*ஊராட்சி செயலர் பணியிடங்கள் - அறிவிப்பாணை வெளியீடு*
கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியீடு. 1,450 பணியிடங்களுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம்
டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்த தமிழக அரசு திட்டம்
www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
#வேலை வாய்ப்பு
எத்தனை ஆயுதம் கொண்டு என் தேசத்தை அழித்தாலும் கல்வி என்ற ஆயுதத்தால் அதை மீட்டெடுப்பேன். யுனிசெப் முகாமில் கல்வியில் கவனமாக பாலஸ்தீன சிறுவன். Courtesy. Photo The Hindu.
#சிந்தனைக்கு #தெரிந்து கொள்வோம் #கல்வி
கோடியை நெருங்கும்....
ரூ.90,000 நெருங்கிய ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.11,200க்கு விற்பனையாகிறது.
#தெரிந்து கொள்வோம் #gold #மார்க்கெட் நிலவரம் #தங்கம்
தமிழக அரசு கேபிள் டிவியில் இருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கம்.கரூர் நிகழ்வைப் பற்றி செய்தி வெளியிட்டதற்காக தமிழக அரசு நடவடிக்கை
#தெரிந்து கொள்வோம் #அரசியல் #விஜய்
#பாஜக #அரசியல் #பாமக
மருத்துவர் ஐயா ராமதாசு அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் இணைந்து அப்போலோ மருத்துவமனையில் நேரில் சந்தித்து விரைவில் குணமடைய வாழ்த்திய போது.
உலகத்திலேயே முதல் பெரிய லிஃப்ட் முகேஷ் அம்பானி ஜியோ வேர்ல்ட் சென்டர் மும்பை
ஒரே நேரத்தில் 236 பேர் பயணம் செய்யலாம்
#தெரிந்து கொள்வோம்
*வரலாற்றில் இன்று*
அக்டோபர் 6
23 : சீனாவில் இடம்பெற்ற உழவர் கிளர்ச்சியை அடுத்து சின் பேரரசர் கிளர்ச்சிவாதிகளால் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1536 : பைபிளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்த வில்லியம் டிண்டேல் சூனியக்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்டு மரக் கம்பத்தில் கட்டி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.
1683 : வில்லியம் பென் தன்னுடன் 13 ஜெர்மனிக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்து வந்து குடியேறினார்.
இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய ஜெர்மனியர் ஆவர்.
1762 : ஏழாண்டுப் போர் :- பிரிட்டனுக்கும், ஸ்பெயினுக்கும் இடையே மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது.
1777 : அமெரிக்கப் புரட்சிப் போர் :- பிரிட்டன் படைகள் ஹட்சன் ஆற்றுப் பகுதியில் கிளிண்டன், மொண்ட்கோமரி கோட்டைகளைக் கைப்பற்றின.
1849 : ஹங்கேரி விடுதலைப் போரின் முடிவில் போராளிகள் 13 பேர் அராட் எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
1854 : இங்கிலாந்து, நியூகேஸில் மற்றும் கேர்ஸ்ஹெட் நகரங்களில் பரவிய பெருந்தீயில் 54 பேர் உயிரிழந்தனர்.
1860 : இந்திய பீனல் கோட் சட்டமாக்கப்பட்டது.
இச்சட்டம் 1862 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்தது.
இதில் செக்ஷன் 302ல் ஆயுள் தண்டனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1870 : ரோம் இத்தாலியின் தலைநகரானது.
1889 : தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.
தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் திரைப்படத்தைக் காண்பித்தார்.
1890 : யாழ்ப்பாணத்தில் சின்னக்கடை எனப்படும் முக்கியச் சந்தையில் கடைத் தொகுதி ஒன்று இடிந்து விழுந்ததில் சில உயிரிழப்புகளுடன் பலர் காயமடைந்தனர்.
1908 : ஆஸ்திரியா - ஹங்கேரி தன்னுடன் பொஸ்னியா ஹெர்ஸிகோவினாவை இணைத்துக் கொண்டது.
1915 : செர்பியா மீது ஆஸ்திரியா- ஜெர்மனி படையெடுத்தது.
1918 : அமெரிக்கக் கப்பல் ஒட்ரான்டோ, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து இடையே மூழ்கியதில் 425 பேர் உயிரிழந்தனர்.
1923 : முதலாம் உலகப்போர் :- இஸ்தான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.
1927 : உலகின் முதல் முழு நீளப் பேசும் படம் தி ஜாஸ் ஸிங்கர் நியூயார்க்கில் வெளியானது.
1938 : பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் படையுடன் ஏற்பட்ட மோதலில் 60 அரபுக்கள் கொல்லப்பட்டனர்.
