
CMO Tamilnadu
@cmotamilnadu
Office of the Chief Minister of TamilNadu.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ஈரியூர் கிராமத்தில் L.P.G. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் அறிவித்துள்ளார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களை சந்தித்து, திராவிட இயக்கத்தின் வரலாற்றைச் பறைசாற்றும் அறிவுக் கருவூலமாக, தந்தை பெரியாரின் சிந்தனைகளையும், அறிவுச் செல்வத்தையும் எடுத்துரைக்கும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகனூரில் அமைக்கப்பட்டு வரும் 'பெரியார் உலகம்' பணிக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 1 கோடியே 70 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் என்று மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் சட்டமன்றப் பேரவையில் தெரிவித்து உரையாற்றினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
2025-26ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிப்பதற்கு முன்னதாக மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்களை மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் சந்தித்து, மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு அறிக்கையினை (SLAS -2025) (மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் மாவட்ட வாரியான மதிப்பாய்வுக் கூட்ட அறிக்கை) வழங்கினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்களை மாண்புமிகு பஞ்சாப் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எஸ்.ஹர்பஜன் சிங் மற்றும் மாண்புமிகு பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு. பிரேந்தர் குமார் கோயல் ஆகியோர் சந்தித்து, பஞ்சாப் மாநில அரசின் சார்பில் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஒன்பதாவது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தனிச் செயலாளர் மறைந்த திரு. கோ.சண்முகநாதன் அவர்களின் மனைவி திருமதி யோகம் சண்முகநாதன் அவர்கள் இயற்கை எய்தியதையொட்டி அவரது இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் நேரில் சென்று, உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களை அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் கவுரவ செயலாளர் திரு. எஸ். சங்கர ராமன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 226-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவு குறித்து மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் சட்டமன்றப் பேரவையில் பேசினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️