#📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢 #🙏நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை?🎒-
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி தினங்களை அடுத்த திரியோதசி திதியில் பிரதோஷ தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த நேரத்தில் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று டிசம்பர் 2ம் தேதி செவ்வாய் கிழமை பிரதோஷ தினத்தை தவற விடாதீங்க. செவ்வாய் கிழமையில் பிரதோஷ தினம் வருவதால் இந்த நாளில் சிவபெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். வளமான மேன்மையான வாழ்வு பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. அனைத்து பிரதோஷங்களும் சிறப்பு தான் என்றாலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
ஒருவர் தொடர்ந்து 11 பிரதோஷ நாளில் வழிபாடு செய்தால் துன்பங்கள் கரைந்து, எண்ணிய காரியம் ஈடேறும். இன்று செய்யும் சிவ வழிபாடு சூரியனின் அருளும், சிவ பெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும் என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள். அத்துடன் புகழ், பெருமை, மகிழ்ச்சி, அமைதி மற்றும் நீண்ட ஆயுளும் கூடும். ஜாதகத்தில் வரும் சூரிய தோஷம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
பிரதோஷ மந்திரம்:
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய!
நீலகண்ட்டாய சம்பவே!
அம்ருதேஸாய சரவாய!
மஹாதேவாய தே நமஹ!
இன்றைய தினம் முழுவதுமே உடல் எந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும் மனம் 'ஓம் நமசிவாய' என்ற எளிய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். இன்றைய தினம் விரதமிருந்து சிவனின் நினைப்பில் அவரின் நாமத்தை உச்சரித்து, மாலையில் சிவன் கோவில்களில் நடைபெறும் பிரதோஷ நிகழ்வுகளில் கலந்து கொண்டு நந்தி பகவானையும், சிவபெருமானையும் வழிபடுவது மிகவும் சிறப்பு. ஜாதகத்தில் சூரியனின் நிலை வலுப்பெற்று நல்ல ஆரோக்கியமும் செல்வமும் உண்டாகும்.
சிவபெருமானுக்கு உகந்த நாள் பிரதோஷ நாள். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, நமது கர்மவினைகள் நீங்கவும், நமது பிரார்த்தனைகள் நிறைவேறவும் வழிபாடு செய்திட மேன்மையான பலன்களை பெற முடியும்.
அந்த வகையில் செவ்வாய்கிழமையான இந்த பிரதோஷ நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு சிவபெருமான் உடனே செவி மடுக்கிறார் என்கின்றது சிவபுராணம். பிரதோஷத் தினத்தில் சிவ வழிபாடு செய்திட வாழ்வின் இன்னல்கள் நீங்கி சுபிட்சங்களை பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு.இன்றைய தினத்தில் சிவபெருமானுடன் நந்தியையும் தரிசித்து வில்வம் , அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இயன்ற அளவு வயிற்றுப் பசியால் வாடுபவர்களுக்கு அன்னமிடலாம்.பொதுவாக எல்லா பிரதோஷங்களும் தனி சக்தி வாய்ந்தவை
இந்த காலத்தில் தான் சிவன், நந்தியின் கொம்புகளுக்கிடையில் ஆடுகின்றார். இந்த நேரத்தில் அவரின் ஆனந்த தாண்டவத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் இந்த பிரதோஷ வேளையில் #இன்று செவ்வாய் பிரதோஷம்!🙏 #🙏👑📿🔥🙇🪔இன்று வளர்பிறை பிரதோஷம்🕉️🕎🕉️இனிய செவ்வாய் கிழமை காலை வணக்கம் ஓம் நமசிவாய🐍🔱☘️🐄🙏 #தை மாதம் 🕉️செவ்வாய் 🐄பிரதோஷம் #✡️தோஷ பரிகாரங்கள்
கும்பம்: வருமானம் அதிகரிக்கும், நிம்மதி ஏற்படும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். குறிப்பாகக் காதல் திருமணம் தடைபட்டிருந்தவர்களுக்குச் சாதகமான காலமாக இருக்கும்.
துலாம்: சவாலான சூழ்நிலைகளைச் சமாளிப்பீர்கள். திடீர் பண வரவுக்கான வாய்ப்புகள் உண்டு. சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளைத் துணிச்சலுடன் மேற்கொள்ளலாம்.
ரிஷபம்: இந்த மாதத்தில் நல்ல மாற்றங்களையும், புதிய வாய்ப்புக்களையும் எதிர்பார்க்கலாம். வேலையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நிதி நிலைமை சீராக இருக்கும்.
மற்ற ராசிகளுக்கான பொதுப்பலன்கள்:
மேஷம்: இந்த மாதம் உங்கள் படைப்பாற்றலும், சமூக தொடர்புகளும் அதிகரிக்கும். புதுமையான சிந்தனைகள் வேலையில் முன்னேற்றத்தைத் தரும். நிதி விஷயங்களில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்து, கவனமாகக் கையாள வேண்டும்.
