CMO Tamilnadu
ShareChat
click to see wallet page
@cmotamilnadu
cmotamilnadu
CMO Tamilnadu
@cmotamilnadu
Office of the Chief Minister of TamilNadu.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தனிச் செயலாளர் மறைந்த திரு. கோ.சண்முகநாதன் அவர்களின் மனைவி திருமதி யோகம் சண்முகநாதன் அவர்கள் இயற்கை எய்தியதையொட்டி அவரது இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் நேரில் சென்று, உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களை அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் கவுரவ செயலாளர் திரு. எஸ். சங்கர ராமன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 226-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - 17 Iடa டய சுட்ட நmபுநவச்சி e சபிழஙய் ஸ்ட 17 Iடa டய சுட்ட நmபுநவச்சி e சபிழஙய் ஸ்ட - ShareChat
தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவு குறித்து மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் சட்டமன்றப் பேரவையில் பேசினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - + + - ShareChat
"அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சாநெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது நினைவு நாள்! சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடுதலைப் போராட்ட உணர்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராம் கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும்!" என மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் தெரிவித்துள்ளார். #VeerapandiaKattabomman #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணேஷ் நகர் பகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் ரூ. 110.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 230/33 கி.வோ. வளிம காப்பு துணைமின் நிலையத்தை மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - LaLNA II ] J LaLNA II ] J - ShareChat
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணேஷ் நகரில், ஒருங்கிணைந்த கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுடன் மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் கலந்துரையாடி, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - Llll IIEIWTN ற்பாுத்தப்பட்டபா நச படு5 maspro [೫೫' 5೦೦ Llll IIEIWTN ற்பாுத்தப்பட்டபா நச படு5 maspro [೫೫' 5೦೦ - ShareChat
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணேஷ் நகரில், ஒருங்கிணைந்த கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் ரூ. 12 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - பேை குடிீம் , enf 4 ಹnumbnnic La ad a * U4_] ாசய மன்மிகு ழங்கும் ` @tprn" சயரகரம` Water  mart ATM Ve ^ பேை குடிீம் , enf 4 ಹnumbnnic La ad a * U4_] ாசய மன்மிகு ழங்கும் ` @tprn" சயரகரம` Water  mart ATM Ve ^ - ShareChat
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 5 வருடங்களில், ரூ. 2000 கோடி முதலீடு மற்றும் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரிலுள்ள ஹிட்டாச்சி குழுமத்தைச் சேர்ந்த ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - பிழ்ற அரசு TAMI] முதலமைச்சர் பிழ்ற அரசு TAMI] முதலமைச்சர் - ShareChat
"கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது. இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!" என மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் தெரிவித்துள்ளார். #KarurStampede #KarurTragedy #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat