Barakath Ali
ShareChat
click to see wallet page
@653257576
653257576
Barakath Ali
@653257576
ஊடகவியலாளர், எழுத்தாளர்
ஜெயலலிதாவுக்கு அயோத்தி... எடப்பாடிக்கு திருப்பரங்குன்றம்! #ADMK #EPS #Jayalalithaa #BabriMasjid #அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #📱சிறப்பு வீடியோக்கள்🎦
அரசியல் - ShareChat
01:29
திருப்பரங்குன்றம் விஜய் Absent #tvk #TVKVijay #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #அரசியல்
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - ShareChat
00:24
பழைய பேப்பர்! அன்று அயோத்தி.. இன்று திருப்பரங்குன்றம்! இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். அதே நாளில், ’திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை’ எனச் சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். அயோத்தியில் என்ன நடந்தது? திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கரசேவைக்கு 1992 டிசம்பர் 6-ஆம் நாள் தேதி குறித்தன இந்துத்துவா அமைப்புகள். அது கரசேவை அல்ல. பாபர் மசூதியை இடிப்பதற்கான அஜண்டா என்பது, மசூதி இடித்துத் தள்ளப்பட்ட போது தெரிந்தது. கரசேவை பதற்றம் நாடு முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்த போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ’கரசேவை என்ற பெயரில் கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ள உத்தர பிரதேச அரசு அனுமதிக்கக் கூடாது என 1992 நம்பர் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால், அந்த உத்தரவுக்கு எந்த மதிப்பையும் அளிக்கவில்லை அன்றைக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு. கரசேவை தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ’அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டுமானப் பணிகள் எதையும் மேற் கொள்ள அனுமதிக்கமாட்டோம்’ என்று கல்யாண் சிங் அரசு உறுதிமொழி அளித்தது. ’அயோத்தியில் அரசு கையகப்படுத்தியுள்ள இடத்தில் டிசம்பர் 6-ஆம் தேதியன்று கரசேவை என்ற பெயரில் கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என்று கல்யாண் சிங் அரசு அளித்துள்ள உறுதிமொழியைத் தவறாமல் காப்பாற்ற நிர்வாக எந்திரத்தை முடுக்கி விட வேண்டும். அயோத்தியில் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மொராதாபாத் மாவட்ட நீதிபதி தேஜ் சங்கருக்கு தேவைப்படும் சகல வசதிகளையும் செய்துதர வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் எதையும் உத்தரப் பிரதேச பாஜக அரசு கண்டுகொள்ளவே இல்லை. அன்றைக்கு உத்தரப் பிரதேச அரசின் சார்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால். அவரிடம்தான் உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடாசலையா உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காததால் அன்றைக்கு பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அயோத்தியில் என்ன நடந்ததோ அதேதான் இன்றைக்கு திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது. அயோத்தி போல தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாது என தமிழ்நாடு அரசு சாதுர்யமாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. #😎வரலாற்றில் இன்று📰 #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல் #🤭அரசியல் மீம்ஸ்
😎வரலாற்றில் இன்று📰 - ShareChat
ஏலம் போன ஏர் இந்தியா ! ‘’ஹவாய் செருப்பு அணிந்த சாதாரண குடிமகனும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதே எனது கனவு’’ என்று குஜராத் சூரத்தில் புதிய விமான நிலையம் அடிக்கல் நாட்டும் விழாவில் 2019 ஜனவரி 30-ம் தேதி பேசினார் பிரதமர் மோடி. மோடி இப்படிப் பேசிய நேரத்தில் ஏர் இந்தியா என்கிற விமானச் சேவை இருந்தது. இப்போது சொந்தமாக ஒரு பயணிகள் விமானம் கூட இல்லாத அரசு என்கிற பெருமையைத் தேடித் தந்திருக்கிறார். டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 1953-ம் ஆண்டில் நேரு அரசு 2.8 கோடி ரூபாய்க்கு வாங்கி, அரசுடைமை ஆக்கியது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு அதே டாடா குழுமத்திடம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றது மோடி அரசு. பிறகு எப்படி ஹவாய் செருப்பு அணிந்த சாதாரண குடிமகனும் விமானத்தில் பயணிக்க முடியும். உக்ரைன் போரில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை உடனே மீட்க இந்தியாவுக்கு சொந்த விமானங்கள் ஒன்றுகூட இல்லை. 2023-ல் ஒடிசாவில் நடந்த கோரமான ரயில் விபத்தின் போது உறவினர்களை பார்க்க ஒடிசாவுக்குப் போனவர்களிடம் தனியார் விமானங்கள் கொள்ளை லாபம் பார்த்தன. அதே போன்ற கொள்ளை இப்போது நடந்து கொண்டிருக்கிறது. 4-ஆது நாளாக பல விமான நிலையங்களில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான கட்டணங்கள் விண்ணை தொட்டிருக்கின்றன. மும்பை-சென்னை 72 ஆயிரம் ரூபாய். சென்னை - கோவை 60 ஆயிரம் ரூபாய் கட்டணம். இப்போது முதல் பாராவை மீண்டும் படியுங்கள். #📺அரசியல் 360🔴 #🤭அரசியல் மீம்ஸ் #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️