மிதுனம்: விரோதிகள் குறையும் காலமாக இது இருக்கும். கடினமான சூழ்நிலைகளையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். முயற்சிகளில் லாபம் உண்டாக வாய்ப்புள்ளது. நிதி விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
கடகம்: இந்த மாதம் உணர்ச்சிப்பூர்வமான முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்: தொழில் ரீதியாகச் சாதகமான மாதமாக இது இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். நிதி வரவு திருப்தி அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வெளிப்படையாகப் பேசுங்கள்.
கன்னி: டிசம்பர் மாதம் ஒழுக்கம், பொறுப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்ததாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனைக் காண்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்: இந்த மாதம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு அல்லது வெளியூர் பயணங்களால் நன்மை உண்டு. தொழில் முதலீடுகளில் நிதானம் தேவை.
தனுசு : பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு இது சாதகமான மாதம். குடும்பத்தில் நிலவும் சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும்.
மகரம் : உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். இருப்பினும், மன அழுத்தத்தைக் குறைக்க யோகா அல்லது தியானம் செய்யலாம். நிதி வரவு சீராக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மீனம்: இந்த மாதம் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். புதிய வேலை தேடுபவர்களுக்குச் சாதகமான செய்திகள் வரலாம். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். முதலீடுகளில் நிதானமாகச் செயல்படுங்கள். #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔍ஜோதிட உலகம் 🌍 #✨தினசரி ராசிபலன்✡️ #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯
#இன்று பரணி 🔥🔥🔥 தீபம் #🙏🔥பரணி தீபம்🔥🙏 #🪔திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது💫 #மெர்சலான காட்சி #🙏ஆன்மீகம்
மூளைக்கு வேலை கொடுக்கும்' கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. சவால் நிறைந்த அத்தகைய கேள்வி, "பெண்களுக்கு குளித்த பின் எது சுருங்கிப் போகிறது?" இதன் சரியான விடை, கூந்தல் அல்லது பின்னல் (சடை) ஆகும். குளித்த பின் ஈரமான முடி காய்ந்து போகும்போது இயல்பாகவே சிறிது சுருங்கி அல்லது சிறியதாகத் தோன்றும்.
இந்த வகையான கேள்விகள் யுபிஎஸ்சி (UPSC) அல்லது ஐஏஎஸ் (IAS) நேர்காணல்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் விரைந்து முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த உதவுகின்றன. இந்த வினாடி வினாவில், "எது நமக்கு ஒருமுறை இலவசமாகக் கிடைக்கிறது, ஆனால் இரண்டாவது முறை இல்லை?" என்ற கேள்விக்கு விடை: பற்கள், மற்றும் "நாம் ஏன் தண்ணீர் குடிக்கிறோம்?" என்ற கேள்விக்கு விடை: ஏனெனில் அதை சாப்பிடவோ அல்லது மெல்லவோ முடியாது. இது தவிர, "மனிதன் இறந்த பிறகும் செய்யக்கூடிய வேலை என்ன?" என்ற கேள்விக்கு விடை: உறுப்பு தானம் ஆகும். இத்தகைய கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தெரிந்துகொள்வது உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது #புரியாத புதிர்🌷 #மூளைக்கு வேலை கொடு #இன்றைய சிந்தனை
இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தீப ஒளியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் ஒரு பண்டிகையாகும். சிவன் மற்றும் திருமால் இருவருக்கு இடையே யார் பெரியவர் என்கிற சர்ச்சை ஏற்பட்டபோது சிவன் ஜோதிப் பிழம்பாக நின்ற நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீப ஒளியானது நம் வாழ்வில் உள்ள இருளை நீக்கி, ஞானம் மற்றும் செல்வத்தை கொண்டு வரும் என்கிற நம்பிக்கையுடன் இந்த பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்த்திகை தீபம் 2025 தேதி மற்றும் நேரம்
குறிப்பாக தமிழ்நாட்டில் இது சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த ஆண்டு கிருத்திகை நட்சத்திரம் டிசம்பர் 3 மாலை 04:48 மணிக்கு தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 03:08 வரை நீடிக்கிறது. எனவே தீபம் ஏற்றுவதற்கு டிசம்பர் 3 ஆம் தேதி மாலை 6:00 மணி என்பது பொருத்தமான நேரமாகும். சில பஞ்சாங்கங்களின்படி கார்த்திகை நட்சத்திரம் நீடிப்பதன் அடிப்படையில் டிசம்பர் 4 வியாழக்கிழமை அன்றும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது டிசம்பர் 3 என்பதால் இந்த நாளே தீபத்திருநாள் கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும்.
