்
தாகம் தீர்க்கும்
அமுதமான பேரூற்று
நெஞ்சினில் ஆசையை
தேக்கியே வைத்தேன்
நெடுந்தீவில் நித்தமும்
இருவரும் மகிழ்வோம்
மதுரசம் அருந்திட
பரவசம் பொங்கிடும்
மலரும் மணம்வீசும்
ஈடில்லா பேரன்பிலே
கவிதையில் அழகாய்
மிளிர்ந்து வருவாள்
கண்களில் பேசியே
இதயத்தில் கலந்திடுவாள்
தேன்மொழி அழகோ
மின்னலில் மிளிர்கிறது
தேவதையின் நேசமும்
காலமெல்லாம் தொடரும்
ஆதி தமிழன்
#🙏நமது கலாச்சாரம் #📝என் இதய உணர்வுகள் #👉வாழ்க்கை பாடங்கள் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰
அருவாய் உருவாகிய
கலங்கமில்லா காதலியே
உருவாய் வந்தாய்
கண்களில் நிறைந்தாயே
காற்றினிலே கடந்து
மனதினிலே நுழைந்தாய்
காவியமாய் தினமும்
மணமும் கமழுகிறாய்
உயிரும் உணர்வும்
இரண்டறக் கலப்பாயா
மரணம் வரும்வரை
எனக்காக இருப்பாயா
காவியமே மௌனம்
களைந்து வருவாயா
காலங்களில் கரைந்து
தினமும் காத்திருக்கிறேன்
✍️தமிழ் தாசன்
#✍️தமிழ் மன்றம் #👉வாழ்க்கை பாடங்கள் #📝என் இதய உணர்வுகள் #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு
#💞Feel My Love💖 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #📝என் இதய உணர்வுகள் #👉வாழ்க்கை பாடங்கள் #✍️தமிழ் மன்றம்
#📝என் இதய உணர்வுகள் #👉வாழ்க்கை பாடங்கள் #💖நீயே என் சந்தோசம்🥰 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💞Feel My Love💖
#📝என் இதய உணர்வுகள் #🙏நமது கலாச்சாரம் #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #💚I Love தமிழ்நாடு
#பிரதோஷம் #பிரதோஷம் வளர்பிறை #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
இமயத்தின் வாசன்
முக்கண் திருசடையனே
எங்கும் நிறைந்தவன்
முக்காலமும் அறிந்தவனே
ஆளும் நீலகண்டன்
திருமேனி கண்டேன்
ஆதியில் தோன்றிய
திருவண்ணாமலை ஆண்டவன்
அன்பின் வடிவம்
கருணையின் வள்ளல்
அணுவணுவான பரம்பொருள்
கம்பீரமாய் வீற்றிருப்பவனே
அன்பே சிவமாக
அனைத்தும் நிறைந்திருப்பவன்
அவனின்றி அணுவும்
அவனியில் அசையாது
சாம்பல் மேனியில்
பூசியே ஆடுபவனே
சங்கும் உடுக்கையும்
திருக்கரத்தில் ஏந்தியவனே
உமையாள் தன்னில்
சரிபாதி உடையவனே
உலகநாதா திருச்சடையில்
கங்கையைச் சுமப்பவனே
தமிழை கொடுத்த
தமிழ்த்தாய் தலைவனே
தரணியிலே தமிழ்மொழியில்
தமிழன்னையை தந்தாயே
தமிழால் நித்தம்
வணங்கி மகிழ்கிறேன்
தமிழால் தினமும்
வாழ்க்கையும் வாழ்கிறேன்
தமிழில் உயிரும்
உணர்வும் கொண்டேன்
தமிழைப் படைத்த
ஆதிநாதா போற்றுகிறேன்
✍️ தமிழ் தாசன்
#📝என் இதய உணர்வுகள் #👉வாழ்க்கை பாடங்கள் #💖நீயே என் சந்தோசம்🥰 #📜கவிதையின் காதலர்கள் #💝இதயத்தின் துடிப்பு நீ
மாது - அன்பின் வடிவம்
****************************
கவிதையில் தினம்தோறும்
மலர்ந்து உலாவுகிறாள்
கற்பனைக் களஞ்சியத்தில்
பொங்கி வழிகிறாள்
காலையில் கலக்கம்
கரைந்து போகும்
காலமெல்லாம் நங்கை
அருள் புரிவாளே
கவலை மறைந்து
கனவுகள் உணர்வாகும்
கன்னியின் கரமும்
எப்போதும் காத்திடும்
புதியதொரு விடியலில்
மனமும் ஆர்ப்பரித்தது
புதுமையான முறையில்
பூலோகத்தில் மகிழ்வோம்
எதுகை மோனையோடு
இருவரும் இணைந்தோம்
எழுந்துத் துள்ளியோடுடி
ஏழுசுரங்களில் தவழ்ந்திடுவோம்
மாதவள் பூமியை
அன்னையாய் காப்பவள்
மாங்கனி நகரில்
அதிசயமான புதையல்
சந்தங்கள் பிறந்து
தேனிசை ஒலிக்கும்
சந்தித்து இணைந்த
வரிகளில் பேரானந்தமே
மந்திரமாய் ஈர்த்து
மனங்களில் நிறைந்தாள்
மங்கையின் பேரன்பு
உயிருக்குள் தித்திக்கும்
✍️ஆதி தமிழன்