ShareChat
click to see wallet page
#✍️கவிதை📜 #✍️தமிழ் மன்றம் #அம்மன் #ஆடி வெள்ளி அம்மன் பக்தி பாடல்🙏🙏🙏 #👉வாழ்க்கை பாடங்கள் கருணை நிறைந்தவளே கண்ணீரோடு நிற்கிறேன் கருமாரி அம்மா கவலை தீருமா காலையும் மாலையும் உன்பாதம் பணிந்தேன் காலமெல்லாம் உம்மருள் உயிரையும் தேற்றுமா வரமும் கேட்டு உம்மாலயம் வந்தேன் வந்து விடும் உம்மருள் கொடுத்திடும் கரம்பற்ற வருவாயா ஆறுதல் தருவாயா கம்பம் மாரியம்மா ஆதிசக்தி தேவியம்மா சிறுபிள்ளை நானம்மா அன்பாய் அனைத்துமருளும் சிந்தையில் நித்தம் அனுதினமும் ஆட்கொள்ளும் கண்ணனூர் மாரியம்மா திருவருள் நல்கிடும் கன்னியம்மா நெஞ்சோடு தினமும் அரவணைத்திடும் கருவிலே தேர்ந்தெடுத்து என்னைச் சுமந்தவளே கதிரொளியாய் பொன்போல் என்றென்றும் காப்பவளே புன்னைநல்லூர் மாரியம்மா உம்புகழைப் புனைந்தெழுதுவேன் புண்ணியம் தருவாய் உணர்வோடு நினைந்தெழுவேன் மீனாட்சி அம்மா நல்குவாய் நல்வாழ்வும் மீண்டும் மீண்டும் நல்வழியில் நடத்துவாய் தீமையும் விலக்கிடும் நன்மையும் விளைத்திடும் தீயோர் பொல்லோர் நட்பும் அகற்றும் இனியமொழி தமிழ்மொழி தாய்மொழி உயிர்மொழி இன்பமும் பெருகும் தாகமும் தணிக்கும் மண்ணில் வாழும் கலங்கமில்லா கனிமொழி மலர்ந்து மணம்வீசும் கற்கண்டாய் தித்திக்கும் அமுதே தமிழே என்னுயிர் தேன்மொழி அறத்தினில் தடையின்றி எண்ணத்தில் தவழும் தளராத ஆற்றல் வீறுகொண்டு எழும்பும் தமிழன்னை நீஉடனிருக்க வீழ்ச்சியே இல்லை கோட்டை மாரியம்மா பணிந்து தாழ்கிறேன் கோடிக்கண்கள் உடையவளே பராசக்தி மாரியம்மா மொழிகளுக்கு மூத்தவளே ஆதியந்தமும் நீயே மொழியும் பண்பாடும் ஆய்ந்தெடுத்து காத்தருளும் அகத்தில் அருளொளி மிளிர்ந்து பெருகட்டும் அடியேன் திருவாழ்வும் மின்னலாய் பாயட்டும் சுடர்வீசும் பேரொளி தமிழால் உருவாக்கும் சுழலும் பூமியில் தமிழ்மொழி வாழட்டும் மேன்மை ஒளியும் திசையெங்கும் பெருகட்டும் மேலும் மேலும் தினமும் ஒலிக்கட்டும் தீந்தமிழே என்னுள் மனவலிமை தாரும் தீப்பொறியும் தீப்பிழம்பும் மனதில் வளரட்டும் மணிமுடி சூட்டிமகிழ பணிந்து வந்தேன் மகிழ்ச்சி பொங்க பரிவட்டம் சூட்டுவேன் ஆலயம் அமைத்து நீதியும் உரைப்போம் ஆதிக்குடி தமிழ்க்குடி நீயாழ இணைவோம் #தமிழ்தாசன்
✍️கவிதை📜 - ShareChat

More like this