திருச்சூர் அருகே முண்டூரைச் சேர்ந்த தங்கமணி (70), ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது வீட்டின் பின்புறப்பகுதியில் மர்மமான நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். முகத்தில் காயங்கள் இருந்ததால், அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் ஆரம்பத்தில் சந்தேகித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனையில், தங்கமணி கொலை செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்திய போது, தங்கமணி எப்போதும் அணிந்து வரும் தங்கச் சங்கிலி சம்பவம் நடந்த போது காணப்படவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து தங்கமணியின் மகள் சந்தியா (45) மீது போலீசார் சந்தேகத்தைத் திருப்பினர்.ஸவிசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன:
கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வந்த சந்தியா, அதே பகுதியைச் சேர்ந்த நிதின் (29) என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். நிதினுக்கு ஏற்பட்ட பணத் தேவையை பூர்த்தி செய்ய, சந்தியா தாயிடம் தங்கச் சங்கிலியை கேட்டுள்ளார்.
தங்கமணி இதற்கு மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்தியா, தாயின் கழுத்தைப் பிடித்து நெரித்து தள்ளியதால் தங்கமணி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை விபத்து போல காட்ட சந்தியாவும் நிதினும் சேர்ந்து திட்டமிட்டு அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் #🔴இன்றைய முக்கிய செய்திகள் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺நவம்பர் 26 முக்கிய தகவல் 📢