📺அரசியல் 360🔴 - ShareChat
பழைய பேப்பர்! மதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த நாஞ்சில் சம்பத் 2012 டிசம்பர் 14-ஆம் தேதி திடீரென அன்றை முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். நாஞ்சில் சம்பத் அதிமுகவில் சேர்ந்த போது 250 மதிமுகவினரையும் அழைத்து வந்தார். அப்போது பேசிய ஜெயலலிதா, ‘’அதிமுகவில் சேர்ந்திருக்கும் உங்கள் நம்பிக்கை வீண் போகாது’’ என வாக்குறுதி கொடுத்தார். அந்த நம்பிக்கை என்ன ஆனது என்பதைச் சார்ந்தோர்கள் அறிவார்கள். அதிமுகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்திற்கு அதே நாளில் இனோவா காரையும் பரிசாகக் கொடுத்தார் ஜெயலலிதா. அதன் பிறகு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் நியமித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக பல அணிகளாக உடைந்தது. இருந்தபோதிலும் நாஞ்சில் சம்பத், சசிகலாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குப் போன பிறகு டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இடையில் ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பு நடந்தது. ஒரு கட்டத்தில் நாஞ்சில் சம்பத் ‘இனோவா’ சம்பத் எனக் கேலி செய்யப்பட்டார். ’அதிமுகவில் இல்லாத நாஞ்சில் சம்பத் கழகம் சார்பில் பிரசாரத்துக்காக வழங்கப்பட்ட இனோவா காரை திருப்பி அளிக்க வேண்டும்’ என்று அதிமுக சார்பில் கோரப்பட்டது. 2018 ஜனவரியில் இனோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார். இப்போது தவெகவில் சேரும் போது நாஞ்சில் சம்பத் யாரையும் அழைத்துச் செல்லவில்லை. அங்கே அவருக்கு உடனே காரும் கொடுக்கவில்லை. பிறகு கொடுப்பார்களோ என்னவோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ’’துப்புனா துடைச்சிக்குவேன்’’ என முன்பு ஒரு முறை அரசியல் இலக்கணம் சொன்னவர் நாஞ்சில் சம்பத். #NanjilSampath #tvk #TVKVijay #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
தமிழ்நாடு அரசியல் - ShareChat
*அதிமுகவும் பாபர் மசூதியும்!* இன்று பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்ட தினம். ''கரசேவைக்கு செல்லுங்கள் என்று கட்டளையிட்டவர் அம்மா’’ என சொன்னவர் கே.பி.முனுசாமி. ’திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, தேவையில்லாத ஒரு பதற்றத்தை திமுக உண்டாக்குகிறது’ என சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அன்று ஜெயலலிதா.. இன்று எடப்பாடி பழனிசாமி! #📺அரசியல் 360🔴 #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #😎வரலாற்றில் இன்று📰
📺அரசியல் 360🔴 - ShareChat
01:24
இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். அதே இடத்தில் ராமர் கோயிலும் கட்டி விட்டார்கள். ராமர் கோயிலுக்கும் அதிமுகவுக்கு தொடர்பு உண்டு. கரசேவைக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்ததோடு ’அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும்’ என்றும் சொன்னவர் ஜெயலலிதா. நேற்று ஜெயலலிதாவின் நினைவு நாள். அவரின் பராக்கிரமங்களை பட்டியல் போட்டவர்கள் கவனத்திற்காக.... #ADMK #Jayalalithaa #😎வரலாற்றில் இன்று📰 #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴
😎வரலாற்றில் இன்று📰 - அயோத்தியில் கரசேவை தொடங்க    ஜெயலலிதா itulh} மரசு ஆதரவு! தவசை திடச்சி ாரதீய ஜனதா  தலைவர் பாராட் அத்வானி அயோத்தியில் கரசேவை தொடங்க    ஜெயலலிதா itulh} மரசு ஆதரவு! தவசை திடச்சி ாரதீய ஜனதா  தலைவர் பாராட் அத்வானி - ShareChat
வாய் மூடி மெளனம் காத்ததை நாடே....! #TVKVijay #tvk #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #அரசியல்
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - ShareChat
00:22
தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத் #TVKVijay #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல் #தமிழ்நாடு அரசியல்
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - ShareChat
பழைய பேப்பர்! “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை கேட்க வேண்டும். ஆன்மீகத்தில் எந்த அரசியலும் செய்யக்கூடாது’’ என சொல்லியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். ’10.5 சதவிகிதம் வன்னியர் உள் இட ஒதுக்கீடு செல்லாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததே அதனை அப்படியே அன்புமணி ஏற்றுக்கொண்டாரா? Anbumani Ramadoss #PMK #AnbumaniRamadoss #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
🤭அரசியல் மீம்ஸ் - ShareChat