ShareChat
click to see wallet page
ஆர்கானிக் விவசாயி நேற்றைய கோவை மேடையில் நம் பிரதமருக்கு ஆர்கானிக் விவசாயி வேடம். இஸ்ரோவில் பணியாற்றிய விஞ்ஞானி, மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றவர்.. எல்லோரும் இயற்கை வேளாண்மைக்கு வருகிறார்கள். நீங்களும் இயற்கை விவசாயத்துக்கு வாருங்கள்! அழைக்கிறார் பிரதமர் மோடி. மோடி ஒன்றை ஆதரித்தாலே நமக்கு சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. மோடியே ஓர் ஆர்கானிக் அரசியல்வாதி இல்லை. வாட்சிலிருந்து கோட் வரை எதுவும் சுதேசி இல்லை. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமும் ஆர்கானிக் இல்லை. நாஜிஸம், ஃபாஸிஸம் போன்றவற்றுக்குப் பிறந்த கலப்பினத் தத்துவம். ஆர்கானிக் என்பது இப்போது ஒரு எலைட் வழக்காகிவிட்டது. சாவது என்றால்கூட நாட்டுத் துப்பாக்கியால்தான் சுடவேண்டும்! என்பார்களா, என்ன? என் சிறுவயதில் பெரும்பாலானோர்க்கு அரிசி சோறு கிடைக்கவில்லை. பசி தேசிய சொத்தாக இருந்தது. விவசாயப் புரட்சி எதிர்மறையான விளைவுகளைத் தோற்றுவித்த போதது, அதேவேளை, அரிசி, கோதுமை பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். பசி எனும் நோய் இன்று கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இந்த இயற்கை வேளாண்மையின் கதை என்ன? மளிகை கடையில் கிடைக்கிற பொன்னி அரிசி கி 40 ரூபாய் என்றால், ஆர்கானிக் பொன்னி கி 100 ரூ என்கிறார்கள். இப்போது கம்பு, கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியங்கள் பணக்காரர்களின் உணவாகிவிட்டது. இந்தியாவில் 2% மட்டுமே இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. இந்தச் சூழலில் நாட்டு கத்திரிக்காய், நாட்டு சுரைக்காய், நாட்டு சர்க்கரை, என தம்மை உயர்தட்டாக காட்டிக் கொள்பவர்களின் ஆர்கானிக் அலப்பறை தாங்க முடியவில்லை. அம்மாவை மறந்தவர்கள். அம்மா கை பக்குவத்தில் எழும் ஹைவே சொகுசு உணவு விடுதிகளில் கூடுகிறார்கள். ஒரு பக்கம், விவசாயத்தில் நியூட்ரியன், மொசைக், ஹைஃபா, யாரா போன்ற பன்னாட்டு உர கம்பெனிகள், இஃப்கோ, என்எஃப்எல், சம்பல், கோரமண்டல் போன்ற உள்நாட்டு உரக் கம்பெனிகளின் ஆதிக்கம். விவசாயிகளுக்கு மான்யம் தர மறுக்கும் ஒன்றிய அரசு, இத்தகைய உரக் கம்பெனிகளுக்கு லட்சம் கோடிகளில் மானியத்தை அள்ளி இறைக்கிறது. உரம் பூச்சி மருந்து விலை உயர்வால் தூக்கில் தொங்குகிறார்கள் விவசாயிகள். அவர்களிடம் பஞ்சகவ்யம் , ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் தயாரி ! என்கிறார் பிரதமர். ஒரு கிலோ பொட்டாஷை விட ஒரு கிலோ சாணம் விலை அதிமானது, எதனால்? உள்ளூர் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் WTO ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டே, இயற்கை விவசாயம் செய்வோம், மண்ணைக் காப்போம் , என ஓவராக பிரதமர் உணர்ச்சி வயப்படுகிறார். நேற்று சிங்கிள் பசங்க ஷோவில் ' பாரத தேசத்தை உலக அரங்கில் முதல் இடத்துக்கு அழைத்துச் செல்ல எந்த தியாகமும் செய்வேன்' என்கிறார் நம்ம கூமாப்பட்டியான். உணர்ச்சி வயப்பட்ட டிஆர், கிளிசரின் இல்லாமல் கண்ணீர் உகுக்கிறார். கூமாப்பட்டியான், டிஆர், பிரதமர் மோடி, இப்படி எல்லோரும் சீரியஸாகும்போது நமக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. #மூதிகள் #நரசங்கிகள் நாரசங்கிகள் சாணிஉருண்டைகள்
மூதிகள் - ShareChat

More like this