கார்த்திகை தீபம் வழிபாட்டு முறைகள்
திருக்கார்த்திகை தினத்தன்று காலையில் நீராடி, உபவாசம் இருந்து மாலையில் தீபம் ஏற்றிய பிறகு உணவருந்துவது சிறந்தது. நாள் முழுவதும் சிவபெருமான் அல்லது முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்கலாம். பொதுவாக மாலை வேளையில் சூரியன் மறைந்த பின்னர் ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் தீபம் ஏற்றுவது உகந்தது. திருவண்ணாமலைகில் தீபம் ஏற்றிய பிறகு நம் வீடுகளில் தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றிய பின்னர் முருகப் பெருமான் விநாயகரை மனதார வழிபடலாம். கந்த சஷ்டி கவசம், சிவபுராணம் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடுவது சிறந்தது. பொரி உருண்டை, அப்பம், அவல், பாயாசம் போன்றவற்றை தயார் செய்து இறைவனுக்குப் படைத்து குடும்பத்தாருக்கும், அண்டை வீட்டாருக்கும் கொடுக்கலாம்.
தீப தினத்தன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
கார்த்திகை தினத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வண்ணம் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றலாம். தீபம் ஏற்றுவதற்கு அகல் விளக்குகள் மிகவும் சிறந்தது. கடைகளில் கிடைக்கும் செயற்கையான விளக்குகளை விடுத்து, மண் விளக்குகளை வாங்கி அதை சுத்தம் செய்ய வேண்டும். முதல் நாளே விளக்குகளை வாங்கி வந்து அதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் சுத்தப்படுத்தி காயவிட வேண்டும். பின்னர் அவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நல்லெண்ணெய் தீபமிட்டு வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றலாம். சமையலறை, படுக்கையறை, மொட்டை மாடி, நிலை வாசல் என்று அனைத்து இடங்களிலும் தீபம் வைக்க வேண்டும்.
விளக்கேற்றும் முறை
தீபத்திருநாளன்று இத்தனை விளக்குகள் தான் ஏற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உங்களால் எத்தனை தீபம் ஏற்ற முடியுமோ அத்தனை தீபங்கள் ஏற்றலாம். பூஜை அறை, வாசல், கொல்லைப்புறம், துளசி மாடம், ஜன்னல்கள் என அனைத்து இடங்களிலும் 5,7,9,11 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தீபம் ஏற்றலாம். வாசலின் இருபுறமும் தலா ஒன்று, வீட்டின் நடுப்பகுதியில் ஒன்று, துளசி மாடத்தில் ஒன்று, பூஜை அறையில் மூன்று அல்லது ஐந்து தீபங்கள் ஏற்றுவது சிறப்பு. அனைத்து தீபத்திற்கும் நெய் இட முடியாதவர்கள் ஒன்று அல்லது இரண்டு தீபங்களுக்கு மட்டும் நெய்யை பயன்படுத்தலாம். விளக்கிற்கு அடியில் வாழை இலை, பூவரச இலை அல்லது தட்டு போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது.
அறுகோண தீபம்
கிருத்திகை நட்சத்திரம் என்பது முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் என்பதால் அறுகோண தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படும் காட்சியை பார்த்து முடித்த பின்னர் வீட்டு வாசலில் நட்சத்திரம் வரைந்து அதன் ஆறு முனைகளிலும் அறுகோண தீபம் ஏற்றி 'சரவணபவ' என்று எழுதி வழிபடலாம். அறுகோண தீபம் ஏற்றி வழிபடுவது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும், திருமணமாகாதவர்களுக்கு திருமண வரத்தையும் நல்கும் என்று கூறப்படுகிறது.
இறைவனின் அருளைப் பெறுங்கள்.!
வீட்டில் பூஜைகளை முடித்த பின்னர் கோயில்களில் நடக்கும் திருக்கார்த்திகை சிறப்பு பூஜைகளிலும், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளலாம். சொக்கப்பனை நிகழ்வு என்பது இறைவன் மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் வாழும் நாய், பூனை போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் மோட்ச பாதை கிடைக்க வேண்டும் என்று இறைவன் காட்டும் ஒளிப் பாதையை குறிக்கும் நிகழ்வாகும். இந்த புனித நாளில் முறையாக விரதம் இருந்து தீபமேற்றி வழிபட்டு இறைவன் அருளை முழுமையாகப் பெறுங்கள். #🪔திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது💫 #இன்று பரணி 🔥🔥🔥 தீபம் #🙏🔥பரணி தீபம்🔥🙏 #🙏ஏகாதசி🕉️ #🙏ஆன்மீகம்
சுயநலமில்லாமல்
காட்டில் வாழும்
சக மிருகங்களையும்
காப்பாற்றும்
யானையின் பற்று...😍😍😍 #மனிதர்களை மிஞ்சும் விலங்குகளின் பாசம் #விலங்குகளின் பாசம் 🐒 #அருமையான வீடியோ #மெர்சலான காட்சி
நமக்கு ஒரு பாடம்.
