முப்பத்து முக்கோடி முனிவர்களும் தேவர்களும் கிரிவலம் வரும் கார்த்திகை பௌர்ணமி சிறப்பு!
கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருநாள் மிகவும் விசேஷம். சிவபெருமான் அடி, முடி காண முடியாத அருட்பெருஞ்சோதியாக பிரம்மா மற்றும் மகாவிஷ்ணுவுக்கு காட்சி தந்த திருநாள். இந்நாளில் மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க புண்ணியங்கள் சேரும்.
நெருப்பு சொரூபமாகக் காட்சி தரும் இறைவன் ஈசனை இத்திருநாளில் கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பு. மற்ற தமிழ் மாதங்களில் வரும் பௌர்ணமியை விட கார்த்திகை மாத பௌர்ணமி அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முப்பத்து முக்கோடி முனிவர்களும் தேவர்களும் இன்று திருவண்ணாமலையை கிரிவலம் வருவதாக ஐதீகம். #🙏🏼ஓம் நமசிவாய