1939 : இரண்டாம் உலகப் போர் :- போலந்தின் கடைசி ராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.
1943 : இரண்டாம் உலகப் போர் :- கிரீட்டில் பொதுமக்கள் 13 பேர் துணை ராணுவக் குழுக்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
1955 : வயோமிங்கில் டிசி - 4 விமானம் ஒன்று விழுந்ததில் 66 பேர் உயிரிழந்தனர்.
1966 : எல்எஸ்டி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
1972 : மெக்ஸிகோவில் யாத்திரிகர்கள் சென்ற ரயில் தடம் புரண்டதில் 208 பேர் உயிரிழந்தனர்.
1973 : 80,000 எகிப்து படையினர் சூயஸ் கால்வாயைக் கடந்து இஸ்ரேலிய பார் லேவ் கோட்டை அழித்து, யோம் கிப்பூர் போரை ஆரம்பித்தனர்.
1976 : தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் ராணுவத்தினரால் அடக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கியூபாவில் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் கியூபா விமானத்தை குண்டு வீசித் தாக்கியதில் 73 பேர் பலியானார்கள்.
சீனப் பிரதமர் நால்வர் குழுவையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.
1977 : மிக்-29 விமானம் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
1981 : எகிப்து ஜனாதிபதி அன்வர் சாதாத் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
1983 : பஞ்சாபில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
1987 : பிஜி குடியரசு நாடாகியது.
1995 : வேறொரு சூரியனை சுற்றி வரும் முதலாவது கோள் 51 பெகாசி பி கண்டுபிடிக்கப்பட்டது.
2008 : இலங்கையில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கை ராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
2010 : இன்ஸ்டாகிராம் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் விக்கிப்பீடியாவில் 25,000 கட்டுரை இலக்கு எட்டப்பட்டது.
2013 : எகிப்தில் நடந்த அரசியல் மோதல்களில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
#வரலாறு #தெரிந்து கொள்வோம்
_அறிவுடையோர் நட்பை_
_*அகத்தில் வை!*_
_நயவஞ்சகரின் நட்பை_
_*நகத்தில் வை!*_
_அறிவுசார் கருவூலத்தை_
_*இல்லத்தில் வை!*_
_பனித்துளியின் தூய்மையை_
_*உள்ளத்தில் வை!*_
_பாறையின் உறுதியை_ _*உடலினில் வை!*_
_எறும்பின் சுறுசுறுப்பை_
_*எண்ணத்தில் வை!*_
_மலர்களின் கணத்தை_
_*வார்த்தைகளில் வை!*_
_சிங்கத்தின் கம்பீரத்தை_ _*நடையில் வை!*_
_குதிரையின் நேர்மையை_
_*ஓட்டத்தில் வை!*_
_எதிரிகளை விடாமல்_ _*ஆட்டத்தில் வை!*_
_காக்கையின் பழக்கத்தை_
_*வழக்கத்தில் வை!*_
_தேனீயின் குணத்தை_ _*வாழ்க்கையில் வை!*_
_செய்யும் செயலை என்றும்_ _*சிந்தையில் வை!*_
#தெரிந்து கொள்வோம்
_வீறு கொண்டு_ _*எழுந்திடு !!*_
_வியர்வை_ _*சிந்தி உழைத்திடு !!*_
_தடைகளை_ _*நீ தாண்டிடு !!*_
_தவறுகளை_ _*நீ திருத்திடு !!*_
_கோபத்தை_ _*அழித்திடு !!*_
_கொள்கையை_ _*நீ வகுத்திடு !!*_
_காலத்தை_ _*நீ கணித்திடு !!*_
_கற்பனையை_ _*நீ வளர்த்திடு !!*_
_சோதனையை_ _*நீ தாங்கிடு !!*_
_சோர்வை_ _*நீ தவிர்த்திடு !!*_
_சிந்தித்து_ _*செயல்படு!!*_
_சிறப்பாய்_ _*நீ வாழ்ந்திடு !!*_
_உண்மைக்கு_ _*உதவிடு !!*_
_உதவிக்குத்_ _*தோள்கொடு !!*_
_பொறுமையில்_ _*உயர்ந்திடு !!*_
_பொறுப்பாய்_ _*உணர்த்திடு !!*_
_தாய் தந்தையை_ _*மதித்திடு !!*_
_தவறாமல்_ _*காத்திடு !!*_
_கடமையைச்_ _*செய்திடு !!*_
_உறுதியா_ _*உழைத்திடு !!*_
_உண்மையா_ _*உயர்ந்திடு !!*_
#தெரிந்து கொள்வோம்