வெள்ளம் எல்லாவற்றையும் அழித்தாலும், அன்பு மட்டும் அழியவில்லை என்று நிரூபிக்கும் காட்சி இது. 🐘❤️
நாய் மற்றும் மானைக் காப்பாற்றிய இந்த யானையின் கருணை
நமக்கு ஒரு பாடம்.
பேரழிவின் போதும், சாதாரண நாட்களிலும் நாமெல்லோரும் மனிதர்களாக ஒன்றுபட்டு, இரக்கத்தோடு இருப்போம்!
அன்பே பலம், ஒற்றுமையே வாழ்வு! 💪🙏
#மனிதர்களை மிஞ்சும் விலங்குகளின் பாசம் #விலங்குகளின் பாசம் 🐒 #அருமையான வீடியோ #மெர்சலான காட்சி #📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢
Rescued by elephant ❤❤
இறைவனின் படைப்பு ஆகச்சிறந்தது ❤❤❤ #மனிதர்களை மிஞ்சும் விலங்குகளின் பாசம் #விலங்குகளின் பாசம் 🐒 #அருமையான வீடியோ #மெர்சலான காட்சி
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (40) என்பவருக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேய் ஓட்டுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பேய் விரட்ட தனது மகள், மகனை அழைத்து கொண்டு பிரியா 3 பேரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் யாருக்கும் சொல்லாமல் புறப்பட்டு சென்றுள்ளனர்.
பேய் விரட்ட சென்ற பெண்
அப்போது அங்கு பேய் விரட்ட சென்ற இடத்தில் அங்கேயே தங்கி பேய் விரட்டி அடிக்க கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கேயே 3 பேரும் தங்கி உள்ளனர். கோவில் வளாகத்தில் முடி சடை போட்ட போலி சாமியாடி பெண் ஒருவர் சந்தேகப்படும் படி நடந்து கொண்டதாக தெரிகிறது. பிரியாவின் மகள் கல்லூரி படிப்பதால் நம்மை கடத்தி விடுவார்கள் என்று எண்ணி அந்த கோவில் வளாகத்தை விட்டு புறப்பட்டு செல்ல முடிவு செய்துள்ளார்.
மூன்று நாட்களாக காட்டில் தவிப்பு
அப்போது 3 பேரும் இடம் மாறி மாறி சென்ற போதும் அந்த சடை பின்னல் போட்ட பெண் சாமியாடி பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி தனது தாய் பிரியா மற்றும் 14 வயது தம்பியை அழைத்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளார். ஓட்டம் பிடித்ததில் 3 பேரும் புதுப்பாளையம் பகுதியில் உள்ள காட்டுக்குள் சென்றுள்ளனர். 3 பேரும் 2 இரவு 3 பகல் காட்டுக்குள்ளேயே நடந்து நடந்து ஓடையில் ஓடிய தண்ணீரை குடித்து ஓடை வழியாக ஓடி உள்ளனர். இந்த நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள பிரியாவின் கணவர் புகழேந்தி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் காணவில்லை என்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் தேட ஆரம்பித்து உள்ளனர்.
மாடு மேய்க்க சென்ற நபர் அதிர்ச்சி
இந்நிலையில், காட்டுக்குள் எவ்வித தொடர்பு சாதனமும் இல்லாத 3 பேரும் மிகுந்த பசியில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் காட்டுக்குள் சுற்றிய களைப்பில் ஆற்று ஓடை அருகே அமர்ந்து, “யாராவது இருக்கீங்களா காப்பாத்துங்க” என்று சிறுவன் கத்தி சத்தம் போட்டு உள்ளான். அப்போது அங்கு மாடு மேய்க்க சென்ற ஒரு நபர் 3 பேரையும் கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களுக்கு உடை கொடுத்து, காலணி கொடுத்து நடந்ததை கேட்டு அறிந்து அருகில் உள்ள புதுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் புதுப்பாளையம் போலீசார் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்து அங்கு சென்ற ஜோலார்பேட்டை போலீசார் 3 பேரையும் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு சென்ற 3 பேரும் திடீர் என்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காட்டில் நடந்த காரணத்தினால் கால்களில் காயத்துடன் கல்லூரி மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வீடியோ எடுப்பது செய்தியாளர் என்று அறிந்து கொண்டு மேற்கொண்டு எவ்வித தகவலும் அளிக்க மறுத்து விட்டனர். தாய் மற்றும் பிள்ளைகள் பேய் ஓட்டுவதற்கு சென்று காட்டுக்குள் ஓடி வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢










